Siragadikka Aasai : சீதாவை குழப்பிய அருண்! - மனோஜ் கைக்கு வந்த ரோகிணி பற்றிய ஆதாரம்! ஆனால் டுவிஸ்ட் இருக்கு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், குடும்ப உறவுகள், குழப்பங்கள் மற்றும் திடீர் திருப்பங்களுடன் பரபரப்பாக அமைந்தது. க்ரிஷ் விவகாரத்தால் ஒருபுறம் குழப்பம் நீடிக்க, மறுபுறம் அருணின் பொய்யால் மீனா மற்றும் சீதாவுக்கு இடையே விரிசல் உருவாகிறது.

க்ரிஷ்-ரோகிணி மோதல்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், ரோகிணியின் மகன் க்ரிஷ், தன்னுடன் வந்துவிடுமாறு ரோகிணியிடம் அடம் பிடிக்கிறான். இதனால் பொறுமை இழந்த ரோகிணி அவனை அடிக்கச் செல்கிறார். அப்போது, அங்கு வந்த மகேஷ், "உன்னால் உன்னுடைய அம்மா அழுகிறார். இது உனக்கு பிடிக்குமா?" என்று க்ரிஷை சமாதானப்படுத்தி, அவனை அனுப்பி வைக்கிறார். மகேஷின் இந்தப் பேச்சு, க்ரிஷை அமைதிப்படுத்த உதவுகிறது.
அருணின் பொய் மற்றும் முத்துவின் உருக்கம்
மறுபக்கத்தில் முத்து, மீனாவிடம் அருணை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றியதை சொல்கிறார். அதற்கு மீனா நான் இந்த விஷயத்தை சீதாவிடம் சொல்கிறேன் என்று சொல்ல, "அருண் இன்னும் என்னை எதிரியாகவே பார்க்கிறான். நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று முத்து உணர்ச்சிபூர்வமாகப் பேசுகிறார்.
இன்னொரு பக்கம், அருண் தலையில் கட்டு போட்டு வந்ததை பார்த்ததும் சீதா பதறி போய் என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார் முதலில் சொல்ல மறுக்கும் அருண் பிறகு முத்துதான் ஆள் வைத்துத் தன்னை அடித்ததாக சீதாவிடம் பொய் சொல்கிறான். சீதா அதை நம்ப மறுக்க, அருண் தந்திரமாகப் பேசி அவளை நம்ப வைக்கிறான். இதனால் சீதா குழப்பம் அடைகிறாள். என்கிட்ட நல்ல பேரு வாங்குவதற்காக தான் முத்து ஆள் செட் பண்ணி என்னை அடிச்சாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அவருடைய அம்மாவும் நம்பி விடுகிறார். சீதாவிடம் முத்துவை திட்டிக் கொண்டிருக்கிறார்.
மனோஜ் - ரோகிணிக்கு வந்த அதிர்ச்சி
அடுத்ததாக மனோஜின் ஷோரூமுக்கு வந்த அவருடைய நண்பர், ஷோரூம் திறப்பு விழாவில் தான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட புகைப்படங்களை மனோஜிடம் காட்டுகிறார். மனோஜ் அந்தப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதில் க்ரிஷ் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரோகிணி, உடனடியாக அந்தப் புகைப்படங்களைப் பறிக்கிறார். அவசரமாகப் பார்த்தபோது, அதில் க்ரிஷ் இருப்பது உறுதியாகிறது. எனவே, அந்தப் புகைப்படங்களை யாருக்கும் தெரியாமல் கிழித்து விடுகிறார் ரோகிணி.
சீதாவின் சந்தேகம்
அருணின் பேச்சைக் கேட்டு குழப்பம் அடைந்த சீதா, மீனாவுக்கு போன் செய்து தனியாகச் சந்திக்க வேண்டும் என்று கேட்கிறாள். அருண், இதை மறைந்திருந்து கேட்டு மகிழ்கிறான். சீதாவின் இந்த முடிவு, மீனாவுக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும், முத்துவின் நல்ல எண்ணம் சீதாவுக்குத் தெரிய வருமா? என்பது போன்ற கேள்விகளுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications