சிறகடிக்க ஆசை: ஸ்ருதி அம்மா செய்த சதி! கைகலப்பில் ஈடுபடும் முத்து, மனோஜ்.. மீனா இப்படி பேசிட்டாங்க?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அண்ணாமலை வீட்டிற்குள் பிரச்சனை ஏற்பட வேண்டும் என்று ஸ்ருதி அம்மா செய்த சதியால் முத்து மற்றும் மனோஜ் இருவரும் மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது. சில வாரங்களில் கலகலப்பான காட்சிகளும் இருக்கிறது. ஆனால் இந்த வாரத்தில் வீடு பிரச்சனை மீண்டும் பூகம்பமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ரோகிணி மாட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் கடைசியில் முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.

ஸ்ருதி ரவியை தூக்கிக்கொண்டு வீடு முழுக்க சுற்ற, அதை பார்த்த மீனாவும் முத்துவை தன்னை தூக்க சொன்னதும் முத்துவும் தூக்கி சுற்றுகிறார். அப்போது மனோஜ் ரோகிணியை தூக்கி சுற்றுகிறார். இவர்கள் மூன்று பேரும் செய்வதை பார்த்து கடுப்பான விஜயா இதையெல்லாம் ரூமுக்குள்ள போய் பண்ணுங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க என்று திட்ட ரூம் பிரச்சனை மீண்டும் வெடிக்கிறது.
ராதிகாவிடம் நேருக்கு நேராக பாக்யா கேட்ட கேள்வி.. கதிகலங்கிய கோபி.. ஈஸ்வரி விஷயத்தில் எடுத்த முடிவு
இதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அண்ணாமலை வீட்டில் எல்லோரிடமும் உங்களால் மாதத்திற்கு எவ்வளவு பணம் தர முடியும் என்று கேட்க எல்லோரும் அதற்கு குறிப்பிட்ட தொகையை சொல்லி இருக்கின்றனர். அப்போதும் வழக்கம் போல மீனா முத்து பத்தாயிரம் தருவார் நான் 2000 தருவேன் என்று சொல்லி இருக்கிறார். மனோஜ் நான் 3000 தருவேன் என்று சொல்ல ரோகிணி நான் 5000 தருவேன் என்று சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில் அண்ணாமலை இன்றைய எபிசோடில் வீடு கட்டுவதற்காக இன்ஜினியரை வரவைத்து அளவெடுத்து பார்த்திருக்கிறார். அதோடு மாடியில் ரூம் கட்டுவதற்கு 5 லட்சம் பணமாகும் என்று சொன்னதால் அடுத்தடுத்து வீட்டில் எல்லோரும் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி ஸ்ருதி தன்னுடைய அம்மாவிடம் சொல்ல இதை சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்தி அண்ணாமலை வீட்டில் முத்துவிற்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்ருதியின் அம்மா சுதா ஸ்ருதியின் அப்பாவிடம் 5 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார்.

வீட்டிற்கு வந்ததும் ஏற்கனவே இந்த வீடு கட்டுவதற்கு உங்களுக்கு லோனுக்கு ஸ்ருதி அப்பா தானே உதவி செஞ்சார் என்று இளக்காரமாக பேசுகிறார். இதைக் கேட்டு எல்லோருடைய முகமும் வாடி போகிறது. இதைத் தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் ஸ்ருதியின் அம்மா வீடு கட்டுவதற்கு நான் அஞ்சு லட்சம் தரேன் என்று சொல்ல, அதை அண்ணாமலை வாங்க மறுக்கிறார் அதற்கு மனோஜ் ஸ்ருதி எல்லோரும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முத்து வாங்க மறுக்கிறார்.
இதனால் மனோஜ் இந்த வீட்டில நான்தானே மூத்த மகன் நான் எந்த முடிவும் எடுக்க கூடாதா? நீயும் உன் பொண்டாட்டியும் தான் இந்த வீட்டில முடிவு எடுக்கணுமா? நீங்க ரெண்டு பேரும் எங்களை எல்லாரையும் வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டு இந்த வீட்டை ஆளனும்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? சுயநலவாதிகளா என்று திட்ட, யாருடா சுயநலவாதி என்று முத்து மனோஜ் அடிக்கிறார்.

இதை பார்த்து ஸ்ருதியின் அம்மா சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர் வந்த வேலை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வீடு கட்டுவதற்கு உங்கள் யாருடைய தயவும் தேவையில்லை என்னுடைய கணவர் வேலை செஞ்சு மாடியில் வீடு கட்டுவார் என்று மீனா சத்தியம் செய்து சபதம் போட்டு இருக்கிறார். ரோகிணி மீனாவை ஏற்றிவிட்டதால் மீனா செய்த சத்தியத்தால் முத்து பிரச்சனையில் சிக்குகிறார். இனி முத்து எப்படி வீடு கட்ட போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications