பங்க்ஷனில் முத்துவால் பிரச்சனை இல்லை! ஆனால் விஜயா செய்த கலவரம்.. மாலையை வைத்து நடந்த பஞ்சாயத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்துவை வைத்து தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் சண்டையை உருவாக்கிவிட வேண்டும் என்று ஸ்ருதியின் பெற்றோர் ஒரு பக்கமும் ரோகிணி ஒரு பக்கமும் ப்ளான் போட்டு இருக்கும் நிலையில் விஜயா மற்றும் ஸ்ருதியின் அம்மாவிற்கு இடையே பிரச்சனை வந்திருக்கிறது.
அதே நேரத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே முத்துவிற்கு தெரிய வந்திருக்கும் நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் மண்டபத்தில் இருக்கும் போது மீனா முத்துவிடம் பேசிக்கொண்டே இருக்க அதற்கு முத்து, வாயை திறக்காமல் வாயில் கை வைத்துக் கொண்டு இருக்கிறார். மறுபக்கத்தில் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் நீங்க சொன்ன மாதிரி அந்த ரெண்டு அடியாளை வர சொல்லிட்டீங்களா? அவங்க வந்து இந்த முத்துவிடம் பிரச்சனை செய்தால் தான் அதில் கோபப்பட்டு முத்து யாரையாவது அடிப்பான்.

அப்படி அடித்தால் தான் அதை வச்சி நாம பிரச்சனை செஞ்சி ஸ்ருதியையும் ரவியையும் நம்ம வீட்டிலேயே இருக்க வச்சிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு ஸ்ருதியின் அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் அவங்க வந்துடுவாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஸ்ருதிக்கு அவருடைய ஃபிரண்ட்ஸ் நகைகளை போட்டுக் கொண்டிருக்க ஸ்ருதி இவ்வளவு நகைகளை போடணுமா? இது ஒரு மாதிரி நச நசன்னு இருக்கு என்று மறுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா வந்து இது நம்ம முறைப்படி போடற நகை இதையும் போட்டுக்கோ என்று கேரளா முறைப்படி ஸ்ருதியை அதிகமான நகைகளை போட்டு ரெடி பண்ணுகிறார். அந்த நேரத்தில் ரோகிணி இடம் வித்யா வந்து ஸ்ருதி அங்க கேரளா முறைப்படி கிராண்டா ரெடியாகிட்டு இருக்கா அதை பார்த்து உன் மாமியார் உன்கிட்ட வந்து உனக்கு உங்க அப்பா இவ்வளவு செய்யலையா என்று கேட்பார்கள் என்று சொல்ல அதற்கு ரோகிணி பயந்து போய் நாம செட் பண்ண ஆளு வந்துடுவானா? அவன் முத்துவ குடிக்க வைக்கணும் என்று சொல்ல வித்தியா ஒரு ஆளுக்கு போன் பண்ண அவர் நான் எல்லா சரக்கும் வாங்கிட்டு வந்துட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார்.
அடுத்த கட்டத்தில் ஸ்ருதியின் அம்மா துளசி மாலையை கையில் கொண்டு வருகிறார். விஜயா ரோஜா பூ மாலை கொண்டு வருகிறார். அதை பார்த்ததும் முத்து மீனாவிடம் இங்கே மாலையை வச்சு இப்ப ஒரு பஞ்சாயத்து நடக்கப்போகுது. ஸ்ருதி அம்மா நான் சொல்ற மாலையை போடுன்னு சொல்லப் போறாங்க... எங்க அம்மா விட்டுக் கொடுக்காம சண்டைக்கு நிக்க போறாங்க என்று சொல்ல அதற்கு மீனா நீங்க எதுவும் வாய் திறக்காம இங்கேயே இருங்க என்று பிடித்து வைத்துக் கொள்கிறார்.

அதேபோல ஸ்ருதியிடம், ஸ்ருதி அம்மா நம்ம ட்ரடிஷனல் படி நீ மாலை போடணும் என்று சொல்ல, அதற்கு விஜயா அது எப்படி ஸ்ருதி இப்போ எங்க வீட்டு பொண்ணு அதனால எங்க முறைப்படிதான் அவ ரோஜா பூ மாலை போடனும் என்று இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஸ்ருதி கோபமாகி நான் சொல்றதுதான் நீங்க ரெண்டு பேரும் கேக்கணும். மாலை போடுறது நான் தானே? அதனால எனக்கு புடிச்ச மாதிரி நான் போட்டுகிறேன் என்று சொல்லி ரெண்டு மாலையையும் வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்கிறார்.
இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கு என்று வெளியான வீடியோவில் ரோகிணி சொன்ன ஆள் சரக்கோடு மண்டபத்திற்கு வந்துவிடுகிறார். அவர் முத்துவை குடிக்க வைப்பதற்கான முயற்சிகளை எடுக்கிறார். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று நாளை தெரியும்.

-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications