சிறகடிக்க ஆசை: செல்வம் சொன்ன உண்மை! முத்துக்காக மீனா எடுத்த சூப்பர் முடிவு! விஜயாவுக்கு இது தேவைதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே ஏழாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் முத்து குடிக்கவில்லை என்பதை செல்வம் மீனாவிடம் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் முத்துவின் குடியை நிறுத்துவதற்கான முயற்சியில் விஜயா வந்து சிக்கி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து மீனாவிடம் நான் குடிக்கவில்லை என்று உண்மையை சொல்ல அதை நம்பாத மீனா உங்களை எல்லாம் திருத்த முடியாது. நல்லவேளை இது எல்லாம் பார்க்க எங்க அப்பா இல்ல. அவர் இருந்திருந்தால் காலம் முழுக்க கவலைப்பட்டு இருப்பார். என் தலை எழுத்து என்று புலம்பிக் கொண்டிருக்க, கோபத்தில் முத்து நீயும் என்னை நம்பல சரி விடு நான் குடிகாரனாவே இருந்துட்டு போறேன்.

Siragadikka aasai serial May 7th promo and episode full update

ஊரும் அப்படித்தான் பேசுது, பேசிட்டு போகட்டும் என்று டம்ளரை தட்டி விட்டு வெளியே வந்து விடுகிறார். பிறகு மீனா வெளியில் போகும் போது அங்கு வந்த சிட்டி என்னக்கா எனக்கு என்னமோ அட்வைஸ் பண்ண இன்னைக்கு உன் புருஷனை ஊரே குடிகாரன்னு சொல்லிட்டு இருக்கு. அவருக்கு போய் அட்வைஸ் பண்ணு, குடிக்காமல் இருக்க சொல்லு. இல்ல குடிச்சா கார் ஓட்டாமல் இருக்க சொல்லு.

இப்போ அவருக்கு தான் அட்வைஸ் தேவைப்படுகிறது. என்ன பண்ண உன் வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும்னு எழுதி வெச்சிருக்கு என்று நக்கலாக பேசிவிட்டு போகிறார். பிறகு முத்து செல்வம் மற்றும் தன்னுடைய நண்பர்களை சந்திக்கிறார். அப்போது அவர்களிடம் நான் குடிக்கல நீங்களாவது என்னை நம்புவீங்களா? என்று கேட்க, அதற்கு அவர்கள் நாங்க உன்னை நம்புறோம்.

Siragadikka aasai serial May 7th promo and episode full update

நாங்க குடிச்சா கூட நீ எங்களை திட்டுவ. குடிச்சிட்டு வண்டி ஓட்ட கூடாதுன்னு சொல்லுவா.. நீ குடிச்சிருக்க மாட்டன்னு எங்களுக்கு தெரியாதா? என்று அவருக்கு ஆறுதல் சொல்லி வண்டியை எடுக்கிற வழிய பாரு என்று சொல்கின்றனர். பிறகு மீனா பூ கொடுக்க வரும்போது எல்லாரும் முத்து வீடியோ பற்றிய பேசுகின்றனர். அப்போது ஒரு பெண் என்னுடைய கணவர் இப்படி குடிக்கும்போது பக்கத்து வீட்டுக்காரங்க ஒரு பொடி தந்தாங்க.

அது குடித்த பிறகு தான் அவர் குடியை நிப்பாட்டனாரு என்று சொல்ல, மீனா அந்த பொடியை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் ஜூஸில் கலந்து வைக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை தனக்கு தெரிந்தவர் ஒருவர் ஆர்டர் கொடுத்திருப்பதாக கீழே போன் பண்ணி கூப்பிட மீனாவும் கீழே வந்து அண்ணாமலை இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை முத்துவை பற்றி பேச முத்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

Siragadikka aasai serial May 7th promo and episode full update

பிறகு மாடிக்கு வந்த மீனா ஜூஸ் வேணுமா? என்று முத்துவிடம் கேட்க முத்துவும் சந்தோஷமாக கொடு என்று சொல்கிறார். அதற்குள் விஜயா முத்துவுக்காக போட்டு வைத்திருந்த ஜூஸை குடித்து விடுகிறார். மீனா வந்து பார்க்கும்போது அங்கு ஜூஸ் இல்லாததால் விஜயாவிடம் கேட்க அதற்கு ஆமாம் நான் தான் குடிச்சேன். உன் புருஷன் இந்த ஜூஸை எல்லாம் குடிக்க மாட்டான். அவன் தண்ணி ஊத்தாம சரக்கு தான் குடிப்பான் என்று நக்கல் பண்ணுகிறார்.

அதற்கு மீனா ஐயோ அத்தை பொடி போட்டு வச்ச ஜூஸை குடிச்சிட்டாங்களே இனி என்ன நடக்கும் என்று தெரியலையே என்று பொடி வாங்கி கொடுத்த பெண்ணுக்கு போன் பண்ண அவர் போனை எடுக்காததால் நேரில் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பி போகிறார். அந்த நேரத்தில் செல்வம் அங்கு வர செல்வத்தை பார்த்த மீனா நீங்களாவது அவருக்கு அட்வைஸ் பண்ண கூடாதா? என்று கேட்க அதற்கு செல்வம் முத்து குடிக்கவே இல்ல.

Siragadikka aasai serial May 7th promo and episode full update

அந்த வீடியோ உண்மை இல்ல என்று சொல்கிறார். அதற்கு மீனா எதை நம்புவது என்று எனக்கு தெரியல. சரி நான் வேற ஒரு வேலையா போயிட்டு இருக்கேன் வந்து பேசுறேன் என்று சொல்லி கிளம்புகிறார். மறுபக்கத்தில் வீட்டிற்கு பார்வதி வந்திருக்கு விஜயா அவருடைய பேசிக் கொண்டிருக்கும்போது விஜயா வயிறு எரியுது என்று பாத்ரூம் ஓடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+