ராஜா ராணி சீரியலை விட்டு விலகிய கதாநாயகி... சந்தியா கேரக்டரில் இனி வேறு நடிகை.. அவரே கூறிய காரணம்?
ராஜா ராணி சீரியல் சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா விசுவநாதன் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் இருந்து கதாநாயகி சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா தற்போது சீரியலை விட்டு விலகி இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார்.
அடுத்ததாக சந்தியாவாக ரியா நடிக்க தொடங்கி இப்போது ஒரு வருடம் முடிவடைய இருக்கும் நிலையில் திடீரென்று உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இரண்டாவது பாகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் முதல் பகுதி முடிவடைந்து தற்போது இரண்டாவது பகுதி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணட் இயக்கி வருகிறார். முதல் பாகத்தையும் அவர்தான் இயக்கியிருந்தார். ராஜா ராணி 2, 2020 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கேரக்டரில் சித்து நடித்து வருகிறார். சந்தியா கேரக்டரில் ஆலியா மானசா நடித்து வந்தார். ராஜா ராணி முதல் பாகத்தில் கதாநாயகியாகவும் ஆலியா மானசா நடித்து வந்த நிலையில், இரண்டாவது பாகத்திலும் அவரே நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார்.

ஆலியா மானசா விலகல்
ஆலியா மானசா விலகியதற்கு பிறகு அவருக்கு பதிலாக ரியா விஸ்வநாத் சந்தியா கேரக்டரில் நடிக்க வந்தார். ரியா விஸ்வநாத் சந்தியா கேரக்டரில் அறிமுகம் செய்து வைத்த ஆலியா மானசா ப்ரோமோ சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இனி சந்தியாவாக இவர்தான் கடைசி வரைக்கும் தொடர்வார் என்று அப்போது ஆலியா கூறியிருந்தார். தற்போது ஆலியா மானசா சன் டிவியில் வேற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது சந்தியா ஆசைப்பட்ட மாதிரி சொந்த ஊரிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக மாறி இருக்கிறார்.

தொடரும் பிரச்சனைகள்
சந்தியாவிற்க்கு ராஜா ராணி சீரியலில் பிரச்சனை இல்லாத நாலே இல்லை என்று சொல்லும் வகையில் தினமும் ஒவ்வொரு பிரச்சனையும் வந்து கொண்டே இருக்கும். சாதாரணமாக வீட்டில் இருந்த நிலையிலே அப்போதே அவருக்கு தீவிரவாதிகள் பிரச்சனை கொடுக்க, இப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் நிலையில் இப்போதும் அவருக்கு பிரச்சனை ஓய்ந்தபாடு இல்லை. ஆனாலும் அதற்கெல்லாம் சலிக்காத ஒரு கேரக்டரில் ரியா நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது ரியா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

உருக்கமான வார்த்தை
நான் ராஜா ராணி சீரியல் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இதுவரைக்கும் நான் ஒரு லைவ் வீடியோ போட்டதில்லை. பட் இப்போ போடுறேனா அதற்கு காரணம் இனி ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நான் இல்லை. வேற ஒருத்தங்க நடிக்கப் போகிறார்கள். இனி ரியா சந்தியாவாக ராஜா ராணி 2 வில் நடிக்கப் போவதில்லை. இதை நாம் மக்கள் கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன், ஆசைப்பட்டேன். ஒரு வருஷத்தில் பாக்குறவங்க எல்லாம் சந்தியா சந்தியா என்று பேசும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கும். இனி நான் சந்தியாவாக இல்லை. புது சந்தியாவாக வேறொருத்தங்க நடிக்கிறாங்க. அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

புது தொடக்கம்
அது மட்டுமல்லாமல் இன்று காலையிலே அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புது தொடக்கம் என்று ஸ்டேட்டஸ் வைத்திருந்த நிலையில், அப்போது இவர் புது சீரியலில் எதுவும் கமிட் ஆகி இருக்கிறாரா? என்றும், சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி என்றால் அது சந்தோஷமான விஷயம் தானே எதற்காக இவர் சோகமாக பேச வேண்டும் என்றும் பலர் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த வீடியோவில் பேசும் போதே அவருடைய முகம் டல்லாகவும் அழுதது போன்று இருப்பதாகவும், அதனால் ஏதேனும் பிரச்சனையா? என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கமெண்ட்களில் கேட்டு வரும் நிலையில், இவர் எதற்காக சீரியலை விட்டு விலகுகிறார் என்ற காரணத்தை கூறவில்லை. அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து இவரே சந்தியாவாக வேண்டும் என்று பலர் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications