ஆசைப்பட்ட நிலத்தை அபகரிக்க சவுந்தர்யாவுடன் மோகன் பாபு மோதினாரா? சொத்துக்கள் எப்படி கைமாறின?: பிரபலம்
சென்னை: சவுந்தர்யாவின் 6 ஏக்கர் நிலம் இப்போது நடிகர் மோகன்பாபுவிடம் உள்ளது. அந்த இடத்தை சவுந்தர்யாவிடம் கேட்டு மோகன் பாபு வாங்கினாரா? அல்லது நில தர மறுத்ததால் சதித்திட்டம் செய்யப்பட்டதா? சவுந்தர்யா மறைவுக்கு பிறகு அந்த சொத்தை மோகன் பாபு வாங்கினாரா? கணவர் ரகுவிடமிருந்து வாங்கினாரா? குறைந்த விலைக்கு வாங்கினாரா? அதே விலைக்கு வாங்கினாரா? என்று பல கேள்விகள் உள்ளதால், இதற்கெல்லாம் காவல்துறை விசாரணையில்தான் பதில் கிடைக்கும்" என்று கருத்து தெரிவித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சவுந்தர்யா.. சில நடிகைகள் ஒரு காலகட்டத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க துவங்கிவிடுவார்கள்.. ஆனால், சவுந்தர்யா எந்த காலத்திலும் கவர்ச்சியாக நடிக்கவில்லை..

பண்பட்ட, குணச்சித்திர நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கோலோச்சியிருந்தார்.. பிறகு மார்க்கெட் குறைந்தவுடன், திருமண பந்தத்துக்குள் நுழைந்தார்.. ரகு என்பவரை திருமணம் செய்தார்.. பாஜகவில் இணைந்தார். அதன் பிரச்சாரத்துக்கும் சென்றார்..
2 மாத சிசு
பெங்களூரிலிருந்து கரீம் நகர் என்ற இடத்துக்கு செல்வதற்காக ஹெலிகாப்டரில் ஏறினார்.. ஆனால், கொஞ்ச தூர உயரத்திலேயே ஹெலிகாப்டர் பல்டி அடித்து, தீப்பற்றி எரிந்தது.. சவுந்தர்யா, அவரது சகோதரர், சகோதரருக்கு நெருக்கமான 2 பேர், சவுந்தர்யாவின் உதவியாளர்கள் என அத்தனை பேரும் ஹெலிகாப்டரில் இறந்துவிட்டார்கள.. அப்போது 2 மாத சிசு சவுந்தர்யாவின் வயிற்றில் இருந்ததாக கூறப்பட்டது.
விமான விபத்துகள் நடக்கும்போதெல்லாம் சவுந்தர்யா பற்றின பேச்சு வரும். அதற்கு பிறகு மறைந்துவிடும். இப்போது மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. மோகன் பாபு தெலுங்கில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்.. சீனியர் நடிகர்.. ரஜினியின் நெருங்கிய நண்பரும்கூட.. மோகன்பாபு குடும்ப விழாக்களில் ரஜினியும், ரஜினியின் குடும்ப விழாக்களில் மோகன்பாபுவும் கலந்து கொள்வார்கள். பல வருட காலமாக இந்த நட்பு இவர்களுக்குள் தொடர்கிறது.
இப்போது சிட்டிமல்லு என்பவர் கமிஷனர் ஆபீசில் புகார் ஒன்று தந்துள்ளார்.. மோகன்பாபு திடடமிட்டு சதி செய்து, சவுந்தர்யாவை கொலை செய்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.. சவுந்தர்யாவின் 6 ஏக்கர் நிலத்தை, மோகன் பாபு விலைக்கு கேட்டதாக தெரிகிறது. அதற்கு சவுந்தர்யா, தனக்கு மிகவும் பிடித்த இடம் என்பதால் தர விருப்பமில்லை என்று சொல்லி உள்ளார்.
அதற்கு மோகன் பாபு, தனக்கு அந்த இடம் வேண்டும் என்று வற்புறுத்தி நெருக்கடி தந்ததாக சிட்டிமல்லு தன்னுடைய புகாரில் கூறியிருக்கிறார்.. சவுந்தர்யாவின் 100 கோடி நிலத்தை தர மறுத்த காரணத்தினால், அந்த சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துககாக, திட்டமிட்டு சவுந்தர்யாவை மோகன் பாபு கொலை செய்துவிட்டதாகவும் அந்த புகாரில் கூறியிருக்கிறார்.
மோகன்பாபு ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபர் ஆவார்.. அந்த சொத்தின்மீது தனிப்பட்ட விருப்பம் இருந்திருக்கலாம். எனினும் சிட்டிமல்லு தந்துள்ள புகாரின் உண்மைத்தன்மை குறித்து ஆராய வேண்டும். மொத்தத்தில், சவுந்தர்யாவின் மரணம் மீண்டும் சச்ர்சைக்குள்ளாகியிருக்கிறது.
இதனிடையே, சவுந்தர்யாவின் கணவர் ரகு திடீரென ஒரு விளக்கம் தந்துள்ளார்.. அதில், "மோகன்பாவும், நாங்களும், குடும்ப நண்பர்கள்.. எங்களுக்கு மோகன் பாபுவுடன் நல்ல நட்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், சவுந்தர்யாவின் அந்த 6 ஏக்கர் நிலம் இப்போது மோகன்பாபுவிடம் உள்ளது. அந்த இடத்தை சவுந்தர்யாவிடம் கேட்டு மோகன் பாபு வாங்கினாரா? அல்லது நில தர மறுத்ததால் சதித்திட்டம் செய்யப்பட்டதா? சவுந்தர்யா மறைவுக்கு பிறகு அந்த சொத்தை மோகன் பாபு வாங்கினாரா? கணவர் ரகுவிடமிருந்து வாங்கினாரா? குறைந்த விலைக்கு வாங்கினாரா? அதே விலைக்கு வாங்கினாரா? என்று பல கேள்விகள் எழுகின்றன.
இரு குடும்பத்திலும் சொத்து தகராறு
ஏற்கனவே சவுந்தர்யா குடும்பத்தில் சவுந்தர்யாவின் சொத்துக்காக தகராறு நடந்துள்ளது.. அதேபோல, மோகன்பாபுவுக்கும் அவரது மகன் மனோஜ் பாபுவுக்கும் சொத்துக்காக தகராறு நடந்து கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், மனோஜ் பாபுவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று சிட்டிமல்லு, புகாரில் கூறியிருக்கிறார்.. அதாவது, மோகன்பாபு மீது குற்றச்சாட்டு வைத்துவிட்டு, அவரது மகனுக்கு நியாயம் கேட்டிருக்கிறார்.. ஏதோ சிட்டிமல்லு சொல்ல வருவதுபோல தெரிகிறது.. அது என்னவென்று தெளிவாக தெரியவில்லை.. அல்லது மனோஜ் பாபு சில உண்மைகளை சொல்ல வருகிறாரா? சில விஷயங்களை தன்னுடைய அப்பாவுக்கு எதிராக சொல்ல வருகிறாரா? இப்படி ஒரு குழப்பம் உள்ளது.
க்ளூ கிடைத்துள்ளதா?
அதாவது, தன்னுடைய அப்பாவுக்கு எதிராக மனோஜ்பாவுவே, சிட்டி மல்லுவுக்கு ஏதோ க்ளு கிடைத்தது போலவும், அதை வைத்து, சிட்டிமல்லு புகார் மனு கொடுத்தாகவும் சில பேச்சுக்களும் உள்ளன. எனவே, இவைகளை போலீஸ் விசாரிக்கணும்.
அதேபோல, ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் மோகன் பாபு உள்ளதால், அரசியல் காரணத்துக்காக இது சதியா என்றும் பார்க்க வேண்டியிருக்கிறது.. சமூகஆர்வலரான சிட்டிமல்லு, இத்தனை வருஷம் ஏன் இந்த சர்ச்சையை கிளப்பவில்லை? அரசியல் மாற்றம் நடந்ததும் இப்படியொரு புகார் செய்கிறாரா? என்றும் தெரியிவில்லை.. ஆனால் ஏதோ ஒரு உண்மை இதில் புதைந்துள்ளது. அதை தோண்டி எடுப்பதற்கான முயற்சியும் நடக்கிறது.. எனினும், மோகன் பாபு மிகவும் உச்ச நடிகர் என்பதால் விசாரிக்கப்படுவாரா தெரியவில்லை" என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications