கோடி பணத்துக்காக.. நெருக்கமான சீனை விட்டுத்தந்த நடிகை.. அந்த பிரபல நடிகர் மாதுரியை இப்படியா சொன்னார்
மும்பை: தயவான் என்ற இந்தி படத்தில், வினோத் கண்ணா மாதுரி தீட்சித், பெரோஸ் கான், ஆதித்யா பஞ்சோலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.. பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இந்த படம், வசூலில் சக்கை போடு போட்டது.. இந்த படம் வெளியானபோதே ஏகப்பட்ட பரபரப்புகளை தந்திருந்தது. இப்போது 37 வருடங்களுக்கு பிறகும்கூட, பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று பாலிவுட்டில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா பிரபலமான தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இரண்டு முறை பிலிம்பேர் விருதுகள் வென்றவர். பாஜகவில் சேர்ந்து தீவிர அரசியல்வாதியாக விளங்கினார்.

புகழ்பெற்ற வினோத் கன்னா
1968ம் ஆண்டு, சுனில் தத்தின் 'மான் கா மீட்' என்ற இந்தி படத்தில் அறிமுகமான வினோத் கன்னா, வில்லன் கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கினார்.. மேரே அப்னே, மேரா கோன் மேரா தேஷ், குச்சி தாகே, இங்கார், அமர் அக்பர் அந்தோனி, ராஜ்புட், குர்பானி போன்ற படங்கள் சிறந்த பெயர் பெற்று தந்தன. இதில், தயவான் என்ற படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.. மிகப்பெரிய புகழை வினோத் கன்னாவுக்கு பெற்று தந்தது..
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய படம் 'நாயகன்'. இப்படம் 1987ல் வெளியானது. இந்த படத்தின் ரீமேக்தான் இந்த தயவான் படம்.. 1988 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது..
நெருக்கமான காட்சி
இதில் கமல்ஹாசன் வேடத்தில் வினோத் கன்னாவும் சரண்யா வேடத்தில் மாதுரி தீட்சித்தும் நடித்திருந்தனர்.. அந்த படம் நடிக்கும்போது வினோத் கன்னாவுக்கு 41 வயது, மாதுரி தீட்சித்துக்கு 20 வயதாகும்.. இந்த படத்தை தயாரித்து, இயக்கியவர் நடிகர் பெரோஸ் கான். தமிழில் "நீ ஒரு காதல் சங்கீதம்" என்ற பாடல் காட்சியை போல் இந்தியிலும் ஒரு பாடலை படமாக்கினார் பெரோஸ் கான்.
அப்போது படப்பிடிப்பில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று தற்போது மீண்டும் பேசுபொருளாகி வருகிறது. படத்தில், காட்சிப்படி வினோத் கன்னாவும் மாதுரியும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்க வேண்டும். அப்போது வினோத் கன்னா அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். வினோத் கன்னா, மாதுரியை முத்தமிட்டிருக்கிறார்..
கட் சொன்ன ஃபெரோஸ் கான்
மாதுரி அப்போதுதான் சினிமாவில் நடிக்க வந்தவர்.. சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயன்று கொண்டிருந்த நேரமும் கூட.. இதனால் உச்ச நடிகராக இருந்த வினோத் கன்னாவிடம் எதிர்ப்பை காட்ட முடியாமல் அவதிப்பட்டுள்ளார்..
டைரக்டர் ஃபெரோஸ் கான் 'கட்!' என்று கத்திய பிறகும், 5 நிமிடங்கள் மாதுரியை வினோத் கன்னா முத்தமிட்டுக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. முத்தமிடுவது மட்டுமல்லாமல், கன்னா நடிகையின் உதடுகளையும் கடித்துள்ளார்.. இதனால் ரத்தம் வழிந்தது, கன்னா இறுதியாக நிறுத்தியபோது மாதுரி அடக்க முடியாமல் அழுததாகவும், ரத்தம் சொட்ட சொட்ட மாதுரி கண்ணீர் விட்டபடி அங்கிருந்து ஓடியதாகவும் தெரிகிறது.
சம்பளம் 15 லட்சம்
இந்த காட்சியை படத்திலிருந்து நீக்க கோரி பொரோஸ் கானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் மாதுரி தீட்சித். இது தொடர்பாக மாதுரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பெரோஸ் கான், அவருக்கு சம்பளமாக 15 லட்சம் ரூபாய் தருவதற்கு பதில் ரூ.1 கோடியை தர முன்வந்துள்ளார். அதன் பிறகே மாதுரி சமாதானம் அடைந்தாராம். இந்த ஒரு காட்சியின் பரபரப்பை வைத்தே, அப்படத்துக்கு விளம்பரங்கள் அதிகமாக கிடைத்தன.. எனவே, இந்த காட்சியை திரையில் காண ரசிகர்களும் ஆர்வமாக இருந்தார்களாம்..
படத்திலிருந்து ஆபாச காட்சியை நீக்காமல் இருப்பதற்கு நடிகைக்கு 1 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர். இந்த சம்பவம் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், இது பற்றி மாதுரி தீட்சித்தே இப்போது மவுனம் கலைத்து பேசியிருக்கிறார். "இந்த ஒரு காட்சிக்காக அப்போதே ஒரு கோடியை பெரோஸ் கான் தந்தாரா" என்று நெட்டிசன்கள் ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications