சங்கீதாவுக்கு முன்பு விஜய்க்கு பார்த்த பெண் இவரா? மோகனின் கிளிஞ்சல்கள்! இது சூப்பர் மேட்டர்: பிரபலம்
சென்னை: வெள்ளி விழா நாயகன் என்று பெயரெடுத்த நடிகர் மோகன், அனைவருக்கும் பிடித்த ஹீரோவாக விளங்கியவர்.. ஆனால், திடீரென மோகனின் மார்க்கெட் சறுக்கிவிட்டது.. தொடர்ந்து 7 படங்கள் வசூலை தராமல் போனதால், மொத்தமாகவே சினிமாவிலிருந்து காணாமல் போனார் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், மோகனின் சறுக்கலுக்கு என்ன காரணம் என்பது குறித்தும் தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார்.
Recent Voice என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த பயில்வான் ரங்கநாதன், "பசி என்ற வெற்றிப்படத்தை எடுத்த டைரக்டர் துரை, கிளிஞ்சல்கள் என்ற படத்தை எடுத்திருந்தார்.. இதில்தான் மோகன் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.. இந்த படத்தில் பூர்ணிமா, மோகன் நடித்திருந்தனர்.. அதில் தான் நான் காமெடி வில்லனாக அறிமுகமானேன்.. மோகன் திக்கி திக்கி அதில் தமிழ் பேசுவார்.. அந்த படத்திலும் மோகனுக்கு சுரேந்தர்தான் பின்னணி குரல் கொடுத்தார்.. பூர்ணிமாவுக்கும் டப்பிங் குரல்தான் தரப்பட்டது.

ஜூலி ஐ லவ் யூ
பசி டைரக்டர் துரை அப்போது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்தார்.. அவர் வீட்டில் அப்போது போன்கூட கிடையாது. பக்கத்து வீட்டிலிருந்து போன் பேசுவார். ஆனாலும், கிளிஞ்சல்கள் படம் அபரிமிதமான வெற்றியை தந்தது.. மீண்டும் பசி இயக்குனர் துரை மலையாளத்தில், ஜூலி ஐ லவ் யூ என்ற படத்தை எடுத்தார்.. இந்த படமும் மலையாளத்தில் சக்கை போடு போட்டது. பூர்ணிமா ஜெயராமனுக்கு மலையாளத்தில் ரசிகர்கள் அதிகம்..
சபாஷ் டி.ராஜேந்தர்
அதேபோல, ஒருதலைராகம் படத்துக்கு பிறகு, டி.ராஜேந்தர் இசையமைத்தது, கிளிஞ்சல்கள் படத்துக்குதான். கிளிஞ்சல்கள் படத்தில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தின் வெற்றிக்கு டி.ராஜேந்தரின் இசையும் ஒரு காரணம். கிளிஞ்சல்கள் பட வெற்றி விழாவை நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தலைமையில் கொண்டாடினார் பசி டைரக்டர் துரை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கையால் விருது பெற்ற பெருமை எனக்கு, கிளிஞ்சல்கள் மூலமாக கிடைத்தது.
ஒருமுறை படப்பிடிப்பில், என்னுடன் சண்டைக்காட்சியில் நடித்தபோது, மோகனுக்கு நெற்றியில் ரத்தம் வந்தது.. அதைக்கூட பொருட்படுத்தாமல் நடித்தார்.
தாய்மாமன் சுரேந்தர்
ரஜினிகாந்த்தை போலவே , கன்னடத்திலிருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர் மோகன்.. அதனால், மோகனுக்கு தமிழ் தெரியாது, மோகனுக்கு தமிழ் தெரியாது என்ற விஷயமே இன்றுவரை பலருக்கும் தெரியாது.. அந்த அளவுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் எஸ்.என்.சுரேந்தர்..
விஜய்யின் தாய் மாமன் அதாவது ஷோபாவின் சகோதரர்தான் சுரேந்தர், இந்த சுரேந்தரின் மகளைதான் விஜய் திருமணம் செய்வதாகவும் இருந்தது.. ஆனால், சங்கீதாவை விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார்..
சுரேந்தர் சிறந்த பின்னணி பாடகரும்கூட.. சுரேந்தர் பேசினால் மோகன் பேசியது போலவே இருக்கும்.. மோகனுக்கு மார்க்கெட் குறைந்த காலத்தில், மோகனுக்கும், சுரேந்தருக்கும், திடீரென தகராறு வந்துவிட்டது. ஏனென்றால், மோகனின் வெற்றிக்கு தானும் ஒரு காரணம் என்று சுரேந்தர் பல பேட்டிகளில் சொல்லி வந்தார்..
மார்க்கெட் இறங்கியது
ஆனால் இதனை மோகன் ஏற்கவில்லை.. சுரேந்தர் குரல் கொடுத்ததால்தான், தனக்கு புகழ் கிடைத்தத என்பதை மோகன் ஏற்கவில்லை.. இதற்காகவே சொந்த குரலில் பேசி நடித்தார். ஆனால் மோகனின் சொந்த குரல் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இது மோகனின் மார்க்கெட்டை இன்னும் சறுக்கிவிட்டது.. தொடர்ந்து 7 படங்கள் வசூலை தராமல் போனதால், மார்க்கெட்டும் முற்றிலுமாக மோகனுக்கு போய்விட்டது.
இதைத்தவிர, அன்புள்ள காதல், சுட்ட பழம் என்ற படங்களை எடுத்தார்.. இரண்டுமே பிளாப் ஆகிவிட்டது.. இத்தனைக்கும் அன்புள்ள காதல் படத்தை தயாரித்து, இயக்கி அவரே நடித்திருந்தார்.. அப்போதும் படம் தோல்வியை தழுவியது. ஆனால், மோகன் பழகுவதற்கு இனியவர்.. பந்தா, திமிர் அவரிடம் கிடையாது. யார் வம்புக்கும் செல்ல மாட்டார்.. சர்ச்சைகளிலும் சிக்காத ஜென்டில்மேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications