மனோஜ் கல்யாணத்தை நிறுத்தும் முத்து.. வெளிவந்த உண்மை.. கடைசியில் ஏற்பட்ட டுவிஸ்ட்
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் காரில் வந்து ரோகினியை மிரட்டிக் கொண்டிருந்த நபரை முத்து அடித்து துரத்துகிறார்.
அதைத்தொடர்ந்து மீனாவை விஜயா அவமானப்படுத்தியதை தெரிந்து கொண்டு முத்து திருமணத்தை நிறுத்தி பிரச்சனை செய்கிறார்.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கான எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில் முத்து காரில் சவாரியை கூட்டிக் கொண்டுவர காரில் பின்பக்கம் இருந்து ரோகிணியை மிரட்டிக் கொண்டிருந்த நபர் தன்னுடைய நண்பரிடம் நான் அவளை செகண்ட் சேனலா வச்சுக்கலாம்னு இருந்தேன். ஆனா அவ என்ன சீண்டி பார்த்துட்டா. ஒரு வேலை அவளுக்கு கல்யாணமே ஆனாலும் நான் அவளை மிரட்டுவதால் அவ என் கூட வந்து தான் ஆகணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதை கேட்டு கோபமாக முத்து அவரை அடிக்கலாம் என்று யோசிக்கிறார். பிறகு இது வாடகை கார் ஓட்டுகிறோம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு பல்லை கடித்துக் கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார். மேலும் அந்த நபர் தன்னுடைய நண்பரிடம் ரோகிணியை பற்றி அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் மண்டபத்தில் மீனா வீட்டில் உள்ளவர்கள் யாரையும் காணவில்லையே என்று மண்டபத்தில் அண்ணாமலையும் அவருடைய அம்மாவும் தேடிக் கொண்டிருக்க, அதை கேட்டு விஜயா இதுவும் நமக்கு நல்லது தான் என்று தன்னுடைய தோழியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது காரில் வந்து கொண்டிருந்த முத்து ரோகிணியை மிரட்டிக் கொண்டிருக்கும் நபர் பேசுவதை கேட்டு கோபமாகி காரை நிறுத்தி அவரை அடிக்கிறார்.

பெண்களை பத்தி பேசினா யாரா இருந்தாலும் நான் இப்படித்தான் பண்ணுவேன் என்று முத்து திட்டி அடித்துக் கொண்டிருக்கும் போது, அண்ணாமலை போன் பண்ணி சீக்கிரமா கல்யாணம் மண்டபத்துக்கு கோவிலுக்கு வா என்று கூப்பிட வருகிறேன் என்று கோவிலுக்கு வருகிறார். அப்போது மீனாவை அவமானப்படுத்தியதை பற்றி மீனாவின் தம்பி நான் போய் விஜயாவிடம் சண்டை போடுகிறேன் என்று கிளம்ப, மீனாவின் அம்மா சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கோவிலுக்கு வரும் முத்துவின் காரை பார்த்ததும் மீனா எதுவும் நடக்காதது போல மாலையை சரி செய்தபடி இருக்க, முத்து மீனாவின் முகத்தை பார்த்து ஏதோ தப்பா நடந்திருக்கு யாரோ மீனாவை திட்டி இருக்காங்க என்று கேட்க, பிறகு அங்கு நடந்தவற்றையெல்லாம் மீனாவின் அம்மா முத்துவிடம் சொல்ல முத்து தாலி கட்டும் நேரத்தில் கோவிலுக்குள் சென்று பிரச்சனை செய்கிறார்.

விஜயா பேசியதை பற்றி அப்பா மற்றும் பாட்டி இடம் சொல்லியதற்கு விஜயா ஆமாம் நான் தான் பேசினேன். இவ ராசி இல்லாதவள் தான். அவ உன் வாழ்க்கையில் வந்ததால தான் வண்டி போலீஸ் ஸ்டேஷன் போயிடுச்சு என்று திமிராக பேச, அனைவரும் விஜயாவை திட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நான் இந்த தாலியை எடுத்துக் கொண்டு ஓடி விடுவேன் என்று முத்து மிரட்ட அதற்கு மீனா திட்டுகிறார்.
அப்போது அண்ணாமலை நம்ம குடும்ப பிரச்சனையில் இந்த ரோகிணி என்ன பண்ணுவா? பாவம் தானே? என்று கேட்க, முத்து யோசித்தபடி நிற்கிறார். அப்போதும் விஜயா திமிராக பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications