லுங்கி ஆடையுடன் சரிகமப மேடைக்கு வந்த திறமைசாலி மீனவர்.. 5வது ஃபைனலிஸ்ட் ஆவாரா நாகார்ஜுனா?
சென்னை: இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் ஜீ தமிழ் சேனலில் சரிகமப நிகழ்ச்சியில் 5ஆவது ஃபைனலிஸ்ட்டாக நாகார்ஜுன் தேர்வு செய்யப்பட வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
நடனம், பாட்டு உள்ளிட்ட பன்முகத்திறமைகளை இந்த உலகிற்கு அறிய வைக்க பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை டிவி சேனல்கள் நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழில் சரிகம எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் இரு சீசன்கள் முடிவடைந்துவிட்டது. இதில் மூன்றாவது சீசன் ஜீ தமிழில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஜட்ஜ்களாக ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ரம்யா நம்பீசன் ஆகியோர் உள்ளனர்.
இந்த சீசனில் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பின்னணி உள்ளது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் நாகார்ஜுன். டிவி நிகழ்ச்சி என்றாலும் பலர் விதவிதமான ஆடைகளை அணிந்தாலும் இவர் லுங்கி அணிந்து கொண்டே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவரை பாராட்டாத சிறப்பு விருந்தினர்களே இருக்க மாட்டார்கள். கேள்வி ஞானத்தால் பாடல்களை அற்புதமாக பாடுவார். இவர் ஒரு முறை ஹரிஹரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது குறுக்கு சிறுத்தவளே பாடலை பாடி ஹரிஹரனையே ஆச்சரியப்பட வைத்தார். அது போல் மலையோரம் வீசும் காற்று பாடலை சிறப்பாக பாடி நடுவர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்றார்.
அது போல் முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே என்ற பாடலை அச்சு அசலாக பாடினார். அவர் பாடிய போது அத்தனை ஃபீலிங்!. கேள்வி ஞானத்தால் இப்படியெல்லாம் பாடமுடியுமா என எண்ணத் தோன்றுகிறது. எங்குமே ஸ்ருதி பிசிறு தட்டாமல் பாடுவதில் வல்லவர். இவருக்கு ஸ்டான்டிங் அப்லாஸ் கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நாகார்ஜுன் மிகவும் கஷ்டங்களை தாண்டியே இந்த இடத்திற்கு வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் மீன் பிடிக்க சென்ற அவரது தந்தை கடலுக்கு போனவர் வீடு திரும்பவே இல்லை. அவருடைய தந்தைக்கு மகனை பாடகராக்கி பார்க்க ஆசையாம். ஆனால் இன்று உலகத் தமிழர்களே கொண்டாடும் அளவுக்கு புகழ்பெற்ற நாகார்ஜுனாவின் வளர்ச்சியை பார்க்க அவருடைய தந்தை இல்லை.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே நாகார்ஜுன் இறுதி போட்டிக்கு செல்வார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் சரிகமப சீசன் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. அதில் 4 ஃபைனலிஸ்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அக்ஷயா, ஜீவன் பத்ககுமார், புருஷோத்தமன், லக்ஷனா ஆகிய 4 பேர் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
இதில் நாகார்ஜுன் பெயர் இல்லாதது அவருடைய ரசிகர்களிடையே வருத்தமடையச் செய்துள்ளது. இதனால் 5ஆவது ஃபைனலிஸ்ட் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாகார்ஜுனாவின் முயற்சிக்காகவாவது இறுதி போட்டியில் அவரையும் இணைக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கேள்வி ஞானத்தில் இப்படி பாடுவது சாதனைக்குரிய விஷயம், அதை அங்கீகரிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. இல்லை அவரை வைல்ட் கார்டு என்ட்ரியில் பாட வைத்து அதில் அவரது திறமை நிரூபிக்கப்பட்டால் அவரை இறுதி போட்டியாளர்கள் லிஸ்டில் சேர்க்கலாம் என்கிறார்கள். விதிகளை தளர்த்தி 5ஆவது இறுதி போட்டியாளர் தேர்வு செய்யப்படாவிட்டாலும் இசையமைப்பாளர்கள் யாராவது அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications