பல்லாவரம் சந்தையில் சுத்திகிட்டு இருந்த சமந்தாவை மிஸ் பண்ணிட்டோமே! சந்தானம் கலகல பேட்டி!
சென்னை: பல்லாவரம் சந்தையில் சுத்திகிட்டு இருந்த சமந்தாவை நாம் சைட் அடிக்காமல் விட்டுவிட்டோமே என எனக்கு இப்போதுதான் ஃபீல் ஆகிறது என நடிகர் சந்தானம் நகைச்சுவையாக தெரிவித்தார். அது போல் சமந்தாவும் ஒரு பேட்டியிலும் சந்தானம் குறித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. இவர் தமிழில் பானா காத்தாடி மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா ஹீரோயினாக நடித்திருந்தார். அவர் சென்னையில் உள்ள பல்லாவரத்தைச் சேர்ந்தவர். அதனால் அவரை பல்லாவரத்து பொண்ணு என ரசிகர்கள் அழைப்பார்கள். பல்லாவரத்தில் பிறந்த ஒரு பெண் , விஜய், சூர்யா, நானி உள்ளிட்டோருடன் நடித்துள்ளார் என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் தெலுங்கில் நடித்த போது நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் 4 ஆண்டுகளே நீடித்தன. பிறகு இவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
நாக சைதன்யா , நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமந்தா, விவாகரத்துக்கு பிறகு நடித்த படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. அதிலும் டூ டுடூ, டூ டுடூ, டுட்டுடுடூ என்ற பாடல் வைரலானது.
அது போல் புஷ்பா படத்தில் இவர் ஆடிய கவர்ச்சி நடனமான ஊ சொல்றியா பாடலும் செம ஹிட்டடித்தது. இந்த நிலையில் சமந்தாவுக்கு தோல் நோய் ஏற்பட்டதால் வலியால் அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் சமந்தா- சந்தானம் பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
பழைய பேட்டி ஒன்றில் சந்தானம் குறித்து சமந்தா பேசுகையில், நண்பர்களுடன் சேர்ந்து எங்க ஏரியா பக்கத்தில்தான் சந்தானம் சுற்றி கொண்டிருப்பார். போற வர பெண்களை எல்லாம் சைட் அடிப்பார். என் ஸ்கூலுக்கு வந்து அங்குள்ள பெண்களையும் உஷார் செய்வார் என சிரித்தபடியே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சந்தானம் பேசுகையில், "நான் அந்த ஏரியாவில்தான் என் நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிளில் செல்வேன். அப்போது சமந்தா படித்துக் கொண்டிருந்த பள்ளியில் நிறைய அழகான பெண்கள் இருப்பார்கள். அவர்களை எல்லாம் சைட் அடிப்போம். ஆனால் பல்லாவரம் சந்தையில் சுற்றிக் கொண்டிருந்த சமந்தாவை எப்படி விட்டேன் என நினைத்தால் ஃபீல் ஆகிறது என தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications