SPB: பாசமுள்ள மனிதனப்பா எஸ்பிபி.. ஊரே கூடி வாழ்த்துது.. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் இன்று
சென்னை: இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 79வது பிறந்த நாளை இன்று நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.. இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.
ஒவ்வொரு இசைக்கலைஞன் மனதில் பிரிக்க முடியாத அளவுக்கு பதிந்து போயிருக்கிறார் எஸ்பி பாலசுப்பிரமணியம்.. 1969ல் முதல்முதலாக தமிழ் சினிமாவில் பாடிய பாடல் வெளியானது.. ஆரம்பம் முதலே தன்னுடைய சுத்தமான உச்சரிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் எஸ்பிபி..

சாதனை படைத்த எஸ்பிபி
தமிழ், கன்னடம். தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 16 இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 40000 பாடல்களை பாடியிருக்கிறார்... காதல், பாசம், அன்பு, நட்பு, பிரிவு, பாசம், ஏக்கம், கவலை, துக்கம், அழுகை, கோபம், ஆவேசம், வீரம், வெற்றி என ஒவ்வொரு மனித உணர்வும், அவரது குரல் வழியே வெளிப்பட்டதை கண்டு இந்தியாவே மலைத்தும், பூரித்தும் போயிருந்தது..
'ஆயிரம் நிலவே வா' என்று எம்ஜிஆருக்கும், 'பொட்டு வைத்த முகமோ' என்று சிவாஜிக்கும், இயற்கை எனும் இளையகன்னி' என்று ஜெமினி கணேசனுக்கும் என மூத்த கலைஞர்களுக்கு பாடி தன்னுடைய இசை பயணத்தை துவங்கி, அடுத்தடுத்த 4 தலைமுறைகள் வரை பாடி முடித்தார்..
புதிய இசையமைப்பாளர்கள்
புதிதாக அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் எஸ்பிபி போல ஊக்குவித்தவர்கள் யாரும் கிடையாது.... அவர்களது முதல் படத்தில் ஒரு பாடலை பாடி, அவர்களை வாழ்த்தும் குணம் எஸ்பிபிக்கு இருந்திருக்கிறது.
தன்னுடன் பாடிய சக கலைஞர்களுக்கு குரலில் மாற்றங்கள் தென்பட்டபோதும், எஸ்பிபி-க்கு மட்டும் கடைசிவரை குரலில் எந்த மாற்றமும் இருக்கவில்லை... அதே கணீர் குரலில் அவரது குரல் காணப்பட்டது..
எஸ்பிபி பாடாத இசையமைப்பாளர்களே கிடையாது.. அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய ஒரே பாடகர் எஸ்பிபி மட்டுமே. எஸ்பிபி பாடாத நடிகர்களே கிடையாது.. நடிப்பிலும் சாதனை படைத்தார்..
இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றார்.. கமல்ஹாசனின் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு பின்னணி கொடுத்த பெருமையும் எஸ்பிபிக்கு உண்டு.. குறிப்பாக, தசாவதாரம் படத்தில், கமல் போலவே அத்தனை குரல்களையும் தெலுங்கில் பேசி, ஆச்சரியத்தை தந்திருந்தார் எஸ்பிபி.
விருதுகள் - பாராட்டுகள்
மூத்த பாடகி, எஸ்.ஜானகியோடு முதல் பாடலாக கன்னிப்பெண் படத்தில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் என்ற முதல் பாடலை பாடி, அப்போது முதல் அவருடன் அதிக பாடலை பாடியவராக எஸ்பிபியே திகழ்கிறார்.
6 முறை தேசிய விருது, 4 முறை பிலிம்பேர் விருது, 25 முறை ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது ஆகியவற்றை பெற்ற ஒரே கலைஞன் எஸ்பிபி மட்டுமே என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
தனக்குதானே சிலை
ஆந்திர மாநிலம் நெல்லூரில் காஞ்சி சங்கர மடத்திற்கு வேத பாடசாலை தொடங்குவதற்காக தானமாக தந்திருந்தார் எஸ்பிபி.. இந்த இடத்தில் அவருடைய பெற்றோர்களின் சிலையை செய்ய சொல்லி, அதற்கான பணியை சிற்பி ராஜ்குமார் உடையாரிடம் ஒப்படைத்திருந்தார் எஸ்பிபி.
இந்த சிலை தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபோதே, சிற்பி ராஜ்குமாருக்கு எஸ்பிபி போனை போட்டு, தனக்கும் ஒரு சிலை செய்யுமாறு சொன்னாராம்.. ஒருவர் உயிருடன் இருக்கும்போது சிலைகளை வடிவமைத்து கொள்வதும், நிறுவி கொள்வதும் கிடையாது.. ஆனால், தான் திடகாத்திரமாகவே இருந்தும்கூட, தன்னுடைய சிலைக்கான ஆர்டர் தந்திருந்தார்.
ஒருவேளை, தன் மரணத்தை அவர் முன்கூட்டியே கணித்தாரா? என்று ரசிகர்கள் வியப்புடன் அப்போது கேள்விகளை எழுப்பியிருந்தனர்.. கடைசியாக கொரோனா விழிப்புணர்வுக்காக ஒரு பாடலைப் பாடிவிட்டுப் போனார்.. அத்துடன், எஸ்பிபியும் நம்மைவிட்டு பிரிந்தார்..
இன்று பிறந்தநாள்
இன்று எஸ்பிபியின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படங்கள், பாடல்கள் மற்றும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.. அத்துடன் வாழ்த்து மழையையும் பாடும் நிலா பாலுவுக்கு பொழிந்து கொண்டிருக்கிறார்கள்..
எஸ்பிபி நம்மை விட்டு பிரிந்தாலும், அவரது நினைவுகள் அவர் பாடிய பாடல்கள் தினம் தினம் திரைப்பட பாடல்கள் மூலம் நினைவூட்டி கொண்டிருக்கின்றன... அதேபோல, திருவண்ணாமலை முதல் சீரடி, திருப்பதி, மந்த்ராலயம் என்று பல கோவில்களில் பக்தி பாடல்களாக எஸ்பிபி குரலே தினம் தினம் ஒலித்து கொண்டிருக்கிறது..!!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications