புது மனைவியுடன் பெங்களூரில் தேனிலவு! அதிர்ச்சி அடைந்த நடிகர் சந்திரபாபு! மனதை கல்லாக்கி செய்த செயல்
சென்னை: சந்திரபாபுவின் திருமண வாழ்க்கையில் நடந்ததைதான் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் அந்த 7 நாட்கள் திரைப்படமாக எடுத்தார் என சொல்லப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் நடிகர் சந்திரபாபு. இவர் காமெடியனாக பல படங்களில் அறிமுகமானார். அத்துடன் பாடல்களை நன்றாக பாடுவார். குங்கும பூவே கொஞ்சு புறாவே.. பிறக்கும் போதும் அழுகின்றான் உள்ளிட்ட பாடல்களை சந்திரபாபு பாடியுள்ளார்.

இவருக்கு இசை, ஓவியம், இயக்குநர், சிற்பம் அமைப்பது என அனைத்து திறமைகளையும் தன்னகத்தே வைத்திருப்பவர். இவருடைய தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகியாவார். இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்.
நடிகர் நாகேஷுக்கு தனி பாணி என்றால் சந்திரபாபுவுக்கும் தனி பாணி. டாப் ஹீரோக்களான எம்ஜிஆர், சிவாஜிக்கு நிகராக போற்றப்பட்டவர் சந்திரபாபு. அவர்களை விட அதிக சம்பளத்தையும் இவர் பெற்றிருந்தார். இவர் கவலை இல்லாத மனிதன், குமாரராஜா உள்ளிட்ட படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை.
அதனால் மீண்டும் அவர் காமெடி டிராக்கிற்கே சென்றார். புகழின் உச்சத்தில் இருந்த சந்திரபாபு 47 வயதில் காலமாகிவிட்டார். இந்த நிலையில் அவருடைய திருமண வாழ்க்கை குறித்து தற்போது சமூகவலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 1958 ஆம் ஆண்டு சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒரு காதலன் இருப்பதை அறிந்த சந்திரபாபு தனது மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கதையை மையமாக வைத்துத் தான் நடிகர் பாக்யராஜின் இயக்கத்தில் அந்த 7 நாட்கள் படம் உருவானது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் உண்மையில்லை என்கிறார்கள்.
திருமணம் முடிந்ததும் பெங்களூருக்கு மனைவியை அழைத்து கொண்டு சந்திரபாபு தேனிலவுக்கு சென்றார். அங்கு மனைவி சந்தோஷமாக இல்லை என்பதை அறிந்த சந்திரபாபு, பழைய காதலனின் நினைவில் இருக்கிறார் என புரிந்து கொண்டு அவர் காதலனுடன் சேரட்டும் என அவரை விட்டு பிரிந்துவிட்டார். பின்னர் அவருடைய மனைவி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார்.

மனைவிய பிரிந்தாலும் அவருக்கு சந்திரபாபு நிறைய உதவிகளை செய்துள்ளாராம். இதையடுத்துதான் சந்திரபாபு மதுவுக்கு அடிமையாகியுள்ளார். அவர் சில படங்களை இயக்கிய நிலையில் அவை பெரிதாக கைகொடுக்காததால் கடன் தொல்லை ஏற்பட்டு அவருடைய வீடு ஜப்தி செய்யப்பட்டது. இதனால் சந்திரபாபு நிலைகுலைந்தார். 1974 இல் சந்திரபாபு காலமானார் என்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications