சரத்குமார் வீட்டில் இந்திரஜாவுக்கு ராஜ விருந்து.. தேர்தல் பிசியிலும் ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவுக்கு கடந்த வாரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்ற நிலையில் இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக்குக்கும் நடிகர் சரத்குமார் அவருடைய மனைவி ராதிகாவோடு விருந்து வைத்து அசத்தியிருக்கிறார்.
இந்திரஜாவுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்று இருந்தாலும் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அவர்கள் வீட்டில் பங்க்ஷன் களைகட்டி இருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு உறவினர்களின் விருந்து நிகழ்ச்சிகளில் இந்திரஜாவும் அவருடைய கணவரும் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சரத்குமார் இந்திரஜாவிற்கு பிரம்மாண்டமான கறி விருந்து வைத்து அசத்தி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா அவர் காதலித்து வந்த அவருடைய மாமா கார்த்திக் உடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எக்கேஜ்மெண்ட் முடிவடைந்து இருந்தது. அதை தொடர்ந்து இப்போது திருமணமும் பிரம்மாண்டமாக முடிவடைந்து இருந்தது. இவர்களுடைய வரவேற்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
இப்படியான நிலையில் இந்திரஜா மற்றும் அவருடைய குடும்ப புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திருமண நேரத்தில் இவர்கள் போட்ட டான்ஸ் மற்றும் க்யூட்டான வீடியோக்கள் இணையத்தில் வெளியாக அதற்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்களும் பதிவாகி வருகிறது. பலர் இவர்களை பாராட்டி வாழ்த்தி வந்தாலும் ஒரு சிலர் எதற்காக இவங்க இவ்வளவு ஆட்டம் போடுறாங்க?
நாலு காசு வந்துட்டா இப்படியா ஆட்டம் போடணும்? இந்த ஆட்டம் எத்தனை நாளைக்கு நிலைக்கும்னு தெரியலையே என்றெல்லாம் கண்டமேனிக்கு திட்டி வருகிறார்கள். இது குறித்து நேற்று ரோபோ சங்கர் மற்றும் அவருடைய மாப்பிள்ளை கார்த்திக் இருவரும் பேசுகையில் நாங்கள் கஷ்டப்பட்ட பணத்தில் ஆட்டம் போடுறோம். அதில் உங்களுக்கு என்ன வந்திருக்கிறது?
நாங்கள் சந்தோஷமாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் நெகட்டிவாக பேசுகிறார்கள். ஆனால் பலர் எங்களுக்கு பாசிட்டிவாக தான் இருக்கிறார்கள். அதுபோல நாங்கள் யாரையும் ஏமாற்றவும் இல்லை, எவ்வளவோ பிரச்சனைகளை தாண்டி இன்று எங்கள் வீட்டில் இந்த சந்தோஷமான நிகழ்வு நடந்திருக்கிறது. அதை நாங்கள் சந்தோஷமாக கொண்டாடுவதில் சிலருக்கு ஏன் வருத்தம் என்று தெரியவில்லை என்று பேசியிருந்தனர்
இப்படியான நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக், ரோபோ சங்கர் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்து பெரிய அளவில் விருந்து வைத்திருக்கின்றனர். நடிகர் சரத்குமார் அவருடைய கட்சியை பாஜகவுடன் இணைத்த பிறகு ராதிகா விருதுநகர் தொகுதியில் வரும் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இப்படியான நிலையில் கட்சிப் பணியில் பிசியாக இருந்தாலும் ரோபோ சங்கர் மகளுக்கு தன்னுடைய வீட்டில் கொடுத்த பிரம்மாண்டமான விருந்து பற்றி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
-
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications