ராதிகாவிடம் நேருக்கு நேராக பாக்யா கேட்ட கேள்வி.. கதிகலங்கிய கோபி.. ஈஸ்வரி விஷயத்தில் எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 25ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாக்கியா, ஈஸ்வரிக்காக ராதிகா வீட்டிற்க்கே வந்து பேசி இருக்கிறார். அதுபோல கோபி இடமும் பாக்கியா கேட்ட கேள்வியால் கோபி தலை குனிந்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி அழுது கொண்டே இருக்க பாக்கியா சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தும் வேண்டாம் என்று சொல்கிறார். ராமமூர்த்தியும் பாக்கியவும் ஆறுதல் சொல்ல இனியா அவங்களை மாதிரி எனக்கு பேச தெரியாது ஆனா நீங்க ரொம்ப நல்லவங்க பாட்டி, அதனால நீங்க அழுகாதீங்க நீங்க அழுதா எனக்கும் அழுக வருது என்று சொல்கிறார். இதைத் தொடர்ந்து பாக்கியா ராதிகா வீட்டிற்கு போக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்.

மறுபக்கத்தில் கோபி ராதிகாவிடம் பேசப்போகிறார். அதற்கு ராதிகா நான் உங்களை கல்யாணம் பண்ணாமலே இருந்து இருக்கலாம். கல்யாணத்துக்கு பிறகு என்னுடைய சந்தோஷம் மொத்தமா போச்சு. இப்போ உங்க அம்மாவால என் குழந்தையும் போச்சு என்று கோபப்பட, அம்மா அப்படி செஞ்சிருக்க மாட்டாங்க என்று கோபி பேச வரும்போது உங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதீங்க என்று கோபப்படுகிறார்.
அடுத்த கட்டத்தில் பாக்யா ராதிகா வீட்டிற்கு கிளம்பி வருகிறார். பாக்யாவைப் பார்த்ததும் கமலா நீ எதுக்கு இங்கே வந்த என்று கோபப்பட்டு பேசி துரத்தி கதவை சாத்த முயற்சி செய்ய பாக்கியா அதை தடுத்து உள்ளே வந்து ராதிகாவிடம் எப்படி இருக்கீங்க என்று நல்லா இருக்கீங்களா என்று விசாரிக்க ராதிகா இங்கு எதுக்கு வந்தீங்க என்று கோபப்படுகிறார். அத்தையை பற்றி நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க என்று பாக்கியா பேச முயற்சி செய்ய, ராதிகா உங்க விளக்கத்தை நான் கேட்க விரும்பல என்று சொல்கிறார்.

நீங்க இன்னைக்கு நேற்று நடந்ததை வச்சு பேசுறீங்க. ஆனால் அதுக்கு முன்னாடி நமக்குள்ள ஒரு நல்ல நட்பு இருந்தது. அந்த நாட்கள் வைத்து தான் நான் உங்களை பார்க்க வந்தேன் என்று பாக்கியா சொல்கிறார். அதோடு உங்களுக்கு இப்போது என்னுடைய ஆறுதல் தேவைப்படாமல் இருக்கலாம் சரி என்று வெளியே கிளம்பி வரும்போது கோபி வீட்டிற்கு வர பாக்கியாவை பார்த்ததும் நீ என்ன பண்ற இங்க என்று கோபி கேட்க, உங்க அம்மாவை பார்த்து நீங்க எப்படி இப்படி எல்லாம் கேட்கலாம்?
உங்க அம்மா இப்படி பண்ணுற ஆளா? உங்க மனசாட்சியை தொட்டு பேசுங்க, எல்லாரையும் தூக்கி போட்டுட்டு என் பையன் தான் வேணும்னு உங்க கூட வந்தாங்க. அவங்களை நீங்க இப்படி காயப்படுத்தி அனுப்பலாமா? மத்தவங்க ஆயிரம் சொல்லலாம் உங்க அம்மாவ நீங்க புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா? என் பையனே இப்படி சொல்லிட்டான்னு சாப்பிடாம தூங்காம அப்படியே புலம்பியபடியே இருக்காங்க என்று திட்டிவிட்டு போகிறார்.

பிறகு பாக்கியா ஈஸ்வரிக்கு சாப்பாடு கொடுக்க ஆனாலும் ஈஸ்வரி புலம்பிக்கொண்டே இருப்பதை பார்த்ததும் கும்பகோணம் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு கூட்டிட்டு போனா நல்லா இருக்கும் என்று செல்வியிடம் பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications