சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் நான்காம் தேதிக்கான எபிசோடில், அண்ணாமலைக்கு தன்னால் ஆபத்து இருப்பதாக நினைத்துக் கொண்ட மீனா, இனி வீட்டுக்கு போக வேண்டாம் என முடிவெடுத்திருப்பது குடும்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial March 4 Episode ), மீனாவை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்த விஜயா, பெண் சாமியார் சொன்னதை நம்பிய நிலையில், தன்னுடைய கணவர் அண்ணாமலை விபத்தில் சிக்கியதும் அதற்குக் காரணம் மீனா தான் என நம்ப ஆரம்பிக்கிறார். இதனால் கடும் கோபத்தில் மீனாவை திட்டி, இனி இந்த வீட்டுக்கு வரக்கூடாது என நேரடியாக கூறிவிடுகிறார்.

மாமாவின் உயிருக்கு தன்னால் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கும் மீனா, தன்னுடைய அம்மா வீட்டிற்கு போய் விடுகிறார். அங்கு சென்றதும், "என்னால தான் மாமாவுக்கு இப்படி ஆயிடுச்சு" என மனவேதனையுடன் அழுகிறார். அவரை சீதா ஆறுதல் கூறி சமாதானப்படுத்துகிறார். இந்தச் சம்பவங்களின் பின்னால் சிந்தாமணியின் திட்டம் இருப்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், ஹாஸ்பிடலில் இருந்த அண்ணாமலை டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வருகிறார். அவரை விஜயா ஆரத்தி எடுத்து வரவேற்கிறார். வீட்டுக்குள் வந்த உடனே அண்ணாமலை, "மீனா எங்கே?" என கேட்கிறார். வீட்டிலிருந்தவர்கள் யாரும் பதில் சொல்லாமல் அமைதியாக நிற்க, முத்து "அவள் பூ டெலிவரி கொடுக்க போயிருக்கா" என பொய் சொல்கிறார். முத்து பொய் சொல்வதை புரிந்து கொள்ளும் அண்ணாமலை, நேரடியாக விஜயாவிடம் "நீ தான் அவளை திட்டி வெளிய அனுப்புனியா?" என கேட்கிறார்.
பின்னர் முத்துவிடம் மீனா இப்போ எங்கு இருப்பா எனக் கேட்க, "அவள் அம்மா வீட்டில இருக்கா" என அவர் சொல்கிறார். உடனே "அவளை கூட்டிட்டு வா" என அண்ணாமலை முத்துவை அனுப்புகிறார்.
மீனாவின் அம்மா வீட்டிற்கு போன முத்து, "அப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னார்" என கூறுகிறார். ஆனால் மீனா, "நான் கொஞ்ச நாளைக்கு அங்கே வரமாட்டேன்" எனத் தெளிவாக சொல்லிவிடுகிறார். "மாமாவுக்கு இப்படி நடந்ததுக்கப்புறம் அத்தை சொன்னதை என்னால நம்பாம இருக்க முடியல" என கண்ணீர் மல்கப் பேசுகிறார்.

இதற்கிடையில் ஸ்ருதி வீட்டிற்கு வருகிறார். அவரைப் பார்த்த விஜயா மகிழ்ச்சியுடன், "மீனா இந்த வீட்டை விட்டுப் போனதுக்கப்புறம் நல்லதா நடக்குது. பாரு நீயே திரும்ப வந்துட்ட" என கூறுகிறார். அதற்கு ஸ்ருதி, "நான் அங்கிளை பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன்" என பதிலடி கொடுக்கிறார். பின்னர் மீனா குறித்து விசாரிக்க, அவர் அம்மா வீட்டிற்கு போயிருப்பது தெரிகிறது.
இந்த மூடநம்பிக்கையை நம்பி இப்படிப் பட்ட முடிவுகளை எடுப்பது தவறு என விஜயாவை ஸ்ருதி கடுமையாக திட்டிக் கொண்டிருக்கிறார். "இதெல்லாம் முட்டாள்தனமான செயல்" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் எவ்வளவு சொன்னாலும் விஜயா தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. "நான் என்னோட முடிவை மாற்ற மாட்டேன்" என உறுதியாக நிற்கிறார்.
இதனால் மீனா தற்போதைக்கு வீட்டிற்கு திரும்ப வரமாட்டார் என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் முத்து வீட்டை விட்டு போகவில்லை. இதனால் சிந்தாமணியின் திட்டம் எப்போது அம்பலமாகும்? குடும்பத்தில் மீண்டும் அமைதி திரும்புமா? என்பதே அடுத்த கட்ட எதிர்பார்ப்பாக உள்ளது












Click it and Unblock the Notifications