விஜயாவிற்கு பாட்டி வைத்த ஆப்பு.. கதறி அழுத ஸ்ருதி.. ரோகினி பற்றி தெரிய வந்த உண்மை.. செம முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 19ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் அண்ணாமலை மற்றும் விஜயாவின் குடும்பத்தினர் அனைவரும் அண்ணாமலையின் அம்மா வீட்டிற்கு கிராமத்திற்கு வந்திருக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட வந்த விஜயாவிற்கு அவருடைய மாமியார் அடுத்தடுத்து பிரச்சனைகளை கொடுக்க என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் விஜயா படும் அவஸ்தையை பார்த்து முத்து மற்றும் அண்ணாமலை சந்தோஷப்படுகின்றனர்.
அதுபோல கிராமத்துக்கு வந்த இடத்தில் ரோகினியின் நடவடிக்கையை பார்த்து அங்கு இருப்பவர்கள் உண்மையில் ரோகினி மலேசியாவில் இருந்து வந்திருக்கிறாரா? என்ற சந்தேகம் வருகிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் அண்ணாமலை குடும்பத்தினர் அனைவரும் பொங்கலுக்கு போவதற்காக காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா நாற்று நடுவதை பார்த்தும், கொக்கு பறப்பதை பார்த்தும் ஆச்சரியமாக பேசிக் கொண்டிருக்க அதை கேட்டு விஜயா கடுப்பாகிறார்.

அதோடு கொஞ்சம் அமைதியாக வா தலை வலிக்குது என்று கோபப்பட அதற்கு அண்ணாமலை இதெல்லாம் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கு. உனக்கு எப்படி தலை வலிக்குது என்று கலாய்க்கிறார். இன்னொரு பக்கத்தில் ஸ்ருதி என்னப்பா இந்த ஊரு இப்படி இருக்கு? சௌகரியமா இருக்குமா? என்று கேட்க அதற்கு மனோஜ் வீடெல்லாம் பெருசா இருக்காது சின்னதா தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதோடு ரோகிணி நம்ம ஊருகாரங்க பாத்துட்டாங்க என்ன ஆகிறது என்று பதற்றத்தோடு வந்து கொண்டிருக்க அதை பார்த்து மனோஜ் என்ன ஆச்சு என்று கேட்க அதற்கு ரோகிணி ஒன்னும் இல்லை என்று சமாளிக்கிறார். பிறகு எல்லோரும் கிராமத்துக்கு வந்ததும் அங்கு முத்துவின் நாச்சியார் பாட்டி இவர்களை பார்த்து சந்தோஷப்படுகிறார். அப்போது ஊர் காரர்கள் எல்லோரும் வந்து முத்து மீனாவை நலம் விசாரிக்க அதை பார்த்து விஜயாவும் ரோகினியும் கடுப்பாகின்றனர்.

பிறகு விஜயா ரோகிணியை கூப்பிட்டு உங்க மாமா எப்ப வருவாரு? அவர் டீ குடிப்பாரா சைவமா? அசைவமா? என்று கேள்வி மேல் கேட்க அதற்கு முதல்ல அவர் வரட்டும் பாத்துக்கலாம் என்று ரோகிணி சமாளிக்கிறார். அடுத்ததாக காய்கறி எல்லாம் வந்ததும் விஜயா மீனாவை கூப்பிட்டு ரோகினிக்கு இது பிடிக்கும் அதை பண்ணிடு, ஸ்ருதிக்கு இது படிக்கும் அதை பண்ணிடு என்று ஹோட்டலில் மெனு வாசிப்பது போல சொல்லிக் கொண்டே போக இதையெல்லாம் பார்த்து நாச்சியார் பட்டி கடுப்பாகின்றனர்.

அதனால் விஜயாவுக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று மீனா தான் இங்க வந்தாலும் சமைக்கணுமா? என்று கேள்வி கேட்க, அதற்கு விஜயா எங்க வீட்ல எல்லா வேலையும் அவா தான் செய்வா. அவளும் என் மருமக தானே நான் சொல்றதை செய்யப் போறா என்று சொல்கிறார். அதற்கு நாச்சியார்பட்டி அதுவும் சரிதான் நீ சொல்றது செய்வா.... இப்போ எனக்கு நீதான் மருமக. அப்போ நான் சொல்ற வேலையை நீ தானே செய்யணும் என்று கேட்க அதை கேட்டு விஜயா அதிர்ச்சி ஆகின்றார்.

பிறகு நீ தான் சமைக்கணும் என்று சொல்ல, விஜயா கடுப்பாகிறார். ஆனாலும் ரோகினி ஸ்ருதியும் உனக்கு உதவிக்கு வச்சுக்க என்று சொல்ல அவர்களும் அதிர்ச்சையாகின்றனர். அதைத்தொடர்ந்து நாச்சியார் பேட்டி ரோகினி ஸ்ருதியை கூப்பிட்டு வேலை செய்ய சொல்ல அதற்கு அவர்கள் அதான் மீனா இருப்பாங்களே அவங்க செஞ்சுடு வாங்க என்று சொல்ல அதற்கு பாட்டி நீங்களும் சமையல் கத்துக்கணும் என்று கறாராக சொல்லி விடுகிறார்.
அதைத் தொடர்ந்து ரோகினி மசாலா அரைக்க சொல்லி ஸ்ருதியை காய்கறி வெட்ட சொல்லியும் கொடுக்கிறார். அப்போது ரவி நான் சமைக்கிறேன் ரோகிணிக்கு இதெல்லாம் செட் ஆகாது. அனல்ல வேர்த்து போகும் என்று சொல்ல பாட்டி மனோஜியையும், ரவியையும் கூப்பிட்டு முதுகில் ஒரு அடி போட்டு ஊரை சுத்துங்கடா போய் என்று துரத்தி விடுகிறார். அதைத்தொடர்ந்து ரோகிணி அம்மியில் மசாலா அரைக்க ஸ்ருதி காய்கறி வெட்டிக் கொண்டிருக்கும் போது காய்கறி வெட்ட தெரியாமல் கையில் லேசாக கட் ஆகி விடுகிறது.
அதற்கு ஸ்ருதி அய்யோ அம்மா என்று கத்தி ஆஸ்பிட்டலுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்ல, அதற்கு பாட்டி இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லி கையில் சுண்ணாம்பு வச்சா இது சரியாயிடும் என்று தடவி விடுகிறார். பிறகு ரோகிணி அம்மியில் அரைப்பதை பார்த்து அங்கிருக்கும் பெண்கள் இருந்த பொண்ணு மலேசியாவில் இருந்த மாதிரி தெரியலையே? நம்ம ஊரு பொண்ணு மாதிரி அழகா அம்மி அரைக்கிறாங்க என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு எல்லோரும் சமையல் செய்து கொண்டிருக்க மீனா நான் போய் உதவி செய்கிறேன் என்று போக நாச்சியார் பாட்டி இழுத்து உட்கார வைத்து அவர்கள் மட்டுமே சமைக்கட்டும் என்று கூறிவிடுகிறார். சமையல் எல்லாம் முடிந்ததும் எல்லோரும் சாப்பிட அப்போது ஸ்ருதி கையில் வெட்டி கொண்டதால் சாப்பிட முடியாமல் தவிக்க அதற்கு விஜயா ஊட்டி விட அதை பார்த்து பாட்டி நீ எல்லாம் மருமகள்களுக்கு ஊட்டி விடு என்று சொல்ல, அதை கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications