பாடகி கல்பனா தூக்க மாத்திரையை சாப்பிட்டு.. மன அழுத்தமா? தற்கொலை முயற்சி? கல்பனாவின் மகள் பரபர பேட்டி
சென்னை: பிரபல பாடகி கல்பனாவின் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து, தற்போது அந்த வெண்டிலேட்டரை டாக்டர்கள் எடுத்துள்ளார்களாம். இந்நிலையில், கல்பனாவின் மகள் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
பிரபல பாடகி கல்பனா, நேற்று முன்தினம், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதையடுத்து, சுயநினைவின்றி படுக்கையறையில் விழுந்துள்ளார்.. இதையடுத்து, கல்பனாவை போலீசார் மீட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடந்து, ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக காலையில் தகவல் வெளியானது.

கல்பனாவின் உடல்நிலை நிலைகுலைந்திருந்தாலும், வென்டிலேட்டரில் இருந்து அவர் வெளியே கொண்டுவரப்பட்டு, சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், கல்பனாவின் உடல்நிலை சற்று தேறி வருவதாகவும் மருத்துவ தகவல்கள் தற்போது கூறுகின்றன.
சுயநினைவுக்கு திரும்பிய கல்பனா
முக்கியமாக கல்பனா சுயநினைவுக்கு திரும்பியிருக்கிறாராம்.. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபிறகு, தற்போது வெண்டிலேட்டரை எடுத்துள்ளனர்.
மற்றொருபுறம் கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் எதுவுமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. போலீசாரும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
போலீசாரின் தீவிரமான விசாரணை
எனவே, கல்பனா ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்ற ஆய்வு நடந்து வருகிறது. சொந்த பிரச்சனை காரணமாக, மன உளைச்சலால் இப்படி முடிவை எடுத்திருக்கலாம் என்று யூகமாக சொல்லப்படுகிறது. மற்றொருபுறம், கல்பனாவின் கணவர் மீது சந்தேகங்கள் நிறைய இருப்பதால், அவரது செல்போன் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், கல்பனாவின் மகள் திடீரென செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.. தன்னுடைய அம்மா தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்..
தற்கொலை முயற்சி கிடையாது
செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா மகள், "என் அம்மா எல்எல்பி படித்தவர்.. பிஎச்டி முடித்தவர். இது தற்கொலை கிடையாது, மன அழுத்தத்திற்காக தூக்கு மாத்திரை அதிகமான அளவில் பயன்படுத்தியதால் இது நடந்தது. டாக்டர்கள் பரிந்துரைந்த மாத்திரையை தான் சாப்பிட்டுள்ளார்.. அது சற்று அதிகமாகிவிட்டது.. மற்றபடி, இதை தவறாக யாரும் சித்தரிக்க வேண்டாம். சில நாட்களில் அம்மா வீடு திரும்புவார்.. எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications