சிறகடிக்க ஆசை: மீண்டும் வீட்டிற்கு வந்த பாட்டி.. மனோஜ்க்கு வைத்த ஆப்பு.. விஜயாவுக்கு விழுந்த அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்று ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மீண்டும் முத்துவின் பாட்டி அண்ணாமலை வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் மனோஜ் மற்றும் விஜயாவிற்கு பிரச்சனை ஏற்படுகிறது.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா நாளுக்கு நாள் முத்து மற்றும் மீனாவை அவமானப்படுத்திக் கொண்டே இருக்கிறார். மனோஜ்க்காக மீனாவை அவர் அவமானப்படுத்துவதும்.. மீனா எவ்வளவு தான் அவமானப்பட்டாலும் ஐயோ அத்தை பாவம் என்று புலம்பி கொண்டிருப்பதை பார்க்கும்போது இவங்க என்ன பெரிய தியாகியா? ஏன் இப்படி நடந்துக்கிறாங்க என்று பலர் நொந்து கொண்டிருக்கிறார்கள். பலர் மீனாவை திட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.

ஏற்கனவே மீனாவின் நகைகளை விற்று விட்டு கவரிங் நகையாக மாற்றி வைத்த விஜயா மற்றும் மனோஜ் வீட்டில் மாட்டி இருக்கின்றனர். ஆனாலும் தப்பு செய்த மனோஜ் மற்றும் விஜயா இருவரும் அதை தப்பு என்று ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதோ இவங்க பெரிய நகை வச்சிருக்காங்க அதை போய் நாங்க எடுத்துட்டோம் என்று திமிராக பேசிக் கொண்டிருக்கின்றனர். மீனாவிடம் மன்னிப்பு கேட்க சொல்லி விஜயாவை அண்ணாமலை சொன்னதால் கோபப்பட்டு மீனாவின் முகத்தில் தன்னுடைய வளையலை கழட்டி வீசி இருக்கிறார்.
ஆனால் வழக்கம் போல விஜயாவை ஸ்ருதியின் அம்மா அவமானப்படுத்தி இருக்கிறார். "வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு" என்பது போலத்தான் இன்றைய எபிசோடில் கூட மீனாவை அவமானப்படுத்திய விஜயா ஸ்ருதியின் அம்மாவிடம் அவமானம் படும்போது பலருக்கும் புரிந்து இருக்கும். தன்னைவிட வசதி வாய்ப்பில் குறைந்தவர் என்று விஜயா மீனாவை அவமானப்படுத்த ஸ்ருதியின் அம்மா விஜயா தன்னோட வசதி குறைந்தவர் என்று அவரை அவமானப்படுத்துகிறார்.
எது எப்படியோ மீனாவிடம் நான் தப்பே செஞ்சு இருந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று விஜயா பேசியிருக்கும் நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அண்ணாமலையின் அம்மா மீண்டும் வீட்டிற்கு வந்து இருக்கிறார். ஏற்கனவே அவரிடம் மட்டும்தான் விஜயா அடக்கி வாசிக்கிறார். அவரிடம் இப்போது பண பஞ்சாயத்து துவங்கியிருக்கிறது.
அதாவது முத்து மனோஜ் பற்றி பேசுகையில் இவர் 29 லட்சம் பணம் தரணும் அதை எப்படி தருவான் என்று கேளுங்கள் என்று போட்டுக் கொடுக்க, அதற்கு பாட்டி அம்மா அவனால் மொத்த பணத்தையும் தர முடியாது அதற்கு என்ன பண்ணலாம் என்று கேட்க, அதுதான் இப்போ பிசினஸ் பண்ணுறானே மாசம் ஐம்பதாயிரம் தர சொல்லுங்க போதும் என்று முத்து சொல்கிறார்.
அதற்கு பாட்டி விஜயாவிடம் நீதான் இந்த பணத்திற்கு பொறுப்பு நீ மனோஜிடமிருந்து மாதம் ஐம்பதாயிரம் வாங்கி கொடுத்துடனும் என்று சொல்ல, விஜயா அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இதனால் இந்த வாரம் ஆட்டம் போட்ட விஜயாவிற்கு அடுத்த வாரம் ஆப்பு ரெடியாக இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications