விஜயா போட்ட அடுத்த பிளான்.. ஸ்ருதியிடம் வசமா சிக்கிட்டாங்க.. அண்ணாமலைக்கு இனி மகிழ்ச்சி தான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை ஜூலை 24ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்ருதி தனக்கு எதிராக பேசி வருவதால் ஸ்ருதியை அடக்கி வைக்க விஜயா ப்ளான் போடுகிறார். அது பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் இருக்கிறது. ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் முத்துவின் பாட்டி மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அவர் விஜயாவிடம், மனோஜ் ஏமாற்றிய பணத்தை இனி நீ தான் மாதம் 50 ஆயிரம் வாங்கி முத்துவிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

இதனால் விஜயா கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் கூட விஜயாவிடம் நேரடியாக ஸ்ருதி கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை அவமானப்படுத்தி இருக்கிறார். மீனாவை ஒவ்வொரு இடத்திலும் விஜயா அவமானப்படுத்தி திட்டிக்கொண்டே இருப்பதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்ருதி தப்பு செய்தது மனோஜ் நீங்க எல்லாரும் கோபத்தை காட்டணும்னா மனோஜ் மீது தான் கோபத்தை காட்டணும்...
அந்த தப்புக்கு துணை போனது விஜயா ஆன்ட்டி தான். அவங்க தன்னுடைய மகனாக இருந்தாலும் தப்புன்னா அதை தட்டி இருக்கணும் ஆனா அதே தப்பை செஞ்சிட்டு அடுத்தவங்க மேல பழியை போட்டுக்கிட்டு இப்போ உண்மை வீட்டுக்கு தெரிஞ்சதும் மீனாவை எப்படி திட்டலாம் என்று ரோகிணி இடம் ஸ்ருதி பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து விஜயாவிடமும் மாமா உங்களிடம் பேசனும்னா ஒரே வழி தான் இருக்கு, நீங்க மீனா விட மன்னிப்பு கேட்கிறதுதான் என்று சொல்ல விஜயா நான் போய் இவகிட்ட மன்னிப்பு கேட்கணுமா என்று கேட்கிறார்.

நீங்கள் தானே தப்பு செஞ்சீங்க அப்போ நீங்க தான் மன்னிப்பு கேட்கணும்.. நீங்க தப்பை செஞ்சுட்டு மீனா மீது கோபப்பட்டுட்டே இருக்கீங்க என்று திட்டிக்கிட்டு வாங்க மீனா போகலாம் என்று கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். ஏற்கனவே ஸ்ருதி எந்த இடத்திலும் தனக்கு சரி என்று பட்டதை உடனே பேசி விடுகிறார். அந்த வகையில் இன்று ரோகிணியிடமும் சரி விஜயாவிடமும் சரி அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து விடுகிறார்.
இன்று வெளியான வீடியோவில் விஜயா பார்வதி வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கு பார்வதி இடம் பேசிக்கொண்டு இருக்கையில் என் வீட்டிற்கு கடைசியா ஒரு பணக்கார திமிரு புடிச்சவ வந்து இருக்காளே அவளை எப்படியாவது அடக்கி வைக்கணும்... இல்லன்னா அவ என்னுடைய மகனையும் என்னிடம் இருந்து பிரிச்சுருவா என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் ஸ்ருதியிடம் அவமானப்பட்டு விஜயா திருந்தாமல் இப்போது புது பிளான் போடுகிறார். இதில் யாரு சிக்கப் போகிறார் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் முத்துவிடம் ரோகிணி மற்றும் மனோஜ் 2 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கின்றனர். இன்னும் 2 லட்சம் ரூபாயை பொறுத்து தருகிறோம் என்று சொல்லி இருக்கின்றனர்.
அதே நேரத்தில் முத்து இந்த பணத்தை வைத்து இன்னொரு கார் வாங்கி அதை வாடகைக்கு விடப் போவதாக சொல்லி ஷோரூம் போயிருக்கிறார். இது தெரிந்தால் அண்ணாமலை சந்தோஷப்பட போகிறார். எது எப்படியோ நாளை காலை எபிசோடில் சம்பவம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications