Samantha: நடிகை சமந்தாவை சுற்றி வளைத்து.. முகம் சுளிக்க வைத்த ரசிகர்கள்! அப்போ நிதி அகர்வால், இப்போ இவரா?
சென்னை: சில நாட்களுக்கு முன்பு நடிகை நிதி அகர்வாலுக்கு ரசிகர்களால் நடந்த ஒரு தொந்தரவு வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. பிரபாஸ் நடித்த ராஜாசாப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வெளியே வந்தபோது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவரை நகர முடியாமல் தவிக்க வைத்தனர். அதேபோல ஒரு சம்பவம் இப்போது நடிகை சமந்தாவிற்கும் நடந்திருக்கிறது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர்கள், நடிகைகளின் மீது இருக்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு இடத்திற்கு ஏதாவது நடிகையோ, நடிகரோ வருகிறார் என்று சொல்லிவிட்டால் இருக்கிற வேலை எல்லாம் விட்டுவிட்டு மொத்தமாக அங்கே சென்று கூறி விடுகிறார்கள். அதிலும் சம்பந்தப்பட்ட நடிகர்கள், நடிகைகளுக்கே பயம் வருகிற மாதிரி சில ரசிகர்கள் செயல்பாடுகள் இருக்கிறது.

சில நடிகைகள், நடிகர்கள் சோசியல் மீடியாவில் ஏதாவது போஸ்ட் போட்டால் கூட இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? என்ற கமெண்ட்கள் அதிகமாக வரும் ஆனால் நடிகைகள் ஒரு இடத்திற்கு வருகிறார்கள் என்றால் அங்கு முண்டியடித்துக் கொண்டு அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதேபோலத்தான் சமீபத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான தி ராஜாசாப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிதி அகர்வாலுக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அந்த இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு நடிகை நிதி அகர்வால் தன்னுடைய காருக்கு செல்வதற்காக முயற்சி செய்தபோது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு நகர முடியாமல் இழுத்து துன்புறுத்தி இருந்தனர். இது பெரிய அளவில் சோசியல் மீடியாவில் பேசப்பட்டது.
அந்த சம்பவம் நடந்து சில நாட்களே ஆன நிலையில் இப்போது நடிகை சமந்தாவிற்கும் அதே போல நடந்திருக்கிறது. நேற்று ஒரு கடை திறப்பு விழாவில் சமந்தா கலந்து கொண்டு, நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக பலர் போட்டி போட அதில் ஒருவர் மீது ஒருவர் கீழே விழுந்து இருக்கின்றனர். சமந்தாவாலும் அங்கே இங்கே நகர முடியாமல் இருந்திருக்கிறார்.
அப்போது பாதுகாவலர்கள் சமந்தாவை மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் என்கிற போர்வையில் சிலர் ஏன் இப்படி மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications