ரூ.500 கோடி சொத்து.. "மிரட்டல் நாயகன்" சென்னை ஈசிஆர் ரோட்டில் நிற்கிறாரா? ரஜினி பணிவு சபாஷ்: பிரபலம்
சென்னை: திறமை பாதி, பணிவு பாதி இருந்தால்தான் சினிமாவில் வெற்றி பெற முடியும் என்பார்கள்.. இன்றுவரை ரஜினிகாந்த் பண்பாகவும், அன்பாகவும் இருப்பதால்தான், சூப்பர் ஸ்டாராகவே உள்ளார்.. புகழை அடைவதைவிட, அந்த புகழை தக்க வைத்து கொள்வதுதான் பலருக்கும் கஷ்டம் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார். அத்துடன் நடிகர் ஜீவன் குறித்தும் சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
தமிழில் 2002 ம் ஆண்டு வெளியான "யூனிவர்சிட்டி" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பிறகு சூர்யா நடிப்பில் வெளியான "காக்க காக்க" படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம்தான், ஜீவனுக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன.. குறிப்பாக நெகடிவ் கேரக்டர்கள் ஜீவனுக்கு பொருத்தமாக இருந்ததால், அதுபோன்ற படங்களே அவரை தேடி வந்தன.. எனினும், ஹீரோவாக நடித்த மச்சக்காரன் உள்ளிட்ட பல படங்கள் தோல்விப்படமாக அமைந்துவிட்டன.
இந்நிலையில், Aramnaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "எனக்கு ஜீவனை சின்ன வயசிலிருந்தே தெரியும்.. ஜீவனுக்கு 5, 6 வயது இருக்கும்போதே அவரை தெரியும்.. லாயிட்ஸ் காலனியில் நாங்கள் இருந்தபோது, எங்க வீட்டுக்கு எதிர் பிளாட்டில்தான் ஜீவனும் இருந்தார்.. சிறுவயதிலிருந்தே நாங்கள் குடும்ப நண்பர்கள்..
கோபாலபுரம் வீடு
காலேஜ் படிக்கிற காலகட்டத்தில் அங்கிருந்து கோபாலபுரத்துக்கு ஜீவன் குடும்பத்தினர் வீட்டிகட்டிட்டு குடிபெயர்ந்து சென்றுவிட்டார்கள்.. அவருடைய அப்பா சிவில் என்ஜினியர்.. அதற்கு பிறகு அவர்களுடன எங்களுக்குள் பெரிய தொடர்பு இல்லை..சில வருடங்கள் கழித்து, யூனிவர்சிட்டி படத்தின் போஸ்டர் பார்த்து ஆச்சரியப்பட்டேன். நாங்கள் எல்லாரும், அவரை விக்கி என்றுதான் கூப்பிடுவோம். சினிமாவுக்காக ஜீவன் என்று மாற்றிக் கொண்டார்.
காக்க காக்க படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். பிரம்மாதமாக நடித்திருந்தார்., அசால்ட்டாக அந்த கேரக்டரை செய்திருந்தார்.. அதற்கு பிறகுதான், தோட்டா என்ற படத்தை அவரை வைத்து நாங்கள் தயாரித்தோம்.. அந்த நேரத்தில், திருட்டுப் பயலே, நான் அவன் இல்லை படங்கள் ஹிட்டாகிவிட்டது. இந்த தொடர் வெற்றிகளால் ஜீவனிடம் பல மாற்றங்கள் வர ஆரம்பித்துவிட்டன.
சூப்பர் ஸ்டார் ரஜினி என்றும் சூப்பர் ஸ்டார்தான்
10 ரெட்புல், காடை பிரியாணி கேட்டு அலப்பறை செய்வார். நான் அவரிடம் சென்று, "என்ன விக்கி வேணும்?" என்று கேட்க போனாலும், யாரோ மாதிரிதான் என்னிடம் பேசினார். அதாவது, இதுக்கு முன்னாடி நாங்கள் ஒருவரையொருவர் பார்த்ததே கிடையாதது மாதிரி என்னிடம் நடந்து கொண்டார். ஆனாலும், தோட்டாவும் நல்ல படமாக ஜீவனுக்கு அமைந்தது.
தங்களுக்கு 2 படம் ஓடிவிட்டால், ரசிகர்கள் பிரியம் காட்ட துவங்கிவிடுவார்கள்.. உடனே அதனை பலரும் தலைக்கேற்றி கொள்கிறார்கள்.. திறமை பாதி, பணிவு பாதி இருந்தால்தான் சினிமாவில் வெற்றி பெற முடியும் என்பார்கள்.. இன்றுவரை ரஜினிகாந்த் பண்பாகவும், அன்பாகவும் இருப்பதால்தான், சூப்பர் ஸ்டாராகவே உள்ளார்.. புகழை அடைவதைவிட, அந்த புகழை தக்க வைத்து கொள்வதுதான் பலருக்கும் கஷ்டம்.
ஜீவனை வைத்து எடுத்து எடுக்கப்பட்ட கவிதாலயா போன்ற நிறுவனங்களே அந்த படத்தை வெளியிட முடியவில்லை.. இதில் தன்னுடைய படத்துக்கு "மிரட்டல் நாயகன்" என்று பட்டம் போட சொல்வார் ..
அமெரிக்காவில் செட்டில்?
ஜீவன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும், 1000 கோடிக்கு தொழிலதிபர், 500 கோடிக்கு தொழிலதிபர் என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியாகின்றன. அது உண்மையில்லை.. மாயாஜால் டோல்கேட் பக்கத்திலுள்ள தன்னுடைய வீட்டில் குடியிருக்கிறார். மாயாஜால் தியேட்டரை தாண்டி, ஈசிஆர் ரோட்டில் சாயங்கால நேரத்தில் ஜீவனை பார்க்கலாம்.
மிகப்பெரிய உச்சத்தை அடைய வேண்டிய நடிகர் ஜீவன்.. ஆனாலும், 2 வெற்றிக்கு பிறகு தன்னை வேறு மாதிரியாக மாற்றிக்கொண்டதுதான், அவரை மேலே கொண்டு செல்லவில்லை" என்றெல்லாம் கூறியிருக்கிறார்..












Click it and Unblock the Notifications