சிறகடிக்க ஆசை: மீனா கண்டுபிடித்த ரகசியம்.. விஜயா முன்பு ரோகிணி சொன்ன வார்த்தை.. அம்பலமாகும் அடுத்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் பத்தாம் தேதிக்கான எபிசோடில் ஸ்ருதி ரோகினிக்கு மேக்கப் ஆர்டர் வங்கி கொடுக்கிறார். அதே நேரத்தில் மீனா கண் முன்பு சீதா அவருடைய காதலனுடன் சிக்குகிறார். அதுபோல அண்ணாமலை குடும்பத்தில் அடுத்த பிரச்சனை வெடிக்கிறது அது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஸ்ருதி ரோகிணியை கூப்பிட்டு தன்னுடைய பிரண்டுக்கு கல்யாணம் இருக்கு நீங்க ஃப்ரீயா இருந்தா அட்டன் பண்றீங்களா என்று கேட்கிறார். அதற்கு விஜயா உன்னுடைய பிரண்டு கல்யாணத்துக்கு இவா எதற்கு வரணும் என்று திமிராக கேட்க, அதற்கு ஸ்ருதி சாத்துக்குடி கொடுக்கறதுக்கு ஆட்கள் இல்ல அதான் கேட்டேன் என்று நக்கல் அடிக்கிறார்.

மீண்டும் மீண்டும் அவமானம்
மனோஜை முதலில் அசிங்கப்படுத்திவிட்டு பிறகு விஜயாவையும் ஸ்ருதி அசிங்கப்படுத்த அதை பார்த்து முத்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரவி நீ சொல்ல வந்த விஷயத்தை முதலில் சொல்லுமா என்று ஸ்ருதியிடம் சொன்னதும் ஸ்ருதி ரோகிணியிடம் நீங்க என் பிரண்ட் பங்க்ஷனில் மேக்கப் பண்றீங்களா, நீங்க கேக்குற பணத்தை நான் கரெக்டா வாங்கி கொடுத்துடுவேன் என்று சொன்னதும் ரோகிணி ஆன்ட்டி பெர்மிஷன் கொடுத்தா நான் போறேன் என்று சொல்கிறார்.
அண்ணாமலைக்கு சந்தேகம்
அண்ணாமலை ஏன் இதுவரைக்கும் விஜயா சொல்லித்தான் நீ போனியா நீ உன்னுடைய வேலையை தானே பார்க்க போறே? இதுல என்ன விஜயா சம்மதம் சொல்லணும் என்று விஜயாவிடம் நீ எதுவும் வெளியே போகக்கூடாதுனு மிரட்டி வச்சிருக்கியா என்று கேள்வி கேட்க அதற்கு விஜயா நான் என்னுடைய பையன் கடைக்கு தான் அவளை போக கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன்.
முத்துவுக்கு அசிங்கம்
இவா துணை இல்லாமல் என் மகனால் சாதிக்க முடியும். இவ தான் என் பையன உருவாக்கின மாதிரி சீன் போட்டுகிட்டு இருக்கிறா என்று திட்டிக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை இத்தனை நாளா வீட்டில் என்ன நடந்தது என்று உனக்கு மறந்து போச்சா? என்று விஜயாவிடம் கேட்க அதற்கு முத்து மனோஜ் தான் அவன் பொண்டாட்டிக்கு ஒன்னுனா கேட்கணும் ஆனா அவன் தான் என்ன நடந்தாலும் அம்மா பேச்சை தானே கேக்குறான் என்று சொல்கிறார்.
ரோகிணியின் நாடகம்
அதற்கு ரோகிணி எங்களுடைய விஷயத்தில் உங்களை தலையிட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன் என்று முத்துவிடம் கோபப்பட அதற்கு மனோஜ் இவனுக்கும் இவன் பொண்டாட்டிக்கும் இதே வேலை தான். நானும் ரோகிணியும் என்ன பண்ணுறோம்னு பார்த்துக்கிட்டே திரிகிறாங்க. இத்தன பிரச்சனை நடப்பதற்கு காரணமே இவங்க தானே என்று மொத்த பழியையும் முத்து மீனா மீது போடுகிறார்.
அண்ணாமலை கேட்ட கேள்வி
அதற்கு அண்ணாமலை இவங்க இருவரும் இந்த பிரச்சனை பெருசாக கூடாதுன்னு என்பதற்காகத்தான் வீட்டில் வந்து சொன்னார்கள். அவங்க ரோகிணியை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லல என்று சொல்ல, விஜயா இவங்க எதுக்காக இப்படி பண்ணுனாங்கன்னு தெரியல ஆனா இவங்க பண்ணுனது தான் சரி. இவங்க வீட்டில் வந்து சொல்லலைன்னா இவளுடைய நாடகம் எனக்கு இன்னும் தெரிஞ்சிருக்காது.
விஜயா போட்ட கண்டிஷன்
இவ என்ன சொன்னாலும் நான் நம்பிகிட்டு இருந்திருப்பேன். இன்னும் எத்தனை வருஷத்துக்கு இவ ஏமாத்திட்டு இருந்திருப்பாளோ என்று முதல் முறையாக முத்து மீனா செய்த செயலை பாராட்டுகிறார். பிறகு அண்ணாமலை நடந்ததை எல்லாம் மறந்துவிடு இனி அடுத்து என்ன நடக்கலாம் என்பதை யோசி என்று சொல்ல, விஜயா என் பையன் கடைக்கு இனி இவா போகக்கூடாது வேற எங்க வேணாலும் வேலைக்கு போகட்டும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று சொல்கிறார்.
முத்து சொன்ன வார்த்தை
அதனால் ரோகிணி நான் இந்த ஃபங்ஷனை அட்டென்ட் பண்ணுறேன் என்று ஸ்ருதியிடம் சொல்லிவிட்டு விஜயாவிற்கு நன்றி சொல்லிவிட்டு போகிறார். அதை பார்த்ததும் ஸ்ருதி இவங்களுக்கு ஆர்டர் வாங்கி கொடுத்தது நான் ஆனால் எனக்கு நன்றி சொல்லாமல் ஆன்ட்டிக்கு சொல்லிட்டு போறாங்க என்று கேட்க, அதற்கு முத்து இப்போ பார்லர் அம்மாவின் குடுமி அம்மாவின் கையில் இருக்கிறது அதனால் அவர்கள் எங்க இழுக்கிறாங்களோ அதற்கெல்லாம் பார்லர் அம்மா ஆடுது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அருண் போடும் பிளான்
அடுத்ததாக சீதா அருணுடன் அவருடைய அம்மாவை வீட்டிற்கு சென்று பார்க்கிறார். அம்மாவிற்கு மாத்திரைகளை கொடுக்கிறார். பிறகு சீதா டீ போட்டுக் கொண்டிருக்கும்போது அருண் அம்மா சீதாவிடம் கல்யாணம் எப்போ வைக்கலாம் என்று கேட்கவா என்று கேட்க, அதற்கு அருண் இப்போ நீங்க பேசாதீங்க நான் உங்ககிட்ட விஷயத்தை சொல்லிட்டேன்னு சீதாவுக்கு தெரியாது. தெரிஞ்சா இங்க வருவதை நிறுத்திடுவா.
மீனாவுக்கு சந்தேகம்
அதனால நேரம் பார்த்து நானே அவளிடம் சம்மதம் வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சீதாவை அங்கிருந்து கூட்டிக்கொண்டு பைக்கில் வருகிறார். அப்போது ஒரு கடைக்கு பூ கொடுத்து விட்டு வெளியே வந்த மீனா சீதாவை பார்த்து விடுகிறார். யார் பைக்கில் சீதா போறா என்று மீனா சந்தேகப்படுகிறார். அதே நேரத்தில் முருகன் தன்னுடைய காதல் சக்சஸ் ஆகிவிட்டு என்றது செல்வம் மற்றும் முத்துவிற்கு ட்ரீட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மீனா பார்த்த விஷயம்
அந்தப் பக்கமாகத்தான் அருண் சீதாவை இறக்கி விடுகிறார். சீதா நான் இங்கிருந்து நடந்து போய் விடுவேன். நீங்க இப்போதைக்கு எங்க வீட்டுத்தெரு பக்கம் வர வேண்டாம். நான் நேரம் பார்த்து அம்மாவிடம் சொல்கிறேன். நான் சொன்னாதான் சரியா இருக்கும் அடுத்தவங்க சொல்றது நல்லா இருக்காது என்று அருணை அனுப்பி வைத்துவிட்டு நடந்து வரும்போது முத்து சீதாவை பார்க்கிறார்.
சீதா செய்த செயல்
என்ன இந்த பக்கமா நடந்து வர என்று முத்து விசாரிக்க என்னுடைய பிரண்டு கூட வந்தேன். இங்க கொஞ்சம் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கணும் அதுக்காக இறங்கிட்டு நானே பொருள் வாங்கிட்டு போறேன் என்று சொல்ல, முத்து நான் கொண்டு விடுவேன் என்று சொல்ல வேண்டாம் என்று சீதா மறுத்துவிடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்ததும் சீதா அவருடைய அம்மா சாப்பிடாமல் பூக்கடைக்கு கிளம்புவதால் சாப்பாடு போட்டு அவருக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications