பிரபல நடிகையை திருமணம் செய்ய பெண் கேட்ட "குமார்"? அதைவிடுங்க, உழைப்பால் உயர்ந்த நடிகர்: சபிதா ஜோசப்
சென்னை: சரத்குமாரை பொறுத்தவரை அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்.. ஜாலியாக பேசுவார்.. கார்த்திக், பிரபு போலவே, ஆங்கிலம் நன்றாக பேசுவார்.. அதனால், சரத்குமாரை அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அதனால்தான், அரசியல் கட்சியை அவரால் துவங்கி நடத்த முடிகிறது" என்றெல்லாம் சரத்குமார் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.
Realone யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "பெங்களூர் தினத்தந்தியில் பத்திரிகையாளராக வேலை பார்த்தவர் சரத்குமார்.. டிராவல்ஸ் ஏஜென்ஸி வைத்திருந்த சாயா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். சாயா, வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.. சரத்குமாரின் தமக்கை, தினகரன் எடிட்டரை திருமணம் செய்தார்.. இதனால், சரத்குமாரின் குடும்பமே பாரம்பரியமான பத்திரிகை குடும்பமாகும்.

இதற்கு பிறகு சென்னையில் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்றார்.. முதன்முதலில் தயாரிப்பாளராக சினிமாவுக்குள் நுழைந்தார்.. தயாரிப்புக்கு பிறகு நடிக்க வந்தார். புலன்விசாரணை படத்தில் நடித்ததுதான், சரத்குமாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது,. அதேபோல கேஎஸ் ரவிக்குமாரின் படங்களில் நடித்து, கிராமங்களில் கவனிக்கக்கூடிய ஹீரோவாக வளர்ந்தார்.
சூரிய வம்சம் படத்தில் நக்மா?
ஆனால், சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் சரத்குமார்.. ஆரம்பத்தில் நக்மாவுடன் கிசுகிசுக்கப்பட்டார்.. அதனால்தான், சூரிய வம்சம் படத்தில் நக்மாவை ஆர்பி சவுத்ரியிடம் சிபாரிசு செய்தார்.
ஆனால், நக்மா கேட்ட 20 லட்சம் சம்பளத்தை தன்னால் தர முடியாது, வெறும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே தர முடியும் என்று ஆர்பி சவுத்ரி கறாராக சொன்னாராம். கிட்டத்தட்ட 60 டைரக்டர்களை அறிமுகப்படுத்தியவர் ஆர்பி ரவுத்ரி. தன்னுடைய நிறுவனத்தில் அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட்டாக்கியவர். நக்மா கேட்ட சம்பளத்தை தர முடியாத காரணத்தினால்தான், தேவயானியை அந்த படத்தில் புக் செய்தாராம்.
புரளி - கிசுகிசு
பிறகு பேண்டு மாஸ்டர் என்ற படத்தில் நடிகை ஹீராவுடன் கிசுகிசுக்கப்பட்டார் சரத்குமார்.. காதல் கோட்டை உள்ளிட்ட படங்களில் எல்லாம் நடிகர்களுடன் நெருக்கமான சீன்களில் நடிக்கக்கூடாது என்றெல்லாம் வார்னிங் செய்தாராம் சரத்குமார். வேட்டியை மடிச்சி கட்டு உள்ளிட்ட படங்களில் நக்மாவுடன் நடித்தபோதும், இப்படியெல்லாம் நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டாராம்.
இதை நக்மா எதிர்த்து கேட்டதாகவும், அதற்கு பிறகு, தமிழ் திரையுலகை விட்டே நக்மா விலகிவிட்டதாகவும், அதற்கு காரணமே சரத்குமார் என்றும் அந்த காலத்தில் சலசலக்கப்பட்டது. அப்போது விஜய்குமார் குடும்பமும் சரத்குமாருக்கு பக்க பலமாகவும், ஆதரவாகவும் இருந்தார்கள்.
தேவயானி - திருமணம்
பிறகு, தேவயானியை திருமணம் செய்ய விரும்பி, அவரது அம்மாவிடம் சரத்குமார் பெண் கேட்டதாகவும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் மூலம் நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், தேவயானி அந்த நேரத்தில், வளரும் நடிகை என்பதால், இந்த திருமணத்தை அவரது அம்மா ஏற்கவில்லையாம்.
சரத்குமாரை பொறுத்தவரை அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்.. ஜாலியாக பேசுவார்.. கார்த்திக், பிரபு போலவே, ஆங்கிலம் நன்றாக பேசுவார்.. அதனால், சரத்குமாரை அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அதனால்தான், அரசியல் கட்சியை அவரால் துவங்கி நடத்த முடிகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications