Sembaruthi Serial: கல்யாணமே செல்லாதுங்கறேன்..தலை தீபாவளியா?
சென்னை: ஊரார் உற்றார் உறவினர் பார்க்க கல்யாணம் நடக்கல..கோயிலில் கட்டிய தாலி...இன்னும் தம்பதியராகவும் வாழலை... கல்யாணம் நடந்தது பெத்த அம்மாவுக்குத் தெரியலை.
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில்தான் மேற்கண்ட கதை.திருட்டு கல்யாணம் செய்துக்கிட்டவங்க ஆதியும், பார்வதியும். ஒரு தவிர்க்க முடியாத சூழலில் நடந்த கல்யாணம்தான்.
இருந்தாலும் ஆதியின் அப்பா அகிலாண்டேஸ்வரி அம்மாவின் புருஷனுக்கு இந்த கல்யாணம் நடந்தது தெரியும். அதனால், தங்கள் வீட்டுடிரைவரிடம் போயி, உன் மாப்பிளையை தலை தீபாவளிக்கு அழைன்னு சொல்றாங்க.

அம்மா ஏத்துக்குவாங்களான்னு
என்ன ஐயா சொல்றீங்க..இந்த கல்யாணமே செல்லாது... அகிலாம்மா ஏத்துக்குவாங்களான்னு எனக்கு இன்னும் சந்தேகமா இருக்கு.நீங்க என்னடானா தலை தீபாவளிக்கு மாப்பிள்ளையை அழைங்கன்னு சொல்றீங்கன்னு கேட்கிறார் பார்வதியின் அப்பா சுந்தரம்.

அகிலா நாளைக்கே
அகிலா நாளைக்கே இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டாங்கன்னு வச்சுக்கோ சுந்தரம்.ஆனல், தலை தீபாவளி பிறகு வருமான்னு ஒரு கேள்வி கேட்கறார் ஆதியின் அப்பா. ஐயா எனக்கு அதெல்லாம் ஒன்னும் சொல்ல தெரியாது ஐயா. அகிலாம்மாவுக்கு தெரியாமல் தப்புக்கு மேல தப்பை என்னால் செய்ய முடியாதுன்னு சொல்றார் சுந்தரம்.

கோயிலில் பூ
சுந்தரம் உன் மன திருப்திக்கு கோயிலில் பூ போட்டு பார்க்கலாம். இந்த கல்யாணத்தை அகிலா ஏத்துக்குவான்னு தெய்வம் சொல்லுச்சுன்னா, அதுக்கு உரிய பூவைத் தரட்டும். ஏத்துக்க மாட்டான்னா அதுக்கு உரிய பூ தரட்டும். பிறகு ஆதியை தலை தீபாவளிக்கு அழைக்கறதா வேணாமான்னு நீ முடிவு எடுன்னு சொல்றார் ஆதியின் அப்பா.

ஒரு வழியாக சுந்தரம்
சுந்தரம் ஆதியின் அப்பா தந்த இந்த பிளானுக்கு ஒரு வழியாக சம்மதிச்சு, சரி ஐயா நாளைக்கு கோயிலுக்கு போகலாம்னு சொல்றார்.பார்வதி மனசு தாங்காமல் தாயே நாளைக்கு நீ நல்ல வாக்கு குடுத்தாதான் என் அப்பா மாமாவை தலை தீபாவளிக்கு அழைப்பார்னு சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கா பார்வதி.
கதை வேடிக்கையாத்தான் போகுது. அந்த வேடிக்கையைத்தானே நாமும் விரும்பிப் பார்க்கறோம்?!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications