சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial today episode) 2026 மார்ச் பன்னிரெண்டாம் தேதிக்கான எபிசோடு சத்தியா அவருடைய ஓனர் மகளை காதலிக்கும் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. ஆனால் அது சிந்தாமணி பொண்ணு என்பது தெரியாமல் இருக்கிறது அதே நேரத்தில் முத்துவும் மீனாவும் அண்ணாமலை இடம் சந்தோஷமான விஷயத்தை சொல்லி இருக்கின்றனர் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு (Siragadikka Aasai Serial March 12, 2026 episode) ஆரம்பத்தில், சிந்தாமணி நேராக ரோகிணியை சந்தித்து ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லுகிறார். அதாவது விஜயா, மனோஜுக்காக புதிய பெண் பார்த்து வருகிறார் என்று போட்டுக் கொடுக்கிறார். இதை கேட்டவுடன் ரோகிணி கோபம் அடைகிறார். "நான் இன்னும் டைவர்ஸ் கூட கொடுக்கல. அப்படி இருக்கும்போது எப்படி இன்னொரு கல்யாணம் பார்க்க முடியும்?" என்று வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து சத்தமாக கத்துகிறார்.

சிந்தாமணியின் பிளான்

அப்போது ரோகிணி உடனே போய் பிரச்சனை செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் சிந்தாமணி அவரை தடுத்து நிறுத்துகிறார். "கொஞ்சம் பொறுமையா இரு. மனோஜுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது என்ற உண்மையை இன்னும் அந்த பெண் வீட்டாரிடம் சொல்லவே இல்லை. அதை சொல்லிய பிறகும் அவர்கள் கல்யாணத்திற்கு சம்மதித்தால் அப்புறம் போய் பிரச்சனை பண்ணு" என்று கூறி ரோகிணியை சமாதானப்படுத்துகிறார்.

இதற்கிடையில் மற்றொரு பக்கம் அண்ணாமலை வீட்டில் ஒரு வேறு காட்சி நடக்கிறது. அண்ணாமலை வீட்டில் தனியாக இருக்கும்போது முத்து மிகவும் சந்தோஷமாக "அப்பா... அப்பா..." என்று கூப்பிட்டு உள்ளே வருகிறார். அதே நேரத்தில் விஜயாவும் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று ஓடி வருகிறார்.

முத்து சொன்ன நல்ல விஷயம்

அப்போது அண்ணாமலை இருவரையும் உட்கார வைத்து என்ன விஷயம் என்று கேட்கிறார். முதலில் முத்து தான் பேச ஆரம்பிக்கிறார். "நான் ஒரு வேன் வாங்கப் போறேன். அதை வாங்கினா நம்ம அபார்ட்மெண்ட்ல இருக்கிற ஆர்டர்கள் எல்லாம் எனக்கு தான் வரும். நல்லா சம்பாதிக்கலாம்" என்று சொல்கிறார். இதைக் கேட்ட அண்ணாமலை மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.

அதற்குப் பிறகு விஜயா பேச ஆரம்பிக்கிறார். "நான் மனோஜுக்காக ஒரு பெண் பார்த்திருக்கேன். அது நல்ல பணக்கார குடும்பம்" என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் மனோஜ் உடனே உற்சாகமாகி "எப்போ பொண்ணு பார்க்க போறோம்?" என்று ஆர்வமாக கேட்கிறார்.

அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்

அப்போது அண்ணாமலை ஒரு முக்கியமான கேள்வி கேட்கிறார். "மனோஜுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை அந்த பெண் வீட்டாரிடம் சொன்னியா?" என்று கேட்கிறார். அதற்கு விஜயா "இன்னும் சொல்லல" என்று கூறுகிறார். இதைக் கேட்ட அண்ணாமலை அதிர்ச்சியாகி "அப்படி சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?" என்று கேட்கிறார்.

ஆனால் விஜயா தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. "முதலில் அவர்கள் மனோஜை பார்த்தால் கண்டிப்பாக பிடித்திருக்கும். அதன் பிறகு உண்மையை சொல்லிக்கலாம்" என்று பிடிவாதமாக கூறுகிறார். அதற்கு அண்ணாமலை விருப்பமில்லாமல் இருந்தாலும் "என்னமோ பண்ணு" என்று சொல்லி விடுகிறார்.

இதற்கிடையில் முத்து ஒரு விஷயத்தை சொல்லுகிறார். "பெண் வீட்டார் நம்ம வீட்டுக்கு வரும்போது நானும் ரவியும் வீட்டில் இருக்க மாட்டோம். இல்லனா நாங்கதான் உண்மையை உளறிவிடுவோம்" என்று கூறுகிறார். அதனால் அந்த நேரத்தில் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று விஜயாவிடம் கூறிவிட்டு அவர் அங்கிருந்து கிளம்புகிறார்.

சத்யா பிறந்தநாள்

அதற்குப் பிறகு முத்து மீனாவின் அம்மா வீட்டிற்கு செல்கிறார். அங்கே சத்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. வீட்டில் அனைவரும் சேர்ந்து அந்த நிகழ்ச்சியை கொண்டாட தயாராக இருக்கிறார்கள். சத்யாவின் அம்மா வீட்டில் சுடச்சுட கேசரி செய்து கொண்டு இருக்கிறார்.

அந்த நேரத்தில் சிந்தாமணியின் மகள் ரேகா பெரிய கேக்கும், விலையுயர்ந்த டிரெஸ்ஸும் கொண்டு அங்கே வருகிறார். அவர் கொண்டு வந்த டிரெஸ்கள் எல்லாம் ஐந்து ஆயிரம், ஆறு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளவை என்று தெரிகிறது.

அதன்பிறகு அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி சத்யாவின் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். கேக் வெட்டிய பிறகு சத்யா ரேகாவுக்கு கேக் ஊட்டுகிறார். அதேபோல் ரேகாவும் சத்யாவுக்கு கேக் ஊட்டுகிறார். அதை பார்த்த குடும்பத்தினர் கொஞ்சம் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

பிறகு அங்கிருந்து கிளம்பும் முன் ரேகா சத்யாவிடம் தனியாக பேசுகிறார். "நீ இன்னும் பதில் சொல்லவே இல்லை. உன் பதிலை இன்று தான் நான் எதிர்பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு செல்கிறார்.

அதை கேட்ட முத்து மற்றும் மீனா உடனே சத்யாவிடம் "என்னடா... லவ் பண்ணுறியா?" என்று கேட்கிறார்கள். அதற்கு சத்யாவும் நேராக "ஆமாம்" என்று சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட முத்து சத்யாவின் காதலுக்கு உடனே சம்மதம் கொடுத்து விடுகிறார்.

ஆனால் மீனாவுக்கு மட்டும் கொஞ்சம் பயமாக இருக்கிறது. "அவங்க பெரிய பணக்கார குடும்பம். இது சரியா இருக்குமா?" என்று கவலைப்படுகிறார். அதற்கு முத்து "அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. எல்லாத்தையும் நாம பார்த்துக்கலாம்" என்று நம்பிக்கை கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+