சரண்யாவின் வெள்ளை மனசுக்குள் கடவுள்.. உருக வைக்கும் உதவி!
சென்னை: சீரியலில் கதாநாயகியாக நடிப்பது ஒன்றும் பெரிதல்ல நிஜத்திலும் அந்த அளவில் வாழ்வதுதான் பெரியது .
என்ன சம்பாதித்தாலும் தனக்கு போகத்தான் தான தர்மம் என பலர் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த லாக்டோன் நேரத்திலும் தனது மனசை வெளிப்படுத்தியுள்ளார் சரண்யா துராடி.
தனக்கு படப்பிடிப்பு எதுவுமே இல்லாமல் வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட தற்போது ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா செய்த செயல்தான் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

டிவி தொகுப்பாளர்
சரண்யா துரோடி முதன்முதலில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு நெஞ்சம் மறப்பதில்லை என்னும் சீரியலில் துறுதுறு கேரக்டரில் அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்தவர். தன்னுடைய அழகாலயும் போல்டான கேரக்டரையும் மிக்ஸ் பண்ணி இந்த சீரியலில் அதே துடுக்குத்தனம் தோடு இவரது நடிப்பு இருப்பதால் அனைவரின் மனதிலும் பசைபோல ஒட்டிக் கொண்டார் .

தைரியம்
பெண்ணென்றால் இவர் போல தான் தைரியமாக இருக்க வேண்டும் என அனைவரும் சொல்லும் வகையில் இவருடைய கேரக்டர் அமைந்திருந்ததால் முதல் சீரியலே இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. அந்த சீரியலில் வெற்றிக்கு பிறகு இவருக்கு ஆயுத எழுத்து சீரியல் கலெக்டர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .இந்த சீரியலில் இவருக்கு முன்பு வேறு ஒரு நடிகை நடித்திருந்தாலும் அவர் பாதியிலேயே விலகி விட்டதால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்து .

ரசிகர்கள் மனதில் இடம்
ஒரு சீரியலில் பொதுவாக பாதியில் வந்த நடிகை அந்த அளவிற்கு சீரியலோடு எளிதாக செட் ஆகிவிட முடியாது .ஆனால் இவர் இந்த சீரியலோட அப்படியே ஒட்டி ரசிகர்களின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார் .போல்டான கேரக்டராக இருந்தாலும் திருமணம் முடிந்த பிறகு பெண்ணுக்கு இருக்கும் கடமைகளையும் இவர் கதையின்படி செய்திருந்தாலும் பல ரசிகர்கள் ஒரு கலெக்டராக இருந்துகொண்டு இந்த அளவிற்கு இறங்கிப் போக வேண்டாமென இவருக்கு கமெண்ட் போட்டு வந்தனர் .

ரசிகர்கள் ஏமாற்றம்
ஆனால் இவர் அது எல்லாம் நடிப்பு தாங்க டைரக்டர் சொல்வதை தான் நான் நடிக்க முடியும் என்னுடைய விருப்பத்திற்கு நான் நடிக்க முடியாது என கூறியிரந்தார் .ஆனாலும் இந்த சீரியல் திடீரென முடிந்ததும் இவர் மட்டுமல்ல இந்த சீரியல் ரசிகர்களும் ரொம்பவே ஏமாற்றம் அடைந்து இருந்தனர். ஆயுத எழுத்து சீரியலுக்கு பிறகு இவருக்கு எந்த புது சீரியல் வாய்ப்புகளும் வராததால் வீட்டில் தான் இருந்து கொண்டிருக்கிறார்.

காதலருடன் போட்டோஷூட்
வீட்டில் இருக்கும் நேரத்தில் தனது காதலருடன் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடு் இவர் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார். ஃபிரியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர் .தற்போது இவருடைய ரசிகர்கள் பெருமை கொள்ளும் வகையில் இவர் இந்த லாக்டோன் நேரத்தில் பசித்திருக்கும் மக்களுக்கு தன்னால் முடிந்த வகையில் வீட்டில் சமைத்த உணவினை வழங்கிவருகிறார்.

ஈர மனசு
இவருடைய இந்த குணத்தை தெரிந்து இவருக்கு பலரும் தன்னால் முடிந்ததை இவருடன் இணைந்து செய்ய முன்வந்து இருக்கின்றனர் .அவர்களுக்கு நன்றி தெரிவித்து தான் உணவு கொண்டுசெல்லும் போட்டோஸ் களை பதிவிட்டு வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஒரு நடிகை கண்ணடித்தாள் மட்டும்தான் வைரலாக பரவி வருகிறது .தவிர ஒருவர் உதவி செய்தால் அது யாரும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். பலரும் ஈசியாக அதனை கடந்து விடுகின்றனர் .

குவியும் பாராட்டு
ஆனால் ஒரு சிலர் இவரின் இந்த நல்ல செயலை பாராட்டி வருகின்றனர். அதனால்தான் அவர்கள் தங்களால் முடிந்ததை இவருக்கு பொருளாகவோ பணமாகவோ அனுப்பிவைத்து இவரால் பலபேர் பசியைப் போக்க வைத்துள்ளனர் என தன்னுடைய போஸ்டில் தெரிவித்திருக்கிறார். அதில் கோராணா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையை இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன் .லாக்டோன் என்பதால் தினமும் நானே வண்டியை எடுத்துக் கண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன்.

மாஸ்க்கின் துணையுடன்
இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணை என்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச்செய்தி கலக்கத்தை கொடுக்கிறது. பசித்த முகத்தில் தெரியும் நன்றியும் அன்புமே இந்த கடினமான சூழலை கடக்க உதவுகிறது. நல் உள்ளங்கள் சிலர் தங்களால் ஆன நிதி அனுப்பி உணவளிக்கும் என் கரங்களுக்கு வலு சேர்த்து இருக்கிறீர்கள். அத்தனை பேருக்கும் என் மரியாதையும் பேரன்பும் .தொடர்ந்து பசியாற்றுவோம் என அந்தப் போஸ்டில் தெரிவித்திருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications