சிறகடிக்க ஆசை: விஜயாவின் ஆணவத்திற்கு கிடைத்த அடி.. அசிங்கமாக சிக்கும் மனோஜ்! முத்து காட்டிய வீடியோ ஆதாரம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல், தனது எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்றைய எபிசோடில், விஜயாவின் ஏமாற்று வேலைகள் அம்பலமாகின. அதே சமயம் மனோஜ் தன்னுடைய நண்பன் கொடுத்த ஐடியாவை வைத்து புது ப்ளான் போடுகிறார். ஆனால் அது அவருக்கு ஆப்பு வைக்க போகிறதா இல்லையா என்று விரிவாக பார்க்கலாம்.

விஜயாவின் நாடகம்
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், விஜயா தன்னை ஒரு நல்ல மனிதராகக் காட்டிக்கொள்ள போட்ட நாடகம் எல்லாம் அம்பலமானது. பிச்சைக்காரர் வேடத்தில் வந்த முத்து, விஜயாவிடம் சாப்பாடு கேட்க, விஜயா கோபத்துடன் கம்பால் அவரை அடித்து விரட்டினார். இதை மீனா வீடியோவாக எடுத்தார். பிறகு, தனது மகனைப் படிக்க வைக்கப் பணம் கேட்ட ஒரு ஏழைப் பெண்ணையும் விஜயா அசிங்கப்படுத்தி விரட்ட, அதையும் முத்து வீடியோ எடுத்து வைத்துக் கொள்கிறார்.
இதற்கிடையில், விஜயாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வந்த பெண்மணி, விஜயாவின் பொய்யான பேச்சுகளுக்கு மயங்கிப் போனார். "நான் அன்னதானம் செய்கிறேன், குழந்தைகளைப் படிக்க வைக்க உதவி செய்கிறேன்" என்றெல்லாம் விஜயா பெருமையாகப் பேச, அந்தப் பெண், "உங்களுக்குத்தான் டாக்டர் பட்டம் கிடைக்கணும்" என்று பாராட்டி, கையெழுத்திடக் கேட்டார்.
சரியான நேரத்தில், முத்து தனது போனில் இருந்த வீடியோக்களை அவருக்குப் போட்டுக் காட்ட, உண்மையை அறிந்த அந்தப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார். "என்ன விஜயா இதெல்லாம்? இப்படி பொய் சொல்லி ஏமாத்தி இருக்கீங்க. உங்களுக்கு டாக்டர் பட்டம் வாங்கித் தந்திருந்தால் நான் தான் அசிங்கப்பட்டு இருப்பேன்" என்று கோபமாகப் பேசிவிட்டு, "இனிமே உன் வீட்டுப் பக்கமே வரமாட்டேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். டாக்டர் பட்டம் பறிபோன கோபத்தில் விஜயா அதிர்ச்சியில் நின்றார்.
குடும்பத்தின் எதிர்ப்பு
வீட்டிற்கு வந்த விஜயா, "நான் டாக்டர் பட்டம் வாங்குவது பிடிக்கல, அதனால்தான் இப்படி பண்ணி இருக்காங்க" என்று கோபமாகப் பேசினார். அதற்கு அண்ணாமலை, "நீ நேர்மையா ஒரு விஷயம் பண்ணா எல்லாரும் பாராட்டுவாங்க, நீ பொய் சொல்லி இதை செய்யணும்னு எந்த அவசியமும் இல்லை" என்று அட்வைஸ் செய்தார். ரவி, "இப்போ கிடைச்சாலும் அது எல்லாம் பொய்னு ஒரு நாள் தெரிஞ்சா, திருப்பி வாங்கிட்டுப் போயிடுவாங்க. இது அதைவிட அசிங்கமா இருக்கும்" என்று விஜயாவின் செயலை விமர்சித்தார். பிறகு அனைவரும் செல்ல, விஜயா மீனாவிடம் சண்டை போட்டு, "எனக்கு ஒரு காலம் வரும்" என்று மிரட்டிவிட்டுச் சென்றார்.
மனோஜின் புதிய சதித்திட்டம்
இதே நேரத்தில், மனோஜ் தனது நண்பருடன் சேர்ந்து ராணிக்கு எதிராகப் புதிய சதித்திட்டம் தீட்டினார். ராஜா வெளியில் போகும் நேரத்தைத் தெரிந்துகொண்ட மனோஜ், ராணி வீட்டிற்கு மல்லிகைப் பூவுடன் சென்று தவறாக நடக்க முயன்றார். அதைப் பார்த்த ராணி கத்தி ஆட்களைக் கூப்பிடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
ஏற்கனவே முத்து கொடுத்த ஐடியாவை சரியாக செய்யாமல் சொதப்பி ராணி மற்றும் ராஜாவிடம் வீடியோ ஆதாரத்தோடு சிக்கி இருக்கும் மனோஜ்க்கு இப்போ பெரிய பிரச்சனை வரப்போகிறது. இந்த பிரச்சனையில் இருந்து வழக்கம் போல முத்துதான் காப்பாற்றப் போகிறார். ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications