ரூ.500 கோடி சிதறிய சொத்து.. நடிகர் சத்யனுக்கு இன்று இப்படியொரு நிலைமையா? சத்யராஜ் குறித்து பிரபலம்
சென்னை: மகன் சத்யன் ஆசைப்பட்டதால், சத்யனையும் சினிமாவுக்கு அனுப்பி வைத்தார் மாதம்பட்டி சிவக்குமார்.. 2000ம் ஆண்டில், 2 படங்களை எடுத்து, அதில் ஹீரோவாக சத்யனை நடிக்க வைத்தார்.. பிறகுதான் காமெடி வேடங்களில் சத்யன் நடிக்க ஆரம்பித்தார்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கோயம்பத்தூர் மாவட்டம் மாதம்பட்டியில் பிறந்தவர் நடிகர் சத்யன், ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். 500 ஏக்கர் நிலம், அரண்மனை போன்ற வீடு என ரூ.500 கோடிக்கு அதிபதிதான், சத்யனின் அப்பா மாதம்பட்டி சிவக்குமார்..

தனக்கு சினிமாவில் மீது ஆர்வம் இருந்ததால், தனது மகன் சத்யனை ஹீரோவாக வைத்து 2 படங்களை தயாரித்தார். ஒருகாலத்தில் செழிப்பாக இருந்தாலும், அவையெல்லாம் பல்வேறு காரணங்களால் கைவிட்டு போயிருக்கின்றன.. இதனால், நஷ்டத்தை ஈடுகட்ட தங்களுடைய சொத்துக்களை விற்று சரி செய்திருக்கிறார்கள்.
கைவிட்டு போன சொத்துக்கள்
இதனாலேயே பல சொத்துக்கள் கைவிட்டு போனதாக தெரிகிறது.. தற்போது மிச்சமுள்ள சொத்துக்களை விற்று விட்டு, சென்னையில் அவர்கள் குடியேறியுள்ளார்களாம்.. இது சத்தியனின் உறவினர்களை வேதனை அடைய செய்திருக்கிறது.. சமீபத்தில் வெளியான வீடியோக்களில் இந்த விஷயம் குறித்து சத்யனின் உறவினர்கள் வேதனையுடன் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், நடிகர் சத்யனின் அப்பா பெயர் மாதம்பட்டி சிவக்குமார்.. நடிகர் சத்யராஜுடன் நல்ல நட்பு கொண்டிருந்தவர்.. இவர்கள் எல்லாம் ஒரே ஏரியாவை சேர்ந்தவர்கள்.. கிட்டத்தட்ட உறவினர்களும்கூட..
அன்னக்கிளி படம்
நடிகர் சிவக்குமார் அன்னக்கிளி படத்தின்போது, அந்த கிராமத்தை கண்டுபிடித்து தந்ததும் இவர்தான்.. அந்த கிராமத்தில் தங்கி ஷூட்டிங் எடுக்கும் வசதி முதல், படக்குழுவினருக்கு கடைசி நாளில் பிரியாணி விருந்து வைத்தது வரை எல்லாமே மாதம்பட்டி சிவகுமார்தான்.. அந்தளவுக்கு செல்வந்தர். இவருடன்தான் சத்யராஜ் சிறுவயதிலிருந்தே பழகிவந்தார்..
மாதம்பட்டி சிவக்குமார் குடும்பத்தினர் அனைவரும் காங்கிரஸ்காரர்கள்.. ஆனால், மாதம்பட்டி சிவக்குமார் மட்டும் எம்ஜிஆர் ரசிகர்.. அப்படித்தான் சத்யராஜூம் எம்ஜிஆர் ரசிகர் ஆனார்.. அந்த நேரத்தில் மாதம்பட்டி சிவக்குமார் வட்டிக்கடை ஒன்றை வைத்திருந்தார்.. அந்த கடையில் சத்யராஜ் உட்கார்ந்து பொழுதை கழித்திருப்பார். அதேபோல, மாதம்பட்டி ஓட்டல் ஒன்றையும் நடத்தி வந்தார். அங்கேயும் சென்று சத்யராஜ் கவனித்து வந்தார்.. அப்போதெல்லாம் சினிமாவுக்கு சத்யராஜ் வரவில்லை.
சத்யராஜூக்கு ஆர்வம்
அன்னக்கிளி படத்தையெல்லாம் பார்த்தபிறகுதான் சினிமா ஆசை சத்யராஜூக்கு வந்தது..ஆனால், குடும்பத்தில் யாருமே ஏற்கவில்லை. இதனால் தன்னிடமிருந்த புல்லட் பைக்கை சத்யராஜிடம் தந்து அனுப்பி வைத்தார்..
உடனே வாய்ப்பு கிடைக்காது என்பதால், சத்யராஜ் வீட்டுக்கே தெரியாமல் மாத மாதம் செலவுக்கும் பணம் அனுப்பி வைத்தார்.. அத்துடன், மாதம்பட்டி சிவக்குமார்தான், தன்னுடைய உறவினர் பெண்ணை, சத்யராஜூக்கு திருமணமும் செய்து வைத்தார்..
அதற்கு பிறகே சத்யராஜ் மெல்ல உயர்ந்தார்.. ஒருகட்டத்தில் சினிமாவில், தன்னுடைய மகன் சத்யன் ஆசைப்பட்டதால், சத்யனையும் சினிமாவுக்கு அனுப்பி வைத்தார் மாதம்பட்டி சிவக்குமார்.. 2000ம் ஆண்டில், 2 படங்களை எடுத்து, அதில் ஹீரோவாக சத்யனை நடிக்க வைத்தார்.. பிறகுதான் காமெடி வேடங்களில் சத்யன் நடிக்க ஆரம்பித்தார்..
ஜமீன்தாரர் குடும்பம்
பெரும்பாலும் ஜமீன்தாரர்கள் குடும்பங்களில் , சிலர் இருப்பதேபோதும் என்று பொழுதை கழிப்பார்கள்.. அந்தவகையில் மாதம்பட்டி சிவக்குமாரும், வேட்டைக்கு செல்வார்.. அவருடன் சத்யராஜூம் செல்வார்.. ஆனால் பெரும்பாலானோர் சொத்துக்களை சிதறாமல், தொழிற்சாலை உள்ளிட்ட பிசினஸ்களில் கவனம் செலுத்துவார்கள்.. அடுத்த வருமானத்துக்கும் வழி செய்து கொள்வார்கள்..
சொந்த ஊரிலேயே இருந்து நிலபுலன்களை பார்த்து கொண்டிருந்தால்தான், வருமானம் வந்துகொண்டேயிருக்கும்.. சிலர் வீடு, வாசல் நிலத்தை விட்டுவிட்டு, வெளியூர்களில் குடியேறிவிடுவதால், வருமானம் நின்றுவிடும்.. தேய்மானம் தொடங்கிவிடும்..அப்படித்தான் சென்னையில் தங்கியிருந்த மாதம்பட்டி சிவக்குமாருக்கும் நடந்தது.. உடல்நிலை சரியில்லாமல், இருந்தது.. சத்யராஜ் சார்தான் அப்போது உடனிருந்து கவனித்து கொண்டார்..
100 கோடி சொத்து
மாதம்பட்டிக்கு 500 கோடி சொத்து என்கிறார்கள்.. அவ்வளவு இருக்க வாய்ப்பில்லை.. ஏறக்குறைய 100 கோடி சொத்து இருக்கலாம்.. அதேபோல, சத்யனுக்காக படம் எடுத்து, 500 ஏக்கர் நிலம் காலியானதாக சொல்கிறார்கள்.. அவ்வளவு செலவாகியிருக்கவும் வாய்ப்பில்லை. சத்யனை வைத்து 2 படம் எடுத்து 1 கோடி செலவாகியிருக்கலாம்.
இப்போது சத்யன் அதிகளவு கஷ்டப்படக்கூடிய நிலைமையில் இல்லை.. ஓரளவு வசதியாகவே உள்ளார்.. மிகப்பெரிய ஜமீன்தாராக இருந்துவிட்டு, இப்போது அந்நிலைமையில் இல்லை.












Click it and Unblock the Notifications