சிறகடிக்க ஆசை: ஹாஸ்பிடலில் அட்மிட்டான அண்ணாமலை.. விஜயா கொடுத்த அதிர்ச்சி! மீனா எடுத்த விபரீத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial Promo) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் இரண்டாம் தேதி முதல் 7ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சாமியார் பெண் சொன்னது போலவே இப்போது அண்ணாமலைக்கு ஆக்சிடென்ட் ஆகி இருக்கிறது. இதனால் விஜயா மீனா மீது குற்றச்சாட்டுகளை வைக்க கடைசியில் மீனா விபரீத முடிவு எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க, மீனா முத்துவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று விஜயாவை போலவே சிந்தாமணியும் பிளான் பண்ணி கொண்டு இருக்கிறார். ஒரு பக்கம் ரோகிணியும் முத்துமீனா மீது கோபத்தில் இருக்கிறார். அதேபோல சிந்தாமணி விஜயாவின் வீட்டை அபகரிக்க வேண்டும் என்பதற்காக முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு துரத்தி விடுவதற்காக ஒரு சாமியார் பெண்ணை அனுப்பி வைத்திருந்தார்.
போலி சாமியார்
அந்த பெண் ஆரம்பத்தில் மனோஜ் கடைக்கு சென்று ரோகிணி பற்றிய உண்மைகளை எல்லாம் சொன்னார். பிறகு விஜயாவின் வீட்டிற்கு வந்து அண்ணாமலையின் உயிருக்கு மீனாவால் ஆபத்து இருக்கிறது, அதனால் மீனா இந்த வீட்டை விட்டுப் போக வேண்டும் என்று சொல்லி இருந்தார். இதை கேட்டு முத்து அந்த பெண்ணை அடிக்கப் போக கடைசியில் அங்கிருந்து ஓடி போயிருந்தார்.
சிந்தாமணியின் நாடகம்
இது பற்றி விஜயா சிந்தாமணியிடமே சொல்ல, அவர் அந்த பெண் சக்தி வாய்ந்த சாமியார் என்பதை நிரூபிப்பதற்காக ஆட்களை செட் செய்து விஜயாவை ஏமாற்றி இருந்தார். இதை எல்லாம் தெரியாத விஜயா வீட்டிற்கு வந்து மீனா இந்த வீட்டை விட்டுப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்க அதற்கு அண்ணாமலையும் முத்து எல்லாருமே திட்டி இருந்தனர்.
அண்ணாமலைக்கு ஆக்சிடென்ட்
இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் (Siragadikka Aasai serial latest promo (March 2-7, 2026)) அண்ணாமலையும் அவருடைய நண்பரும் ரோட்டில் நடந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு பைக்கில் வந்த நபர் அண்ணாமலை மீது மோதிவிட்டு நிற்காமல் போய்விடுகிறார். அவரை ஹாஸ்பிடலில் சேர்க்க அவருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்கின்றனர். இதை கேட்டு பதறிப்போன விஜயா இத்தனைக்கும் காரணம் மீனாதான், மீனாவால் தான் என் புருஷன் உயிருக்கு ஆபத்து இவள் ஒரு ராசி கெட்டவள் என்று வழக்கம் போல கண்டமேனிக்கு பேசுகிறார்.
வீட்டை விட்டு வெளியேறும் மீனா
இதனால் மீனா அழுதபடியே அங்கிருந்து போகிறார். அண்ணாமலைக்கு நடந்த ஆக்சிடென்ட் சிந்தாமணியின் சூழ்ச்சி தான் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் இந்த உண்மையை முத்துவும் மீனாவும் எப்படி கண்டுபிடிக்க போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. எப்படியும் இனி என்னால் மாமா உசுருக்கு எதுவும் ஆகக்கூடாது என்று மீனா வீட்டை விட்டு போய்விடுவார்.
மீனாவுக்காக முத்துவும் வீட்டை விட்டு போவார். அதற்கு பிறகு சிந்தாமணி வீட்டை பிடுங்கியதும் விஜயாக்கு தான் செய்த முட்டாள்தனம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று ரோகிணியும் மனோஜும் விஜயாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் சிந்தாமணியிடமும் சிக்க போகிறார்கள். இதனால் அடுத்த வாரத்தில் பெரிய பஞ்சாயத்து இருக்கப் போகிறது.












Click it and Unblock the Notifications