சிறகடிக்க ஆசை: விஜயாவின் சூழ்ச்சிகளை உடைத்த முத்து.. மீனா போட்ட சவால்.. அண்ணாமலை சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 17ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயா பற்றிய ரகசியத்தை முத்து குடும்பத்தினர் எல்லோரிடமும் சொல்லுகிறார். அதேபோல மீனா தனக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளுக்கு சவால் விட்டு இருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சீதாவும் அவருடைய அம்மாவும் அருண் வீட்டிற்கு நன்றி சொல்வதற்காக போயிருக்கிறார்கள். அங்கு அருணின் அம்மா சீதாவிடம் பாசமாக நடந்து கொள்கிறார். சீதா பற்றி பெருமையாக பேசிக்கொண்டே இருக்கிறார். அப்போது சீதாவும் அருணும் தனியாக பேசுகிறார்கள். அந்த நேரத்தில் அருண் இன்றைக்கே என்னுடைய அம்மா கிட்ட சொல்லி உங்க அம்மாவிடம் பேசட்டுமா என்று கேட்க அதற்கு சீதா என்னுடைய அக்கா மற்றும் மாமாவிடம் உங்களை அறிமுகப்படுத்தி அவர்கள் சம்மதம் சொன்ன பிறகுதான் வீட்டில் பேசணும் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

சீதா அம்மாவின் சந்தேகம்

பிறகு அருணின் அம்மா சீதாவிற்கு பூ வைத்து அனுப்பி வைக்கிறார். அதை தொடர்ந்து இதையெல்லாம் பார்த்து சீதாவின் அம்மாவிற்கு சந்தேகம் வருகிறது. வீட்டு வாசலில் நிற்கும் போது இந்த அருண் தம்பி உனக்கு மட்டும் தான் இப்படி உதவி செய்கிறாரா இல்லை எல்லாருக்கும் இப்படித்தான் உதவி செய்வாரா? என்று கேட்க, அந்த நேரத்தில் ஆட்டோ வந்ததும் அதை சொல்லி சீதா சமாளித்து விடுகிறார்.

புது ஆர்டர்

மறுபக்கத்தில் மண்டபம் ஒன்றில் பூ டெக்கரேஷன் செய்பவர்கள் எல்லோரையும் வர வைத்திருக்கிறார்கள். அங்கு மீனா உட்கார்ந்து இருப்பதை பார்த்ததும் சிந்தாமணி எப்பவும் இந்த மண்டபத்திற்கு ஆர்டர் என்கிட்ட தான வரும் இப்போ என்ன தேவையில்லாதவங்க எல்லாம் உட்கார வச்சிருக்கீங்க என்று கேட்க, அதற்கு மேனேஜர் இது பெரிய கார்ப்பரேஷன் கம்பெனியோட பங்க்ஷன் நடக்கப்போகுது.

Siragadikka aasai serial vijay tv

மீனாவின் சவால்

அதனால அவங்க இதை காண்ட்ராட் விடணும்னு சொல்றாங்க. அதற்காக இரண்டு லட்சம் முன்பணம் டெபாசிட் செய்யணும் என்று சொல்லிக்கொண்டே இருக்காங்க. அதற்கு சிந்தாமணி சரி நான் டெபாசிட் கட்டிடுவேன் என்று சொல்கிறார். அதோடு மீனாவால் இவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியாது அவருடைய புருஷன் கூட கார் டிரைவராக தான் இருக்குறாரு அவர் அந்த பொண்ணுக்கு வீட்டில் எந்த சப்போர்ட்டும் கிடையாது அதனால நானே இந்த ஆர்டரை எடுத்துக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருக்க அதற்கு மீனா நான் எப்படியாவது இந்த ஆர்டரை வாங்குகிறேன். நான் நாளைக்குள் வந்து பணத்தை கட்டுகிறேன் என்று சவால் விட்டுவிட்டு அங்கிருந்து வருகிறார்.

Siragadikka aasai serial vijay tv

விஜயா கேட்ட கேள்வி

பிறகு இது பற்றி வீட்டிற்கு வந்து முத்துவிடம் சொல்கிறார். முத்து நான் இதை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அண்ணாமலையை கூப்பிடு முத்து கூப்பிட்டதும் மொத்த குடும்பமும் ஹாலுக்கு வருகிறார்கள். அப்போது முத்து நடந்த விஷயத்தை பற்றி சொல்கிறார் அதற்கு விஜயா நீங்க எதற்காக இப்படி ப்ளான் போடுறீங்கன்னு தெரியுது ஏற்கனவே வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கி இருக்கிறோம் அதனுடன் ரெண்டு லட்சம் சேர்த்து கடன் வாங்க வேண்டும் என்பதற்காகத்தானே இப்படி பேசிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.

உண்மை உடைபட்டது

அதற்கு முத்து நாங்க இன்னும் முழுசா சொல்ல வரதுக்குள்ள நீங்களே ஒன்னு புரிஞ்சுகிட்டீங்க என்று சொல்கிறார். அதற்கு விஜயா அந்த சிந்தாமணி அம்மா பெரிய ஆளு அவங்க கிட்ட இந்த மீனாவால ஜெயிக்க முடியாது. எதற்காக இவ போட்டி போட்டுக்கிட்டு இருக்கிறார் என்று திமிராக பேசிக் கொண்டிருக்க அதற்கு அண்ணாமலை யார் அந்த சிந்தாமணி என்று கேட்டதும் முத்துவும் மீனாவும் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள்.. சிந்தாமணி மீனாவிற்கு கொடுத்த தொந்தரவு, பிறகு விஜயாவிடமே வந்து டான்ஸ் கிளாஸ்க்கு சேர்ந்தது என்று எல்லா கதைகளையும் சொல்லி விடுகிறார்கள். இதனால் அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார் இப்படியாக இன்று எபிசோட் முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+