சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன விஷயத்தை கேட்டு பாராட்டும் விஜயா.. அருண் போட்ட நாடகம்! குடும்பமே பிரிஞ்சு போச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 17ஆம் தேதிக்கான எபிசோடில் அருண் முத்து மீது அபாண்டமாக பழி சொல்ல, அதை சீதாவும் நம்பி விடுகிறார். இதனால் குடும்பத்திற்குள் பிரச்சனை வருகிறது. அது ஒரு பக்கம் இருக்கு, மீனா ரோகிணி பற்றிய உண்மையை சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்று பார்ப்போம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா எதற்காக கிரிஷை தத்தெடுக்க வேண்டாம் என்று சொன்னார் என முத்துவுடன் மொத்த குடும்பத்தினரும் கேட்க மீனா உண்மையை சொல்லப் போகிறார். அந்த நேரத்தில் ரோகினி கிரிஷ்க்கு பாட்டி இருக்கிறதால மீனா யோசிக்கலாம் என்று கதையை மாற்றுகிறார். பிறகு உண்மையை சொல்லிவிடலாம் என்று நினைத்த மீனாவிடம் ரோகிணி கண்ணை காட்டி வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.

உடனே மீனாவும் உண்மையை சொல்லாமல் கிரிஷை தத்தெடுத்து விட்டால் எனக்கு குழந்தை பிறந்தால் அதே பாசத்தை காட்ட முடியுமா என்று தெரியவில்லை என ஏமாற்றுகிறார். ஆனால் மீனா சொன்னதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி மீனாவா இப்படி சொல்றது என்று பார்க்கிறார்கள். அப்போது விஜயா மட்டும் மீனாவை முதல்முறையாக பாராட்டுகிறார்.
அடுத்தவர் குழந்தை இந்த வீட்டுக்கு குழந்தை ஆக முடியாது என்பதை நீ தான் தெரிஞ்சு வச்சிருக்க என்று சொல்கிறார். விஜயாவின் செயலை பார்த்து முத்துவும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை மீனா சொன்ன காரணம் நியாயமாக தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு போகிறார். பிறகு முத்து மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.
நீ இந்த உண்மையை முன்னாடியே சொல்லி இருக்கலாம் இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது என்று வருத்தப்படுகிறார். அப்போது மனோஜ் ரோகினியிடம் என்ன இருந்தாலும் உன்னை மாதிரி எந்த உண்மையையும் மறைக்காமல் யாராவது இருப்பாங்களா? என்று மனோஜ் கேட்க, அதற்கு மீனா அவா பெரிய பூசணிக்காயை வச்சிருக்கா என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் அருண் வீட்டிற்கு கிழிந்த சட்டையுடன் வந்து கோபத்தில் உட்கார்ந்து இருக்க அவரிடம் சீதாவும் அருணுடைய அம்மாவும் என்னாச்சு என்று கேட்கின்றனர். அதற்கு அருண் நான் என்னுடைய நண்பரிடம் தான் பேசிட்டு இருந்தேன். ஆனால் அதை முத்து தவறாக புரிந்து கொண்டு என்னை வந்து அடிச்சிட்டான் என்று நாடகம் போடுகிறார். அருண் சொன்னது உண்மை என்று நம்பும் சீதா முத்து மீது கோபப்படுகிறார்.
அந்த நேரத்தில் மீனா போன் செய்ய அந்த போனையும் கட் பண்ணி விடுகிறார். அப்போது அருணுடைய அம்மா இனி நீ உங்க அக்கா வீட்டுக்காரரிடம் பேசவே கூடாது என்று கண்டிஷன் போடுகிறார். அதோடு உன்னையும் என்னுடைய பொண்ணு மாதிரி தான் பார்க்கிறேன். ஆனால் என் பையனுக்கு ஒன்னுனா சும்மா விடமாட்டேன் என்று மிரட்டுகிறார். அடுத்ததாக மீனாவின் அம்மா வீட்டிற்கு மீனாவும் முத்துவும் வருகின்றனர்.
அங்கு சீதாவும் வருகிறார். அப்போது சீதா இவரிடம் எனக்கு பேச பிடிக்கலை இனிமே இவங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று முத்துவை பார்த்து சொல்ல, முத்து தன் தரப்பு நியாயத்தை சொல்லப் போகிறார். ஆனால் அதை எல்லாம் சீதா கேட்காமல் கோபமாக பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
ரோகிணி பற்றிய உண்மை எப்படி தான் குடும்பத்திற்கு தெரிய வருகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே பலமுறை சீதா இதுபோல அருண் நாடகத்தை நம்பி முத்து மீது கோபப்பட்டு இருக்கிறார். ஆனால் இப்போது முத்து மீது தப்பில்லை என்பதை எப்படி தெரிந்து கொள்வார் என்றும் பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications