குழந்தைகளை வைத்து இப்படியா பண்ணுறது? ஆபத்தானது! ஆலியா மானசாவை விமர்சிக்கும் ரசிகர்கள்
சென்னை: சீரியல் நடிகை ஆலியா மானசா தன்னுடைய குழந்தைகளோடு வெளியிட்ட வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் தன்னுடைய கழுத்தில் போட்டு இருக்கும் துப்பட்டா மூலமாக குழந்தைகளின் கைகளை கட்டி இருக்கும் ஆலியா மானசா சேட்டை செய்யும் குழந்தைகளை நான் இப்படித்தான் சமாளிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதைப் பார்த்த பலர் ஆலியாவை திட்டி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக இளம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த ஆலியா மானசா முதல் சீரியலிலேயே திரைப்பட கதாநாயகிக்கு இருக்கும் அளவிற்கு அதிக அளவில் ரசிகர்களை உருவாக்கி விட்டார். பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து ஆலியா மனசா திடீரென்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தியை கூறியிருந்தார்.

அது வேறொன்றுமில்லை அந்த சீரியலில் அவரோடு ரீலாக நடித்த சஞ்சீவை தான் ரியலாக காதலிப்பதாக கூறியிருந்தார். தன்னுடைய காதலை ரசிகர்களிடம் பகிர்ந்த ஒரு சில நாட்களிலேயே திருமணத்தை முடித்துவிட்டு ஆலியா மானசா முதல் சீரியல் முடிவடையும் போது ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் ஆகிவிட்டார்.
அதைத் தொடர்ந்து சில மாதங்கள் ரெஸ்ட் எடுத்த ஆலியா மானசா விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். அவருடைய கணவர் சஞ்சீவ் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் மற்றொரு சீரியலில் நடித்து வந்தார் அதுவும் முடிவடைந்ததும் சன் டிவியில் கயல் சீரியலில் கதாநாயகனாக மாறிவிட்டார். அப்போது ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகி இருந்தார்.
பிறகு இரண்டாவது குழந்தையும் பிறந்ததும் உடல் எடை கூடி இருந்த இவர் உடற்பயிற்சி மூலமாக மீண்டும் பழைய நிலைக்கு மாறி சன் டிவியில் இனியா சீரியலில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருந்தார். விஜய் டிவி நடிகையான இவர் சன் டிவியில் அறிமுகமானதும் அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. ஆனாலும் சீரியல் தொடங்கி இப்போது வருடங்களை தாண்டிவிட்டது.
இந்த நிலையில் ஆலியா மானசா தன்னுடைய மகன் மற்றும் மகளோடு சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் சுடிதார் போட்டிருக்கும் ஆலியா அதற்கான ஷாலை தன்னுடைய கழுத்தில் போட்டு இரண்டு முனையையும் இரண்டு குழந்தைகளின் கைகளில் கட்டி இருக்கிறார். பிறகு அந்த ரெஸ்டாரண்டுக்குள் குழந்தைகளை முன்னே நடக்க விட்டு பின்னாடி ஆலியா வந்து கொண்டிருக்கிறார்.
சேட்டை செய்யும் குழந்தைகளை இப்படித்தான் சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது என்று ஆலியா ஜாலியாக அந்த வீடியோவை பகிர அது இப்போது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் கைகளை ஆலியா இப்படி கட்டி இருக்கிறாரே ஒருவேளை கைகளை வேகமாக இழுத்தால் குழந்தைகளுக்கு வலி ஏற்படுவதற்கோ அல்லது மணிக்கட்டில் பிரச்சனை ஏற்படுவதற்கோ வாய்ப்பு இருக்கிறது என்று சிலர் கூறி வருகிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் இரண்டு குழந்தையும் அந்த பக்கமும் இந்த பக்கமும் போனால் நீங்கள் கழுத்து இறுகி போய் சேர்ந்து விடுவீர்கள் என்று ஆலியாவை பயமுறுத்துகின்றனர். அதுபோல இன்னும் ஒரு சிலர் குழந்தைகளை இப்படி நாய்களைப் போன்று கட்டி வைத்திருப்பது சரியான முறை கிடையாது என்றும் கூறி வருகிறார்கள். இப்படியாக இப்போது ஆலியா மானசா வீடியோவிற்கு கருத்துக்கள் குவிந்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications