சிவாஜியின் அன்னை இல்லம்.. பிரபு வீட்டை யாரும் அடமானம் வைக்கவில்லை.. சிதறாத சொத்துக்கள்: பிரபலம்
சென்னை: சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை, ராம்குமார், துஷ்யந்த் தரப்பில் அடமானமாக கொண்டுபோய் வைக்கவில்லை.. அதற்கான சூழல் நீதிமன்றம் மூலம் வந்தது.. இது தொடர்பாக ராம்குமார் தரப்பில் அப்பீல் போயிருக்கிறார்கள்.. பொதுவாக, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக நீதிமன்றம் நடந்து கொண்டாலும், பணம் தரவேண்டியவர்களின் சூழ்நிலை, பிரச்சனைகள், போன்றவைகளையும் ஆராய்ந்துதான் நீதிமன்றம் முடிவெடுக்கும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, அன்னை இல்லம் ஜப்திக்கு வந்த காரணத்தை தெளிவாக கூறியிருக்கிறார்.. இதில், அன்னை இல்லம் அடமானமாக வைக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

அதிகரித்த கடன் தொகை
"கடன் தொகை அதிகமாகிவிட்டதால், கோர்ட்டுக்கு செல்கிறார்கள் பைனான்சியர்கள்.. இதையடுத்து துஷ்யந்தையும், ராம்குமாரையும் கோர்ட்டுக்கு அழைத்தும் செல்லவில்லை. வாய்தா, வாய்தா என்று கோட்டை மதிக்கவில்லை, கோர்ட்டுக்கும் போகவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் முன்னிலையில், சம்மதம் தெரிவித்து, கடனை கட்டவும் மறுக்கிறார்கள்.. இது கிட்டத்தட்ட கோர்ட்டை அவமதிப்பது போலத்தான்.
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம்
ஆனால், பணத்தை பெற்றுத்தர வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு உள்ளது. எனவே, கடன் வாங்கியவர்களிடம் சொத்து இருந்தால் அதற்கான முகாந்திரத்தை கொண்டு வந்து காட்டுங்கள் என்று நீதிமன்றம் சொல்கிறது.. இதனால், பிரபு, ராம்குமார் இரு மகன்களுக்கும் அன்னை இல்லம் பொதுவாக இருக்கும் என்பதால், அதையே சொத்தாக கொண்டுபோய் நீதிமன்றத்தில் காட்டுகிறார்கள். காரணம், இதுதான் சிவாஜி கணேசன் குடும்பத்தில் வெளிப்படையாக தெரியும் சொத்து ஆகும்.
இதையடுத்து, நீதிபதியும், இரு மகன்களுக்கும் பங்கு இருக்கும் என்று நினைத்து, அன்னை இல்லத்தின் மொத்தமுள்ள 53240 சதுர மீட்டரில், சுமார் 13000 மட்டுமே ஜப்தி செய்ய உரிமை தருகிறார்கள். இப்படித்தான் ஜப்தி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே தவிர, அன்னை இல்லம் என்ற சொத்தை எந்த இடத்திலும், யாரிடமும் ராம்குமார் தரப்பில் அடமானமாக வைக்கவில்லை.
வில்லங்க சொத்து
இப்படி ஜப்தி உத்தரவு செய்யப்பட்டால், இதனை அட்டாச்மென்ட் செய்வார்கள்.. அதாவது, சார் பதிவாளர் அலுவலகத்தில், குறிப்பிட்ட சொத்தை, குறிப்பிட்ட பைனான்சியருக்கு, பணம் தர வேண்டும் என்பதற்காக கோர்ட் ஆர்டர் பெறப்பட்டுள்ளது என்று பதிவு செய்வார்கள். இப்படி ஆர்டரை பதிவு செய்யும்போது, வேறு யாருக்கும் அந்த சொத்தை விற்க முடியாது. இதனால், அது வில்லங்க சொத்தாக கருதப்பட்டுவிடும். ஆனால், அந்த சொத்தை எப்போது விற்பதாக இருந்தாலும், பைனான்சியருக்கு பணம் தந்துவிட்டுதான் விற்க முடியும்.. இதுதான் தற்போது நடந்துள்ளது.
அப்பீல் மனு தாக்கல்
இதற்கு பிறகுதான் ராம்குமார் அப்பீல மனு தாக்கல் செய்துள்ளார்.. "கடனை வாங்கியது துஷ்யந்த் என்பதால், அவருக்கும் அன்னை இல்லத்துக்கும் சம்பந்தம் இல்லை. அதில் எனக்கும் சொந்தமில்லை" என்று மனு தாக்கல் செய்துள்ளார்.. சொத்தில் மகனுக்கே பங்கு இல்லாதபோது பேரனுக்கு பங்கு இருக்காது. எனவே, மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். உடனே நாளைக்கே இந்த வழக்கு முடியாது.. ஒரு சூழ்நிலை வரும்போதுதான் கடைசி தீர்ப்பு என்ன என்பது தெரியவரும்.
பொதுவாக, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக நீதிமன்றம் நடந்து கொண்டாலும், பணம் தரவேண்டியவர்களின் சூழ்நிலை, பிரச்சனைகள், போன்றவைகளையும் ஆராய்ந்துதான் நீதிமன்றம் முடிவெடுக்கும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications