சிறகடிக்க ஆசை: அண்ணாமலையை குற்றம் சொன்ன ஸ்ருதி.. முத்து எடுத்த முடிவு.. ஆடிப்போன குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 15ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் அண்ணாமலை ஸ்ருதி மற்றும் ரவி விஷயத்தில் முக்கிய முடிவை எடுக்க அதை பார்த்து விஜயா அதிர்ச்சியாகி இருக்கிறார்.
அதே நேரத்தில் அண்ணாமலை செய்ததுதான் தவறு என்று ஸ்ருதி சொல்ல அதைக் கேட்டு முத்து அடுத்த பிரச்சனையை இழுக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா மீண்டும் மீண்டும் ரவி மற்றும் ஸ்ருதி வீட்டில் இருக்க வேண்டும். ஆனால் முத்து செய்தது தவறு என்று பேசிக் கொண்டிருக்க, அதற்கு அண்ணாமலை உனக்கு இப்போ ரூம் தானே பிரச்சனை வா அதுக்கு நான் ஒரு வழி பண்ணுகிறேன் என்று எல்லோரையும் கூப்பிட்டு உட்கார வைத்து பேசுகிறார்.

அப்போது முத்துவிடம் என்னதான் இருந்தாலும் நீ ரூமை பூட்டிக்கிட்டு போனது தப்புதான் என்று சொல்கிறார். அதற்கு முத்து கீழே இருக்கிற பாத்ரூம்ல போய் என்னை குளிக்க சொல்றாங்கப்பா. அப்போ எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும் என்று கேட்க, அதற்கு அண்ணாமலை உங்க அம்மா மீனாவை பேசிய வார்த்தைகள் ரொம்ப ரொம்ப தப்பு அதனால நான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன்.
இனிமேல் நீங்க அந்த ரூம்லையே தங்கிக்கோங்க. ரவிக்கு எங்க ரூமை தந்து விடுகிறோம் என்று சொல்ல விஜயா அதிர்ச்சியடைந்து என்னது நம்ம ரூமா என்று கேட்க, அதற்கு அண்ணாமலை ஆமா நீ தானே ரவி இந்த வீட்டில் இருக்கணும்னு ஆசைப்படுற என்று கேள்வி கேட்டு ஆப் பண்ணுகிறார். அதை தொடர்ந்து முத்து வேண்டாம் பா நீ வேணா எங்க ரூம்ல இருந்துக்க என்று சொல்ல, அதற்கு விஜயா தான் அவங்களே சொல்றாங்களே என்று அண்ணாமலையே சமாதானம் படுத்த பார்க்கிறார்.

ஆனால் அண்ணாமலை நாங்க வாழ்ந்து முடித்தவங்க. எங்க படுத்தாலும் தூக்கம் வரும் என்று பாய் தலையணையை எடுத்துக்கொண்டு கீழே உட்கார எனக்கு கஷ்டமா இருக்குப்பா என்று முத்து பக்கத்தில் உட்கார்ந்து கண்கலங்குகிறார். பிறகு முத்துவுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றி மீனாவை ரூமிற்கு கூட்டிட்டு போய் கட்டில் அப்பாவுக்கு கொடுத்து விடலாம், உனக்கு பிரச்சனை இல்லையே என்று கேட்க அதற்கு மீனா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்கிறார்.
அடுத்ததாக முத்து மனோஜை கூப்பிட்டு கட்டிலை பிரித்து வெளியே எடுத்து வந்து பிட் செய்து கொண்டிருக்க அப்போது அதை பார்த்து விஜயா நமக்கு ரூம் தான் இல்ல கட்டிலாவது இருக்கட்டும் கீழ படுத்தா தூக்கம் வராது என்று நிம்மதி அடைகிறார். அதை தொடர்ந்து ரவி மற்றும் ஸ்ருதி வீட்டிற்கு வர கட்டில் வெளியே இருப்பதை பார்த்து ஏம்பா என்ன ஆச்சு என்று ரவி கேட்டு அதற்கு இனிமேல் நீங்க எங்களோட ரூம்ல தங்கிக்கோங்க என்று அண்ணாமலை சொல்கிறார்.
பிறகு ஸ்ருதி நீங்கதான் அங்கிள் தப்பு பண்ணிட்டீங்க தொலைநோக்கு பார்வையோட மூணு பிள்ளைகளுக்கும் மூன்று ரூம் கட்டியிருக்கணும் என்று சொல்ல அதற்கு அண்ணாமலை தப்பு என்னுடையதுதான். என் புள்ளைங்க என் பேச்சைக் கேட்டு நடந்துக்குவாங்கன்னு நான் தப்பு கணக்கு போட்டுட்டேன் என்று சொல்லி ரூமிற்கு போக சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து ஸ்ருதி ரவியை அங்கிள் பிராப்ளம் இல்லனு சொல்லிட்டாரே வா என்று ரூமிற்கு போகலாம் என்று கூட்டிட்டு செல்கிறார். பிறகு ரவி என்னால உனக்கு எவ்வளவு பிரச்சனை என்று சொல்லி வருத்தப்பட ஸ்ருதி ரவியை ரொமான்ஸ் செய்து சமாதானம் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications