என் புருஷன் தான் அழகு! கண்ணீருடன் தேவயானி சொன்ன வார்த்தை! அந்த பட டயலாக் சொன்ன ராஜகுமாரன்! செம காதல்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சி, நடிகை தேவயானி மற்றும் இயக்குனர் ராஜகுமாரன் தம்பதியரின் உணர்வுபூர்வமான அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. இந்த வாரம் நடைபெற்ற 'டெடிகேஷன் ரவுண்டு' நிகழ்ச்சியில், மகள் இனியா தனது தந்தைக்காகப் பாடி, பெற்றோரின் இதயத்தைத் தொட்டார்.

ராஜகுமாரனின் நெகிழ்ச்சியான கதை
முதல்முறையாக 'சரிகமப' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் ராஜகுமாரன், மேடையில் பேசும்போது தனது கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். "நான் சின்ன பையனா இருக்கும்போது, ஸ்கூலுக்குப் போறதுக்காக எங்க அப்பா அஞ்சு பைசா தருவாங்க. அந்தப் பணத்தைச் சேர்த்து வைத்து, பக்கத்து வீட்டு அக்காவிடம் கொடுத்து, 'நாளை நமதே', 'எங்கள் தங்க ராஜா' போன்ற படங்களின் பாட்டு புத்தகங்களை வாங்கிட்டு வரச் சொல்லுவேன். ஒருநாள் அப்பா அதைப் பார்த்து, மாடுகளை அடிக்கிற சாட்டையை வச்சு என்ன அடிச்சுப் பிச்சு எடுத்துட்டாரு," என்று கூறினார்.
"ஆனால் பல வருடங்கள் கழித்து, நான் இயக்கிய 'நீ வருவாய் என' பாடலின் பாட்டுப் புத்தகம் அதே கடையில் தொங்கிச்சு. இன்று என் மகள் இனியாவால் நான் இந்த மேடையில் நிற்கிறேன். என்னுடைய ஒரு சிறந்த தந்தை என்று இந்த 'சரிகமப' மேடை என்னை உணர்த்தி இருக்கிறது. அதற்கு என் மகளுக்கு நன்றி," என்று நெகிழ்ந்தார்.
தேவயானியின் ஆனந்தக் கண்ணீர்
ராஜகுமாரன் பேசி முடித்ததும், "எல்லா புகழும் உங்களுக்கு தான் அப்பா," என்று இனியா கூற, "புகழ் எல்லாமே கடவுளுக்கு தான், அது உன் அம்மாவுக்கு தான்," என்று ராஜகுமாரன் சொன்னதும், தேவயானி எமோஷனலாகிவிட்டார்.
பின்னர் மேடைக்கு வந்த தேவயானி, "என்னுடைய கணவர் ராஜகுமாரன் தான் எனக்கு எப்போதும் அழகு. அவர் சிறந்த கணவர், சிறந்த அப்பா, சிறந்த மனிதர். அதனால அவரை எனக்கு எப்போதுமே பிடிக்கும். எனக்கு எல்லா சூழ்நிலையிலும் சப்போர்ட்டா இருந்திருக்காரு. நான் ஒவ்வொரு இடத்திலும் மேலே வந்து கொண்டிருப்பதற்கு அவர்தான் காரணம்," என்று சொல்லும்போதே கண்ணீர் விட்டார்.
காதலுடன் நினைவுபடுத்திய ராஜகுமாரன்
தேவயானி எமோஷனலாகி அழுததைக் கண்ட ராஜகுமாரன், "அழாத," என்று சொல்ல, தேவயானி, "நீங்க இப்போ அழாதனு சொல்லக்கூடாது. இது ஆனந்தக் கண்ணீர்," என்று கூறுகிறார். அதற்கு ராஜகுமாரன், "நீங்க இதை கேட்கும்போது ஒரு டயலாக் சொல்லியிருக்கலாம். 'எப்போதுமே புருஷன் அழகா இருக்கணும் என்பதை விட, புருஷன் கண்ணுக்குப் பொண்டாட்டி அழகா இருக்கணும்'னு சொல்லியிருக்கலாம். இந்த டயலாக், 'காதலுடன்' படத்தில் நீங்க பூ கட்டிட்டு இருக்கும்போது சொன்ன டயலாக் தான்," என்று சிரித்துக்கொண்டே கூற, மொத்த அரங்கமும் அவர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, ராஜகுமாரன் மற்றும் தேவயானி தம்பதியரின் ஆழமான அன்பையும், புரிதலையும் வெளிப்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications