நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! எனக்கு 3 சூடு! 3 காதலிகளுக்கும் நன்றி! எஸ்.ஜே.சூர்யா திருந்திட்டாராம்!
சென்னை: நடிகர் எஸ்.ஜே.சூர்யா எப்போதும் கலகலப்பாக பேசும் நிலையில் ஒரு பேட்டியில் தனது 3 முன்னாள் காதலிகளுக்கும் நன்றி என தெரிவித்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் தலைவரே 3 காதலிகள் போதுமா என கேட்டு கலாய்த்து வருகிறார்கள்.

இதுகுறித்து விருது வழங்கும் விழாவில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா கூறியிருப்பதாவது: பொதுவாகவே நமக்கு 3 லவ் இருந்தது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று சொல்வாங்க. 3 சூடு பட்டதிற்கு பிறகும் லவ் செய்யணும்னு நெனச்சா ரொம்ப தப்புடா என்று திருத்திக் கொண்டேன்.
எனக்கு இது மாதிரி ஒரு அற்புதமான சுதந்திரம் கொடுத்ததற்காக எனது முன்னாள் காதலிகளுக்கு எல்லாம் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கலகலப்புடன் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்திருந்தார்.
வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்த எஸ்.ஜே.சூர்யா, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது வாழ்வில் நடந்த அனுபவங்களை கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்திருக்கிறார். இறைவி எனும் படத்தின் மூலம் நடிப்பு அரக்கன் என்ற பட்டத்தை பெற்றவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
பிகில், கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் செகன்ட் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மகேஷ்பாபு, விஜய், விக்ரம், ராம்சரண், நானி, சூர்யா உள்ளிட்டோருக்கு வில்லனாக பட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் 2 படத்திலும் இவர் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் ராயன் படத்தை போலவே ஜெயிலர் 2 படத்திலும் எஸ்.ஜே. சூர்யா வித்தியாசம் காட்டவுள்ளதாக சொல்லப்படுகிறது.
அது போல் சர்தார் 2 படத்திலும் அவர் இணைந்திருக்கிறார். கொடூர வில்லனாக இவர் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தோ சீன எல்லை குறித்தும் இந்த படத்தில் பேசப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் மயிலிறகை பாடலை கொஞ்சம் மாடுலேசன் மாற்றி எஸ்.ஜே.சூர்யா பாடியிருந்தார். ஆனால். அவரது கரகர குரலால் பாடல் வரிகள், செய்யுளை மனப்பாடம் செய்வது போல் இடம்பிடித்தன. இதனால் நெட்டிசன்கள் எஸ்.ஜே.சூர்யாவை கலாய்க்க தொடங்கினர்.
மேலும், பாட்டு பாட தெரிந்தால் பாடுங்க தலைவரே அவர் சொன்ன வசனத்தை அவருக்கே திருப்பி போட்டு கலாய்த்தனர். இந்நிலையில், நானியுடன் நடித்த பட புரோமோஷன் விழாவில் தொகுப்பாளினி ஒருவர் நானியை பாட சொன்னபோது நானியை எச்சரித்தார். வேண்டாம் சார். வேண்டாம். நானும் இப்படித்தான் ஒரு பாட்டு பாடிட்டு படாத பாடுபடுறேன் என நக்கலாக பேசியதும் வைரலானது.












Click it and Unblock the Notifications