சிறகடிக்க ஆசை: ரோகிணியின் முதல் கல்யாண போட்டோவை பார்த்த வித்யா! முத்து கையில் கிடைக்கும் ஆதாரம்?
சென்னை: விஜய் டிவியின் விறுவிறுப்பான 'சிறகடிக்க ஆசை' சீரியலில், ரோகிணியின் பழையக் காதல் வாழ்க்கை ஒருபக்கம் தலைதூக்க, மறுபக்கம் முத்துவுக்கு ஒரு எதிர்பாராதச் சவாரி கிடைத்திருக்கிறது. ஆனால், ரோகிணியின் முதல் கணவரின் சொந்தக்காரங்க மகேஸ்வரியால் எதிர்பாராத ரகசியங்கள் தெரிய வருகிறது.

கிரிஷ் பாட்டியின் கெடுபிடி
கிரிஷ்ஷின் பாட்டி, ரோகிணியை ரொம்பவும் கட்டாயப்படுத்தி, "உங்க அப்பாவோடத் திவசத்துக்குத் தீபாவளிக்கு ஊருக்கு வந்தாகணும்" என்றுச் சொல்ல, ரோகிணிக்கு வேறு வழியில்லாமல், "நாங்களும் ஊருக்குத்தான் வரோம்; சரி நான் வரேன்" என்றுச் சம்மதிக்கிறாள். மேலும், "மகேஸ்வரியையும் நீயும் கூடவா" என்று பாட்டி கேட்க, "நானே சொல்லலாம்னு இருந்தேன். அவர் மீட்டிங்கு வெளிய போறாரு. நான் மட்டும் தனியாத்தான் இருப்பேன். அதனால நானும் வரேன்" என்று சொல்லி மகேஸ்வரியும் கூட வருவதாகச் சம்மதிக்கிறார்.
முத்துவுக்கு ஒரு புதிய சவாரி
மறுபக்கம், முத்து தனது கார் செட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவனுடைய நண்பன் முருகன் வருகிறான். முருகன், "எங்களுக்குத் தெரிஞ்சச் சொந்தக்காரங்க ஒருத்தவங்க வந்திருக்காங்க. அவங்களுக்கு 45 வயசாகுது. ஆனா இன்னும் குழந்தை பிறக்கல. அதுக்காக ட்ரீட்மென்ட் எடுக்கறதுக்கு வந்திருக்காங்க. அவங்களை நீங்கதான் பத்திரமாக கூட்டிட்டுப் போய் கூட்டிட்டு வரணும். நீங்கதான் கரெக்டா பார்த்துக்குவீங்கன்னு உங்க கிட்ட சொன்னேன்" என்று சொல்ல, முத்துவும், "அதுக்கென்னடா இருக்கு, பார்த்துக்கிட்டாப் போதும்" என்று ஒத்துக் கொள்கிறான்.
மீனாவுக்கு அழைப்பு
உடனே கிளம்பும் முருகன், "எப்படியும் ரெண்டு மூணு நாளைக்கு இந்தச் சவாரி இருக்கும்" என்றுச் செல்வத்திடம் பேசிக்கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து முத்துவுக்கு ஒரு போன் வருகிறது. செருப்புத் தைக்கும் தாத்தா பாட்டியின் உறவினர் போன் செய்து, "பாட்டிக்கு உடம்பு முடியலை; படுத்தப் படுக்கையா இருக்காங்க. மீனா பேரு சொல்லிக்கிட்டே இருக்காங்க. நீங்க வந்துட்டுப் போறீங்களா?" என்று கேட்கிறார்கள். சவாரி வந்துவிட்டதால், முத்து "மீனாவை அனுப்புறேன். நானும் கண்டிப்பா வந்து பார்க்கிறேன்" என்றுச் சொல்லிப் போனை வைத்துவிட்டு, மீனாவை சென்று பார்த்து வர சொல்கிறான்.
ரோகிணியின் பழைய பிரச்சனை
கிரிஷ்ஷின் பாட்டி மகேஸ்வரி வீட்டுக்கு வரும்போது, ரோகிணி பாட்டியிடம் கோபப்படுகிறாள். "என்ன விஷயம்?" என்று ரோகிணி கேட்க, "சொல்றேன்னு கோவப்படாத; கிரிஷ்ஷோட அப்பாவோட அண்ணனும் அவங்க பொண்டாட்டியும் பேசினாங்க" என்றுச் சொல்ல, ரோகிணி டென்ஷன் ஆகிறாள்.
"இப்ப எதுக்கு அவங்க பேசுறாங்க? அவங்க சொந்தமே வேணாம்னு உதறித்தானே வந்திருக்கேன்! இப்ப எதுக்குப் பின்னாடியே வராங்க?" என்று ரோகிணி டென்ஷன் ஆகப் பேசுகிறாள். "அவர்களுக்கு குற்ற உணர்ச்சியா இருக்குடி. உனக்கு பண்ணது நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டு பேசுனாங்க. உன்னோட நம்பரையும் கேட்டாங்க" என்றுச் சொல்லி, பாட்டி நம்பரைக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்.
கோபத்தின் உச்சம்
"நீ எதுக்குமா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க? இப்படித்தான் என் வாழ்க்கையிலத் தப்புத் தப்பா முடிவெடுத்துக்கிட்டு இருக்க" என்று ரோகிணி கோபப்பட, அந்த நேரம் பார்த்து அவர்களுக்குப் போன் வருகிறது.
ரோகிணியின் ரகசியம் உடைந்தது
போன் செய்தவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் தான் முருகன் சொன்னச் சொந்தக்காரர்கள் என்பதுத் தெரிய வருகிறது. போன் போட்டு ரோகிணியிடம் வருத்தப்பட்டு அழுது பேசும் அவர்கள், "நீ மாசமா இருக்கும்போது உங்க வீட்டை விட்டு வெளியே துரத்துனது பாவத்தினால் தான் எங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கல" என்றுச் சொல்கிறார்கள்.
சினம்
"நீ கிரிஷ்ஷைக் கூட்டிட்டு வா. நான் உங்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்கிறேன்" என்று அவர்கள் சொல்ல, ரோகிணி, "நீங்க யாரும் எதுவும் செய்ய வேணாம். என் பையனை எப்படி பார்த்தக்கணும்னு எனக்கு தெரியும். என்கிட்டப் போன் பண்றது முதல்ல விட்டுடுங்க" என்றுச் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிடுகிறாள். இன்னும் கல்யாணிக்கு (ரோகிணியின் பழையப் பெயர்) நம்ம மேல இருக்கிறக் கோபம் போகலை. எப்படி போகும்? நம்ம பண்ண பாவம் அப்படி" என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, காலிங் பெல் சத்தம் கேட்கிறது.
வித்யாவிற்கு தெரிந்த உண்மை
கதவைத் திறக்க, முருகனும் வித்யாவும் வருகின்றனர். முருகன் முத்துவை அறிமுகப்படுத்தி, "இவர்தான் உங்களைக் கூட்டிட்டுப் போவாரு" என்றுச் சொல்ல, வித்யா டீ காபி போட உள்ளே செல்கிறாள்.
வித்யாவிடம், "கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகுதா? சீக்கிரமாக குழந்தைப் பெற்றுக் கொள்ளம்மா. எனக்கு 15 வருஷம் ஆகிக் குழந்தை இல்லாம ரொம்பக் கஷ்டமா இருக்கு. அதுவும் இல்லாம, என் வீட்டுக்காரரோட அண்ணன் வைஃப் கல்யாணி என்றப் பொண்ணு பிரெக்னென்ட்டா இருக்கும்போது நாங்க வீட்டை விட்டுத் துரத்திட்டோம்" என்றுச் சொல்கிறார்கள்.
போட்டோ ட்விஸ்ட்
'கல்யாணி' என்ற பெயரை வித்யா கேட்டவுடன், அவருக்குச் சந்தேகம் வருகிறது. உடனே போட்டோவை காட்ட, ரோகிணி தான் அந்தப் பெண் என்று தெரிய வருகிறது. வெளியே வந்த வித்யா, "முருகனுக்கு சொந்தக்காரங்கன்னா, எங்களுக்கும் சொந்தக்காரங்கதானே. நான் பத்திரமா பார்த்துக்குறேன்" என்று சொல்கிறாள்.
இப்போது மகேஸ்வரி வீட்டுக்கு வந்த வித்யா, ரோகிணியிடம் உண்மையை சொல்ல, அதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். ரோகிணி பற்றிய ரகசியங்களை உறவினர்கள் முத்துவிடம் சொல்ல போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசை: போலி சாமியார் பற்றி உண்மையை நிரூபித்த முத்து! விஜயாக்கு தெரிய வந்த இன்னொரு உண்மை! செம சம்பவம் -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. பின்னுக்கு போன எதிர்நீச்சல், மாஸ் காட்டும் அழகே அழகு சீரியல் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications