Siragadikka Aasai : அம்பலமாகும் ரோகிணி ரகசியம்? - மீனாவிடம் சிக்கிய உண்மை! நாடகம் போடும் அருண், முத்து செய்த சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோட் (ஆகஸ்ட் 21) விறுவிறுப்பு நிறைந்த தருணங்களுடன் நகர்கிறது. மீனா ரோகிணி அம்மா பற்றிய ரகசியங்களை கிளறுகிறார். முத்து மற்றும் அருண் இடையே செல்வத்தால் புதிய பிரச்சனை வருகிறது. ஆனால் அருண் முத்துவுக்கு எதிராக நாடகம் போடுகிறார்.

மீனாவின் சந்தேகம்
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், ரோகிணியின் அம்மாவிடம் பேசியதை மீனா தனது குடும்பத்தினரிடம் கூறுகிறார். "அவர்கள் குழப்பமாகப் பேசினார்கள். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. அவர்கள் ஏதோ ஒரு பெரிய உண்மையை மறைக்கிறார்கள். நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள்" என்று மீனா முத்துவிடம் கூறுகிறார்.
வெளிநாட்டில் இல்லை
மேலும் அந்த அம்மாவின் மகள் வெளிநாட்டில் இல்லை என்றும் அவள் இங்கேயே இருக்கிறாள் என்றும் மீனா சொல்கிறார். ஆனால் விஜயா இந்த விஷயத்தை விட்டுவிடும்படி சொல்கிறார். க்ரிஷ் பாட்டியை கண்டுபிடித்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முத்து பேசிக்கொண்டிருக்க ரோகிணி இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
முத்து - அருண் மோதல்
ஒருபக்கம் அருண் சோகமாக வீட்டிற்கு வர சீதா என்ன ஆச்சு என்று கேட்கிறார். முத்துவின் நண்பர் செல்வம் மரியாதை இல்லாமல் பேசியதாக அருண் பொய் சொல்கிறார். அருண் சோகமாக பேசுவதை நம்பும் சீதா உங்க நேர்மையை நீங்க யாருக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம் எங்க மாமா பேரை சொல்லி அவங்க பிரெண்ட்ஸ் யாராவது உங்களை தொந்தரவு செஞ்சா நீங்க மத்தவங்க கிட்ட எப்படி நடந்துபிங்களோ அப்படியே இருங்க என்று சொன்னதும் அருண் மனதிற்குள் சிரித்துக் கொள்கிறார்
மறுபக்கத்தில் கார் ஷெட்டில் உட்கார்ந்திருந்த செல்வம் நண்பர்களிடம் அருண் தன்னை அடித்த விஷயத்தை சொல்கிறார். "நாங்கள் ஃபைன் கட்டியும் நடுரோட்டிலேயே உட்கார வைத்துவிட்டார்கள்" என்று அவர் வருத்தப்படுகிறார். இந்த விஷயத்தை முத்துவிடம் சொல்லவேண்டாம் என்றும் அவர் நண்பர்களிடம் கூறுகிறார்.
முத்துவின் கோபம்
சிறிது நேரத்தில் முத்து அங்கே வர செல்வம் முத்துவைப் பார்த்துப் பேச முடியாமல் டீ குடிக்கப் போவதாகக் கூறி கிளம்புகிறார். என்ன நடந்தது என்று முத்து கேட்க, செல்வம் மறைத்தாலும் கூட இருந்தவர்கள் அருண் செய்ததை சொல்லிவிடுகிறார்கள். முத்து கோபப்பட்டு அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு மருத்துவமனைக்கு வந்து சீதாவை சந்தித்த முத்து, "உன் புருஷனுக்கு என் மேல கோவம் இருந்தா என் மேல காட்டச் சொல்லு. அதை விட்டுட்டு என் நண்பன் மேல காட்டுறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை" என்று கோபமாகப் பேசுகிறார். சீதா ஏதோ சொல்ல வர, "என்ன நடந்தது என்று எனக்கும் தெரியும். அமைதியாக இருக்கச் சொல்லு" என்று எச்சரித்துவிட்டு செல்கிறார்.
மகேஸ்வரியின் புகார்
ரோகிணியின் தோழி மகேஸ்வரி போன் செய்து, "க்ரிஷ் சரியா சாப்பிட மாட்டேங்குறான் படிக்க மாட்டேங்குறான்" என்று புகார் சொல்கிறார். பிறகு மூவரும் கான்ஃபரன்ஸ் காலில் பேசுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இந்த எபிசோட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications