Ravi Mohan: ரவி மோகனை மயக்க.. "அந்த மருந்து" கொடுத்தாராம் கெனிஷா! நடிகை சார்மிளா குற்றச்சாட்டு
சென்னை: நடிகர் ரவி மோகனுக்கு மயக்க மருந்து கொடுத்து கெனிஷா மயக்கியிருப்பதாக நடிகை சார்மிளா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து வாவ் தமிழாவில் நடிகை சார்மிளா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜெயம் ரவி விவகாரம் தொடங்கிய போது சுசித்ரா, கெனிஷாவை திட்டி ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அது ஒன்றரை மணி நேரம் மட்டும்தான் இருந்தது. அதாவது கெனிஷா முறையான தெரபிஸ்ட் கிடையாது. அவர் ஜெயம் ரவிக்கு மாத்திரை கொடுத்து மயக்கம் செய்திருக்கிறார்கள்.

ஜெயம் ரவியினுடையது காதல் கிடையாது. காதல் என்பது திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் செய்வதுதான். முதல் மரியாதை படத்தில் சிவாஜி சார் ராதாவை தேடி போவதுபோல்தான் எனக்கு ஆர்த்தி தெரிந்தார். இருப்பதிலேயே சாப்ட்டான பாவமான கேரக்டர்.
இரு குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஆர்த்தி எத்தனை கஷ்டப்பட்டிருப்பார். பிரசவ வலியை அனுபவித்திருப்பார்கள். அந்த குழந்தைகளை படிக்க வைப்பது என எல்லாத்தையும் எடுத்து செய்யக் கூடிய ஒரு மனைவிதான் ஆர்த்தி. அது மட்டுமல்லாமல் ஜெயம் ரவிதான் மாமியார் சுஜாதாவிடம் படம் தயாரிக்குமாறு கேட்டிருந்தார்.
அதற்கு அவர் நினைத்திருந்தால் வேறு ஹீரோவை போட்டிருந்திருக்கலாம். ஆனால் மாப்பிள்ளை முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அவ்வாறு செய்தார். அதற்கு சுஜாதா, தனக்கு காசு கொடுக்கவில்லை என ஜெயம் ரவி சொன்னது முற்றிலும் பொய். இவ்வாறு சார்மிளா தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த ஆண்டு அறிவித்துள்ளார். இதை ஆர்த்தி ஒப்புக் கொள்ளாத நிலையிலும் ரவி மோகன் கோர்ட் படிகளை ஏறிவிட்டார். இந்த நிலையில் ஆர்த்தி ரவி தனது குழந்தைகளுக்காக அவருடன் சேர்ந்து வாழ்வதாக அறிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் ஜெயம் ரவியோ, ஆர்த்தி ரவி தனது உயிருள்ள வரை முன்னாள் மனைவிதான். எனது குழந்தைகளை கூட பார்க்கவிடாமல் போகும் இடத்திற்கெல்லாம் பவுன்சர்களை கொண்டு தடுப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் தனது குழந்தை விபத்தில் சிக்கிய போதுகூட மூன்றாவது நபர் சொல்லியே தனக்கு தெரியவந்ததாகவும் ரவி மோகன் தெரிவித்தார். மேலும் கெனிஷா தனக்கு வாழ்வில் ஒளி என அவர் குறிப்பிட்டு, என்னால் அவருக்கு நற்பெயர் ஏற்படாது. மேலும் தன்னை வெறுங்கையுடன் வீட்டைவிட்டு ஆர்த்தி வெளியேற்றினார்.
தான் சம்பாதித்த பணத்தில் தனது பெற்றோரை தவிர ஆர்த்தியும் அவருடைய குடும்பத்தினரும் அனுபவித்ததாகவும் ரவி மோகன் தெரிவித்திருந்தார். இதனிடையே கெனிஷாவும் ரவி மோகனும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் ஆர்த்தி ரவியின் அம்மா சுஜாதா வெளியிட்ட அறிக்கையில், எனது பேரன்களுக்காக மகளும் மருமகனும் ஒன்று சேர வேண்டும். ரவி மோகனை வைத்து படம் எடுத்ததற்காக ரூ. 100 கோடிக்கான வட்டியை நான் கட்டி வருகிறேன் என சுஜாதா தெரிவித்திருந்தார்.
அது போல் ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையில், வாழ்வின் ஒளி எனும் மூன்றாம் நபரால்தான் எங்கள் வாழ்க்கை இருளில் சென்றுவிட்டது. வெறுங்கையோடு ரவி மோகன் செல்லவில்லை. திட்டமிட்டு பணம், ஆவணங்கள், ரூ. 5 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரில்தான் சென்றார். அது போல் விலை உயர்ந்த ஆடைகளையும் ஷூக்களையும் அணிந்துதான் சென்றார் என ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது பராமரிப்பு செலவாக மாதம் ரூ 40 லட்சத்தை ரவி மோகன் கொடுக்க வேண்டும் என ஆர்த்தி ரவி கேட்டிருந்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications