சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய அடுத்த உண்மையை உடைத்த வக்கீல்! அதிர்ச்சியில் விஜயா.. முத்து சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே 16ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜ் மற்றும் ரோகிணி விவாகரத்து செய்வதற்காக பார்த்திருக்கும் வக்கீல் விஜயாவிடம் சொன்ன விஷயத்தை கேட்டு விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் முத்துவிற்கு ஒரு மகிழ்ச்சி ஆன விஷயம் நடந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலின், இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், வேற வழியே இல்லாமல் மீனா வீட்டில் இருக்கும் விஜயா திமிராகவே பேசிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பட்டும் திருந்தலையே இவங்க என்பது போலத்தான் நமக்கு கோபம் வருகிற மாதிரி தான் விஜயாவின் ஆட்டிட்யூட் இருக்கிறது.
அதாவது மீனாவின் அம்மா வந்து விஜயாவிடம் இன்னைக்கு பூரி சமைக்கவா? என்று கேட்க, அதற்கு நீங்க எந்த எண்ணெயில் பொறிப்பிங்க? பழைய எண்ணையா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் மீனாவின் அம்மாவும் பயந்தபடி அவரிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

வருத்தத்தில் அண்ணாமலை
வழக்கம்போல அண்ணாமலை விஜயாவின் திமிரை பார்த்து கடுப்பானாலும் அவரால் எதுவும் பெருசாக பேச முடியல, இவ இப்படித்தான் என்று அலுத்து கொள்கிறார். மீனா வீட்டில் இருக்கும் எல்லோரும் விஜயாவிற்காக விழுந்து விழுந்து வேலை செய்கிறார்கள். அதை பார்க்கும் முத்து அம்மா இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த வீட்ல இருப்பாங்களா அப்பா என்று அண்ணாமலையிடம் கேட்க, அதற்கு அண்ணாமலை வேற வழி இல்ல அவ இருந்துதான் ஆகணும் வீட்டில் எல்லாருமே அவளை நல்லபடியா கவனிச்சுக்கிறாங்க அந்த சந்தோஷம் அவளுக்கு இருக்கு ஆனா அதை வெளிய காட்டிக்க மாட்டா அவ்வளவுதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் மனோஜ் ஷோரூம்க்கு ரோகிணி வருகிறார். அப்போது மனோஜிடம் ஆன்ட்டி எங்கே என்று கேட்க, அதற்கு மனோஜ் அப்பா வந்து கூட்டிட்டு போய்ட்டாங்க இப்போ அவங்க மீனா வீட்ல இருக்காங்க என்று சொல்கிறார். அதற்கு ரோகினி பாத்தியா உங்க அப்பாவால அம்மா இல்லாமல் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியல. அதேபோலத்தான் என்னாலயும் உன்னை பிரிந்து இருக்க முடியல என்று ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்கிறார்.

வக்கீல் பார்த்த காட்சி
அந்த நேரத்தில் மனோஜ் டைவர்ஸ் கேஸை நடத்திக் கொண்டிருக்கும் வக்கீல் அங்கு வருகிறார். அவர் மனோஜியையும் ரோகிணியையும் ஒன்றாக பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு மனோஜிடம் தன்னுடைய வீட்டுக்கு ஏசி வாங்க வேண்டும் என்று தனியாக கூட்டிக்கொண்டு சென்று இரண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்களா? என்று கேட்கிறார். அதற்கு அவர் இல்ல மேடம் என்று சொல்லி அனுப்புகிறார்.
அதிர்ச்சியில் விஜயா
பின்னர் அங்கிருந்து போகும் வக்கீல் விஜயாவுக்கு போன் பண்ணி உங்க பையன் டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிடலாமா? என்று கேட்ட விஜயா எதுக்கு என்று கேட்டதும் மனோஜ் ரோகிணி ரெண்டு பேரும் ஷோரூமில் இருந்த விஷயத்தை சொல்கிறார். இதனால் விஜயா டென்ஷன் ஆகிறார். இதற்கிடையே விஜயாவால் கீழே உட்கார்ந்து சாப்பிட முடியாது என்பதால் மீனாவின் அம்மா பக்கத்து வீட்டில் இருந்து டைனிங் டேபிள் கடன் வாங்கி வந்து சாப்பாடு பரிமாறுகிறார்.

விஜயாவின் திமிர்
ஆனாலும் விஜயா அப்போதும் கூட சாப்பாடை சாப்பிட்டு பார்த்துவிட்டு இது என்ன குழம்புன்னே தெரியலையே என்று அலட்சியமாக பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு முத்து அண்ணாமலையிடம் தனக்கு ஒரு நண்பர் கிடைத்து இருப்பதாகவும் அவர் வீட்டை மீட்டு விடலாம் என்று சொன்னதாகவும் சொல்கிறார். இதைக் கேட்டு அண்ணாமலை சந்தோஷப்படுகிறார்.
மனோஜ் எப்படி 48 லட்சம் கடன் வாங்கினான் என்று நாம முறையா விசாரிக்கணும் அது பற்றி பைனான்ஸியரிடம் பேச போகணும் என்று அந்த நண்பர் சொல்லி இருக்கிறார் என்று சொன்னதும் அண்ணாமலை சரி போயிட்டு வா என்று சொல்கிறார். உடனே முத்து தன்னுடைய ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வீட்டுக்குக்கு போன் செய்து எப்போ பைனான்ஸியர் வீட்டுக்கு போகலாம் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications