சிறகடிக்க ஆசை: ரோகிணி தான் கல்யாணி! உண்மையை உளறிய மனோஜ், விஜயா எடுத்த முடிவு! தவிக்கும் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி போடும் நாடகத்தை பற்றிய சந்தேகம் மொத்த குடும்பத்திற்கும் வருகிறது. அதற்கு மனோஜ் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்கலாம்.
சிறகு அடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணியை அவருடைய தோழி வீட்டிற்கு சென்று மீனா மிரட்டி இருக்கிறார். நான் இதுவரைக்கும் என்னுடைய புருஷனை ஏமாத்திட்டு இருந்தேன், ஆனா இப்போ நீ போடுற நாடகத்தை பார்த்து மாமாவுக்கு சந்தேகம் வந்துட்டு. உனக்காக நான் அவர்கிட்டயும் ஏமாற்றி நடிச்சிட்டு இருக்கிறேன். உனக்காக நான் இன்னும் எத்தனை பேர் கிட்ட தான் பொய் சொல்லணும் என்று கோபப்பட்டு திட்டிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ரோகிணி வழக்கம்போல சோகமாக பேசி நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனா உன்னை மாதிரி எல்லாம் என்னால மறைச்சுகிட்டே இருக்க முடியாது. ஒருநாள் உண்மையை சொல்லிடுவேன் பாத்துக்கோ என்று மிரட்டி விட்டு செல்கிறார். மீனா சென்ற பிறகு இவகிட்ட வேற மாட்டிக்கிட்டேன் என்று ரோகிணி புலம்பி கொண்டிருக்கும் போது அதற்கு அவருடைய தோழி, சீக்கிரமா வீட்டில் உண்மை தெரிய போகுதுன்னு நினைக்கிறேன் அதற்குள் நீயே சொல்லிடு என்று சொல்கிறார்.
மறுபக்கத்தில் க்ரிஷ் மனோஜிடம் வந்து என்னுடைய பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் நீங்கதான் கையெழுத்து போடணும் என்று சொல்ல, மனோஜ் ப்ராகிரஸ் ரிப்போர்ட் வாங்கி பார்த்துவிட்டு நல்ல மார்க்கு தான் வாங்கி இருக்கே.. ஆனா நான் எப்படி கையெழுத்து போட முடியும் என்று கேட்க, நான் உங்களை தானே டேடினு கூப்பிடுறேன் அப்ப நீங்க தானே கையெழுத்து போடணும் என்று கிரிஷ் கேக்க, முத்து கொடு நான் போடுறேன் என்று சொல்ல வேண்டாம் எனக்கு டாடி தான் போடணும் என்று கிரிஷ் மறுத்ததும் முத்து வருத்தமாகிறார்.

அப்போது விஜயா கிரிஷை திட்டி மனோஜையும் கையெழுத்து போட விடாமல் தடுக்கிறார். அதைத்தொடர்ந்து மனோஜ் தன்னுடைய ரூமுக்கு போக அங்கு ரோகினி வழக்கம் போல கல்யாணி ஆவி தனக்குள் வந்ததாக நடிக்கிறார். உங்க அம்மா உயிர் மேல உனக்கு அக்கறை இல்லையா? என்னுடைய பையனுக்காக நீ கையெழுத்து போடல.. அவ மேல நீ பாசமா இல்லன்னா உங்க அம்மா ரத்தத்தை குடிச்சிடுவேன் என்று மிரட்டியதும் மனோஜ் ஓடி வந்து கிரிஷ் உடைய பிராக்ரஸ் ரிப்போர்ட்டை வாங்கி கையெழுத்து போடுகிறார்.

இதை பார்த்து விஜயா அதிர்ச்சியாகி திட்டுகிறார். அடுத்ததாக பார்வதி வீட்டில் சிந்தாமணியோடு விஜயாவும் இருக்கிறார். அங்கு மனோஜ் வந்ததும் மனோஜிடம் நீ எதுக்காக அந்த பையனுக்கு கையெழுத்து போட்டா? எதற்காக அந்த பையன் உன்னை டாட்டின்னு கூப்பிடறான் என்று நச்சரிக்கிறார். ஆனால் மனோஜ் உங்க நல்லதுக்கு தான் பண்ணுறேன் என்று அதையே திரும்பத் திரும்ப சொல்ல விஜயா கோபமாகி மனோஜை திட்டி வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.
அதை தொடர்ந்து பார்வதி வீட்டிற்கு வரும் சிவன் ஊட்டிக்கு டிக்கெட் போட்டு இருக்கிறேன் என்று சொன்னதும் விஜயா கோபமாகி எதுக்காக நீ ஊட்டிக்கு எல்லாம் போற என்று கண்டிக்கிறார். அதற்கு பார்வதி நாங்க கதை சொல்றதுக்காக அங்க போய் வித்தியாசமா ஒரு வீடியோ எடுக்க போறோம் என்று சொல்ல, அதற்கு விஜயா மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் பார்வதி இதுல எதுவும் தப்பா இல்லை என்று சொல்லிவிட்டு போகிறார்.

இதை அடுத்து இவர்கள் இருவரையும் பிரிக்க சிந்தாமணி உடன் சேர்ந்து விஜயாவும் திட்டம் போடுகிறார். அதோடு சிந்தாமணி பார்வதியின் மகனிடம் இதைப் பற்றி சொன்னாலே போதும் என்று ஐடியா கொடுக்கிறார். விஜயாவும் அப்படியே செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் மனோஜ் மற்றும் கிரிஷ் உடைய நடவடிக்கையை பார்த்து முத்துவுக்கு சந்தேகம் வருகிறது.
இதில் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்று மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க, மீனா முத்துவின் கண்களை பார்த்து பேச முடியாமல் அங்கிருந்து நழுவ பார்க்கிறார். இதை பார்த்து முத்துக்கு மேலும் சந்தேகம் வருகிறது. இதனால் முத்து இந்த விஷயத்தில் உண்மையை சீக்கிரமாக கண்டுபிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் ரோகிணி பற்றிய உண்மைகள் வெளிவருவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications