சிறகடிக்க ஆசையில் பிளாஷ்பேக்.. விஜயா எதற்காக முத்துவை வெறுக்க தொடங்கினார்? மீனா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனா முத்துவிடம் உங்க அம்மா உங்களை இந்த அளவிற்கு வெறுப்பதற்கான காரணம் என்ன என்று கேட்க முத்து பிளாஷ்பேக் கதையை சொல்லி இருக்கிறார்.
அந்த வகையில் இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் ஜீவாவிடம் இருந்து வாங்கிய 30 லட்சம் பணத்தில் மனோஜ் 2 லட்சம் பணத்தை ரோகிணிக்கு வட்டிக்கு கொடுத்திருக்கிறார். மீதமுள்ள 28 லட்சம் ரூபாய் தான். இதிலும் 4 லட்சம் ரூபாய் ஏற்கனவே கார் வாங்கி இருக்கிறார். இப்போது 24 லட்சம் ரூபாய் மட்டும் தான் இருக்கிறது. இந்த நிலையில் முத்து ஷோரூம் ஒன்று விலைக்கு வர அதை வாங்குவதற்காக மனோஜிடம் சொல்லி இருக்கிறார்.

மனோஜ் இருந்த இடத்திலிருந்து இனி பணம் எடுக்கலாம் என்று இந்த ஷோரூமை வாங்கிவிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் ஷோரூம் விலைக்கு வருவது பற்றி ஆரம்பத்தில் முத்து தான் மனோஜ் மற்றும் குடும்பத்திடம் பேசி கூட்டிக்கொண்டு வந்தது. ஆனால் ரோகிணி முத்து அவமானப்படுத்த வேண்டும் என்று ஷோரும் ஓனரிடம் இனி நாங்கள் பேசிக் கொள்கிறோம் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்று கழட்டிவிட்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் மீனாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். நீங்க இந்த குடும்பத்துக்காக எவ்வளவோ செய்றீங்க. ஆனா உங்க அம்மா உங்களை புரிஞ்சுக்கவே மாட்டாங்க. நீங்க உங்க அம்மா மேல அவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க ஆனா அவங்க எப்பவும் உங்க மேல வெறுப்பை காட்டிகிட்டு இருக்காங்க.
ஆனா அவங்க ஆரம்பத்துல இருந்தே உங்க மேல கோபப்பட்டு இருப்பாங்கன்னு எனக்கு தோணல. ஏதோ ஒரு இடத்துல இருந்து உங்களை வெறுக்க தொடங்கி இருக்காங்க. என்னதான் நடந்துச்சு சொல்லுங்க என்று மீனா கேட்க அதற்கு முத்து ஆரம்பத்தில் அவ்வளவு சந்தோஷமா இருந்தோம். அந்த காலமெல்லாம் திரும்பவும் வராதா? என்று ஏக்கமா இருக்கு. அதெல்லாம் இனி என் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்று சோகத்தோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நாளைக்கு எபிசோடில் விஜயா முத்துவை வெறுப்பதற்கான காரணத்தை முத்து சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பொங்கல் கொண்டாடுவதற்காக குடும்பத்தோடு எல்லோரும் கிராமத்திற்கு போயிருக்கும் போது முத்து அப்பாவிடம் நீ இதே பொங்கல் நாளில் தானபா பாட்டி வீட்டுல கொண்டு வந்து விட்ட, நான் செய்யாத தப்புக்கு என்னுடைய வாழ்க்கையே மாறி போச்சு.
அப்போது உண்மையில் என்ன நடந்தது என்று சொல்ல வர அந்த நேரத்தில் அண்ணாமலை இப்போ எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க. இந்த நேரத்தில் பழசை பேச வேண்டாம் என்று தடுத்து இருப்பார். இதனால் அப்போது ரசிகர்கள் மத்தியில் முத்து எதற்காக சீர்திருத்த பள்ளிக்கு போயிருப்பார்! விஜயா எதற்காக முத்து மீது இவ்வளவு கோபப்படுகிறார்? என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
ஆனால் அந்த கதையை அப்போது அப்படியே விட்டு விட்டார்கள் இப்போது முத்து பற்றிய ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்ததும் டிஆர்பியை அதிகப்படுத்துவதற்காக இனி இந்த வாரத்தில் முத்துவின் ஃப்ளாஷ் பேக் கதை உடைபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications