கஸ்தூரிக்கு வந்த ஆவேசம்.. ஒருவனுக்கு ஒருத்தி ரிதன்யா.. அப்பறம் லோகேஸ்வரி.. மீசை முளைத்தால் நீ ஆணா?
சென்னை: பணக்கார ரிதன்யாவை பேசும் நாம், வாழ வழியில்லாமல் 4 நாளைக்கு முன்பு, பொன்னேரியில் லோகேஸ்வரி என்ற பெண்ணை பற்றியும் இங்கே பேச வேண்டியிருக்கிறது.. , வரதட்சணையாக ஏசி கொண்டுவரவில்லை என்பதற்காக உயிர் போயிருக்கிறது.. அதுவும் திருமணமாகி 4 நாளில் உயிர் போயுள்ளது.. வரதட்சணை பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டிய நேரம் வந்துள்ளது" என்று நடிகை கஸ்தூரி தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Puthiya Sinthanai என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள நடிகை கஸ்தூரி,
"ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தம், பெண்களுக்காக வந்த சித்தாந்தம் கிடையாது.. ஏனென்றால், பலதார மணம் இருந்த சமுதாயத்தில், ஒருவனுக்கு ஒருத்தி என்று ஆண்களுக்காக சொல்லப்பட்டது.. அதையும் திரித்து, பெண்கள் மீது ஆணாதிக்கத்தை செலுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.. எனவே, ஒருத்திக்கு ஒருவன் என்று சொல்லவேயில்லை.

அருமையான சித்தாந்தம்
இஸ்லாமிய சமுதாயத்தில் மெஹர் என்ற சம்பிரதாயம் உள்ளது. அதாவது, கணவனை நாடி புதிதாக வரும் பெண்ணுக்கு தரக்கூடிய வைப்புத்தொகையாகும்.. ஏதாவது ஒரு சூழ்நிலையில், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வந்தால், அப்போது அந்த பாதுகாப்புத்தொகை உதவும்.. இது இஸ்லாத்தில் உள்ள அருமையான சித்தாந்தம்.
ஆனால், இன்று ஒரு சில இடங்களில் எப்படி நிலைமை உள்ளதென்றால், திருமணத்துக்கு முன்தினமே மாப்பிள்ளை வீட்டாரிடம் பெட்டியை தந்துவிடுவார்கள்., மறுநாள் அனைவரும் அறிய, அந்த பெட்டியை பெண்ணிடமே தருகிறார்கள்.. மெஹர் என்ற அருமையான சித்தாந்தத்தை சிலர் மாற்றி வைத்துள்ளது வேதனையை தருகிறது.
பொன்னேரி லோகேஸ்வரி
பணக்கார ரிதன்யாவை பேசும் நாம், வாழ வழியில்லாமல் 4 நாளைக்கு முன்பு, பொன்னேரியில் லோகேஸ்வரி என்ற பெண்ணை பற்றியும் பேச வேண்டியிருக்கிறது.. , வரதட்சணையாக ஏசி கொண்டுவரவில்லை என்பதற்காக உயிர் போயிருக்கிறது.. அதுவும் திருமணமாகி 4 நாளில் உயிர் போயுள்ளது..
ஏசி கேட்டவனை வாயிலேயே குத்திட்டு, இந்த லோகேஸ்வரி போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கலாமே? ஒரு ஏசியை கூட வீட்டில் சம்பாதித்து போட வக்கில்லாத துப்புக்கெட்டவனுக்கு எதுக்குடா கல்யாணம்? ஆணுறுப்பை தவிர நீயெல்லாம் எந்தவகையில் ஆண்? மீசை வந்தால் நீயெல்லாம் ஆணா?
ரிதன்யாவை கல்யாணம் செய்த கவினுக்கு களவாணி என்று பெயர் வைத்திருக்கணும்.. ரிதன்யாவை டார்ச்சர் செய்த மாமியாரை ஏன் முதலிலேயே அரெஸ்ட் செய்யவில்லை? உடல் நிலை சரியில்லை என்றுகாரணம் காட்டினார்கள். 47 வயதுதானே ஆகிறது?
அறக்கட்டளை தொடங்கலாம்
ரிதன்யாவின் பெற்றோர் இருவரும் கதறுவதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது.. தன்னுடைய வறட்டு கவுரவத்துக்காக பெண்ணை இழந்துவிட்டார்கள்.. இனிமேல் அந்த தம்பதியினர், வேறு எந்த பெண்ணுக்கும் இந்த கதி வராதபடி, முன்னுதாரணமாக திகழ்ந்து, சமூக மாற்றத்துக்காக போராடணும்.. ஏற்கனவே அந்த பகுதிகளில், அரேஞ்சுடு மேரேஜ் ஒர்க் அவுட் ஆகவில்லை..நிறைய விவாகரத்துகள் பெருகி கொண்டிருக்கின்றன..
பூச்சிக்கொல்லி மருந்தை மாமியார் வீட்டிலேயே வாங்கி தந்திருப்பார்களா? என்று சந்தேகத்தை ரிதன்யா அப்பா வெளிப்படுத்தியிருக்கிறார்.. அதற்கு வாய்ப்பில்லை... அந்த பெண்ணே இதை தெளிவாக சொல்லி உள்ளார்.. தற்கொலைக்கு ரிதன்யாவை தூண்டிவிட்டதே உண்மை..
எவ்வளவுதான் தைரியத்தைதான் ஒரு பெண் கொண்டிருந்தாலும், படித்திருந்தாலும், தினம் தினம் டார்ச்சர் தந்து, மனதளவில் அடிமைப்படுத்திவிட்டார்கள்.. விஷத்தை கையில் தர வேண்டும் என்றில்லை, எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று சைக்கோவாக மாற்றிவிட்டதே கொலைக்கு சமம்தான்.. நிர்பயாவுக்கு நடந்ததுபோலவே, கவின் செய்ததை ஒப்பிட வேண்டியிருக்கிறது..
கவின் - நிர்பயா ரேப்பிஸ்ட்
நிர்பயா ரேப்பிஸ்ட் போல கவின் ஒரு ரேப்பிஸ்ட்.. ஒரு கொலைகாரன், அதேபோல, பெற்றோர் செய்ததை கவுரவ கொலை என்றே சொல்லாம்.. இரு தரப்பிலுமே பெண்ணுக்கு சரியான யோசனையை, சரியான நேரத்தில் சொல்ல தவறிவிட்டார்கள்..
ஆனால், இப்படி சொல்லி பெண்ணை பெற்றவர்களை நோகடிக்க விரும்பவில்லை..
இனிமேல் வேறொரு பெண்ணுக்கு இப்படி நடக்கக்கூடாது என்கிறார்கள்..இன்று அவர் மனம் மாறியிருக்கிறது.. லோகேஸ்வரி, ரிதன்யா யாராக இருந்தாலும் வரதட்சணை மட்டுமே இங்கு நிற்கிறது..
இதற்கெல்லாம் என்ன தீர்வு? புரையோடிப்போன விஷயத்தை ஒருநாளில் தீர்க்க முடியாது என்றாலும், ரிதன்யா அப்பா அண்ணாதுரை வசதி படைத்தவர்.. எனவே ரிதன்யா பெயரில் போராட்ட இயக்கம் அல்லது அறக்கட்டளையை காவல்துறையின் உதவியுடன் துவங்க வேண்டும்..
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
அதேபோல சமூகத்திலும் நிறைய விழிப்புணர்வுகள் வரதட்சணை ஒழிக்க தரவேண்டியிருக்கிறது.. மகளிர் உரிமைத்தொகையை இன்று பெண்களுக்கு தருகிறார்கள்., அந்த உரிமைத்தொகை கவரிலேயே, இந்த ரூ.1000யை ஆண்களுக்கு தராதீர்கள்.. இது உரிமைத்தொகை உங்களுக்கானது என்பதை புரியவைக்க வேண்டும்.
ஏனென்றால் பேங்க்கில் ரூ.1000 போட்டதுமே, அந்த பணத்தை பல ஆண்கள் பிடுங்கி கொண்டுவிடுகிறார்கள்.. உரிமைத்தொகை என்பது சில நிமிடங்களில் கட்டிங் ஆக மாறிவிடுகிறது..
இதுவும் ஒரு ஆப்ஷன்
அதேபோல எந்த மதத்தின் திருமணமாக அதை பதிவு செய்வது சட்டரீதியாக அவசியம்.. அந்த நேரத்தில் வரதட்சணை வாங்கினீர்களா? கட்டாயத்தின் பேரில் ஏதாவது பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதா? என்பதை சப் ரிஜிஸ்திரர், மாஜிஸ்திரேட், போலீஸ் என யார் மூலமாவது வைத்து, உறுதி செய்து கொள்ளலாம்..
வரதட்சணையை ஒழிக்க இன்னும் இதுபோல் ஏதாவது வழிமுறைகளை கையாண்டு, நிறைய வேலைகளை நாம் இங்கே செய்ய வேண்டியிருக்கிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications