ரூ.5 லட்சம் கோடி.. அதான் ஃப்ளைட், கப்பல் அரசிடமே இருக்கணும்! நடிகர் ஸ்ரீகாந்த் கேஸ் இப்படியா போகும்?
சென்னை: கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதைப்பொருளை விற்பவர்கள், பயன்படுத்துபவர்களிடம் பேச்சுவார்த்தையை கூட நிறுத்திகொள்ளுங்கள் ஏனென்றால், விசாரணை என்றால் சம்பந்தப்பட்டவர் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரிப்பார்கள், யார் யாருக்கு போன் வந்துள்ளதோ, எல்லாரையுமே விசாரிப்பார்கள்.. அந்த வழக்கை எதிர்கொள்ளும் அளவுக்கு குடும்ப பொருளாதாரமும் ஒத்துழைக்காது. எனவே, எந்த ரூபத்திலுமே போதை ஒழிக்கப்பட வேண்டியது என்று மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "1 கிராம் போதைப் பொருள் 12000 என்கிறார்கள்.. தங்கத்தைவிட அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது... போதைப்பொருள் நடமாட்டம் இந்தியாவில் இருக்கவே செய்கிறது...

5 லட்சம் கோடி
ஒருமுறை உள்துறை ஆர்டிஐ அறிக்கையின்படி, 5 லட்சம் கோடி கொக்கைன் அசாம் மாநிலத்தில் பிடிபட்டதாக கூறப்பட்டது. ஆனால் அசாம் மாநில ஆர்டிஐயில் 1 கிராம் போதைப்பொருள்கூட அசாம் மாநிலத்தில் பிடிபடவில்லை என்றார்கள்.. அப்படியானால் 5 லட்சம் கோடி எங்கே போனது?
குஜராத்திலுள்ள முந்த்ரா துறைமுகத்தில், 260 கோடிக்கான போதைப்பொட்கள் எரிக்கப்பட்டன. காரணம் நீண்ட காலத்துக்கு அதனை தேக்கி வைக்க முடியாது.. எப்போதுமே துறைமுகம், விமானம் இவைகளை எல்லாம் தனியாரிடம் தரவே கூடாது. அப்படி தந்தால், முறைகேடுகள் நிறைய நடக்கத்தான் செய்யும். அரசாங்கத்திடம் தந்துவிட்டால், அதற்கான முழு பொறுப்பும் அரசாங்கத்தையே சாரும்.
கஞ்சா நடமாட்டம் தமிழகத்தில்
தமிழகத்தில் கஞ்சா பூஜ்ஜியம் சதவீதம் பயிரிடும் மாநிலமாக உள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார்.. அதனை எதிர்க்கட்சி தலைவரும் ஏற்றுக் கொண்டார். ஆனால், தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் இருக்கவே செய்கிறது? எங்கிருந்து வருகிறது?
சினிமாவில் போதைப்பொருள் காட்சிகளை அதிகமாக காட்டுவதாக சொல்கிறார்கள்.. ஆனால் பள்ளிக்கூடத்து பிள்ளைகள் காதல் காட்சிகளை வைத்தால் அதற்கு ஏன் கண்டனம் சொல்வதில்லை? அது குற்றமாக தெரியவில்லையா? சின்ன பிள்ளைகளை சினிமாவில் நடிக்க வைக்கலாமா? 18-வயதுக்கு கீழே உள்ளவர்களை பணியில் ஈடுபடுத்துவது தவறில்லையா? இதுபோன்றவர்களை ரிமாண்டு செய்ய வேண்டியதுதானே?
குழந்தை தொழிலாளர்கள்
நாய் பூனை விலங்குகள் போன்றவை துன்புறுத்தப்படவில்லை என்று disclaimer மட்டும் சினிமாவில் காட்டினால் போதுமா? 18 வயதுக்கு கீழுள்ளவர்களை அழும் காட்சிகளில், கன்னத்தில் அறைந்து அழ வைப்பதில்லையா? வெயிலில் நடனமாடி துன்புறுத்தப்படுவதில்லையா?
ஸ்ரீகாந்த் செய்தது தவறு.. கிருஷ்ணா செய்ததும் தவறு.. குற்றமும் செய்துவிட்டு ஆதாரங்களை மறைக்கும் குற்றவாளிகளே இவ்வளவு புத்திசாலிகளாக
இருந்தால், அதை கண்டுபிடிப்பவர்கள் எவ்வளவு புத்திசாலிகளாக இருப்பார்கள்..
சட்டரீதியான நடவடிக்கை
இனி சட்டரீதியாக நடவடிக்கைகள் நகரும்.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, ஜான், பிரதீப், எல்லாவரையுமே தனித்தனியாக காவலில் எடுத்து விசாரிப்பார்கள்.. ஆளாளுக்கு ஒவ்வொரு வாக்குமூலம் தருவார்கள்.. அந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும். கொகைன் என்பதால், இந்த வழக்கை முடிப்பது கடினம்.. மத்திய போதைத்தடுப்பு பிரிவும் (NCP) இதில் உள்ளே வருவார்கள்... அதெல்லாம் உடனே சாத்தியமா தெரியவில்லை...
கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதைப்பொருளை விற்பவர்கள், பயன்படுத்துபவர்களிடம் பேச்சுவார்த்தையை கூட நிறுத்திகொள்ளுங்கள் ஏனென்றால், விசாரணை என்றால் சம்பந்தப்பட்டவர் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரிப்பார்கள்,
யார் யாருக்கு போன் வந்துள்ளதோ, எல்லாரையுமே விசாரிப்பார்கள்.. அந்த வழக்கை எதிர்கொள்ளும் அளவுக்கு குடும்ப பொருளாதாரமும் ஒத்துழைக்காது. எனவே, எந்த ரூபத்திலுமே போதை ஒழிக்கப்பட வேண்டியது, தவறானது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications