ரிதன்யாவிடம் லாஸ்ட்டா பேசினது இவரா? 35 நிமிடத்தில் இவ்வளவும் நடந்ததா? அந்த டப்பா எங்கே: அதிகாரி பரபர
சென்னை: 35 நிமிடத்தில் ரிதன்யா மனம் மாறியது எப்படி? ரிதன்யாவிடம் கடைசியாக பேசியது யார்? இறந்துவிடலாம் என்ற எண்ணம் எப்போது தோன்றியது? ரிதன்யாவுக்கு பூச்சி மருந்து எப்படி கிடைத்தது? என்பது குறித்த சந்தேகங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.. இந்நிலையில், முன்னாள் சிபிஐ அதிகாரி மோகன் ராஜ், பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.. அதன் சுருக்கத்தை இங்கே பார்க்கலாம்.
2nd Floor Tamil என்ற யூடியூப் சேனலுக்கு முன்னாள் சிபிஐ அதிகாரி மோகன் ராஜ் பிரத்யேக பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில் அவர் சொல்லும்போது "தற்கொலை முடிவு என்பது, அந்த கன நேரத்தில் எடுக்கக்கூடியது.. திருமணமாகி 78 நாட்களாகவே, தன்னுடைய தாய் வீட்டிற்கு பிரச்சனைகளை சொல்ல பலமுறை ரிதன்யா சென்றிருக்கிறார்..

அதுபோன்ற நேரங்களில்கூட, வீட்டிலிருந்த பூச்சி மருந்தை ரிதன்யா எடுத்து வைத்திருக்கலாம் என்று நினைக்கப்பட்டது. ஆனால், தங்கள் வீட்டில் ரசாயன மருந்து எதுவுமில்லை என்றும், தாங்கள் நிலத்திற்கு எப்போதுமே இயற்கை ரசாயனத்தையே பயன்படுத்துகிறோம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.. அப்படியானால், வீட்டுக்கும், கோயிலுக்குமான இடைவெளியில், பூச்சிமருந்து எப்படி கிடைத்திருக்கும்?
கடைசியாக பேசியது யாரிடம்
இதுபோன்ற சாலையில் சிசிடிவி கேமரா இருக்க வாய்ப்பில்லை.. கடைசியாக யாரிடம் பேசினார் என்பதைத்தான் ஆராய வேண்டியிருக்கிறது.. அதேபோல, முன்தினம் இரவுகூட தன்னுடைய அம்மாவிடம் கஷ்டத்தை சொல்லியிருக்கிறார் ரிதன்யா.. அந்த நேரத்திலாவது, "நம்ம வீட்டுக்கு கிளம்பி வந்துடும்மா" என்று ரிதன்யாவிடம், சொல்லாமல் விட்டுள்ளனர்.
போஸ்ட் மார்ட்டம் முடிந்ததுமே, தடயவியல் லேப்-க்கு அனுப்பி வைப்பார்கள்.. அங்கே இதற்கென தனி டீம் உள்ளது.. அது எந்தமாதிரியான விஷம்? எப்படி தாக்கியிருக்கும்? அல்லது சாப்பாட்டில் ஏற்கனவே விஷம் வைத்திருந்ததா? என்றெல்லாம் கண்டுபிடித்துவிடுவார்கள்.
பூச்சிக்கொல்லி விஷம்
ரிதன்யா தற்கொலை முடிவெடுத்து, பூச்சிமருந்தை கடையில் வாங்கியிருந்தால், அந்த பூச்சிமருந்து கவர் எங்கே? காரில் இருந்ததா? பூச்சிமருந்தை வெறும் கையில் கடைக்காரர்கள் தந்திருக்க முடியாது. ஏதாவது டப்பாவிலாவது தந்திருக்கணும். அந்த டப்பா எங்கே? அந்த ரோட்டில் எங்காவது விழுந்திருந்ததா? இதையெல்லாம்கூட விசாரிக்கணும். அப்படி ஏதாவது கவர் அல்லது டப்பா கிடைத்தால், அது ரிதன்யாவின் சொந்த முடிவு எனலாம். அப்படி கிடைக்காவிட்டால், மாமியார் வீட்டினரை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
சம்பவத்திற்கு முன்பு, அம்மாவுடன் ரிதன்யா போனில் பேசியிருக்கிறார்.. "உனக்கும் சேர்த்து பிரசாதம் வாங்கிவரேன்..ம்மா" என்று சொல்லித்தான் ரிதன்யா கோயிலுக்கு சென்றிருக்கிறார். கோயிலில் வாங்கிய பிரசாதமும் காரில் இருந்துள்ளது.. எனவே, தாய்-மகள் பேசுவதையறிந்து, அந்த வீட்டிலுள்ளவர்களே விஷம் வைத்திருக்கலாம்.. ஏனென்றால், பிரசாதம் வரை வாங்கி வந்த பெண், எப்படி திடீரென தற்கொலை முடிவை எடுத்திருப்பார்?
35 நிமிடத்தில் முடிந்துவிட்டது
35 நிமிஷத்தில் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது.. விஷமே சாப்பிட்டிருந்தாலும் 35 நிமிடத்தில் உயிர் போயிருக்காது.. எந்த விஷமாக இருந்தாலும் முதலில் சாப்பிட்டு, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் வரும்.. எனவே, 35 நிமிடத்தில் சாகக்கூடிய விஷம் எது? என்பது ரிதன்யாவின் மருத்துவ அறிக்கைகள் வந்தால்தான், உறுதியாக தெரியும். நம்பிக்கையுடன் கோயிலுக்கு சென்ற பெண், விஷத்தை எப்படி சாப்பிடுவார்?
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதன்மூலம் காயங்கள் இருந்தால், போஸ்ட் மார்ட்டத்தில் கண்டுபிடிக்கலாம்.. அதேபோல, கவின்குமார் ஏதாவது மனரீதியான பாதிப்புக்கு ஆளானவரா? என்பதையும் மருத்துவர்களை கொண்டு பரிசோதிக்க வேண்டும்.. ஒருவேளை ஏற்கனவே கவின் மனரீதியான பாதிப்புக்கு ஆளானவர் என்றால், அதற்குரிய மருத்துவத்தை குடும்பத்தினர் தந்து வந்தார்களா? என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.
யார் அந்த நபர்
யாரிடம் கடைசியாக பேசினார்? என்பதையும் விசாரிக்கணும்.. அதேபோல, மகள் இறந்துவிட்டதாக, அம்மாவுக்கு, யாரோ ஒருவர் போன் செய்து சொல்லியிருக்கிறார்.. அந்த நபர் யார்? வழியில் சென்றவர் என்கிறார்கள்.. அப்படியானால், ரிதன்யா அம்மாவின் போன் நம்பர் எப்படி கிடைத்தது?
ரிதன்யாவின் செல்போன் லாக் போடப்பட்டிருந்ததா? அதை எப்படி வழிப்போக்கன் திறந்து, உபயோகித்திருக்க முடியும்? காரும் லாக் ஆகியிருக்கும், அந்த காரின் லாக் திறந்தாரா? எப்படி? எனவே அந்த நபர்யார் என்ற சந்தேகமும் அதிகமாகவே உள்ளது.. எனவே போலீசார்தான் இதையெல்லாம் விசாரித்து உண்மையை வெளிக்கொணருவார்கள் " என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications