சிவகார்த்திகேயனுக்கு ரூ.75 கோடி.. சந்தானத்தால் நெருங்க முடியாது! ராஜா ராணி சீக்ரெட் பாருங்க: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தமிழ் சினிமாவில் காமெடியனுக்கு பஞ்சம் இருக்கும்போது, சந்தானம் போன்றோர், காமெடி சேவையை மக்களுக்கு தொடர்ந்து செய்யணும். அப்படி செய்யும்போது, சந்தானம் அடுத்தக்கட்ட உச்சத்துக்கு செல்வார்" என்று பாலாஜி பிரபு தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்த சந்தானம், ஏகப்பட்ட காமெடி படங்களை தந்து கொண்டிருக்கும்போது, சிவகார்த்திகேயனும் விஜய் டிவியிலிருந்து திடீரென சினிமாவுக்கு உள்ளே வந்தார். இங்குதான் சிவகார்த்திகேயன் மீதான ஈகோ சந்தானத்துக்கு ஏற்படுகிறது.

Television Sivakarthikeyan Santhanam

சந்தானத்தை பொறுத்தவரை, மற்ற ஹீரோக்கள் போல டான்ஸ், ஃபைட், டூயட் இது எதுவுமே இவர்களால் செய்ய முடியாது.. இது ஒரு மைனஸான விஷயமாகும்.. இதெல்லாம் தெரிந்தும் நடிக்க வந்து, தங்களது மார்க்கெட்டையே அழித்து கொள்கிறார்கள். அப்படித்தான் சந்தானத்தின் மார்க்கெட்டும் இறங்கிவிட்டது.

காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பது நல்லது கிடையாது.. அதிலும், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஹன்சிகாவுடன் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ள நிலையில், சந்தானத்துடன் இவர்கள் எல்லாம் ஜோடியாக நடிக்க மாட்டார்கள். அதனால்தான் சந்தானம், மும்பையிலிருந்து ஹீரோயின்களை அழைத்து வருகிறார். படத்தில் நல்ல ஹீரோயின்கள் இல்லாததும் சந்தானத்துக்கு மற்றொரு மைனஸ்தான்.

விடுதலை படம் - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் வளர்ந்துவிட்டார் என்றால், இதுபோல ஒருசிலருக்குதான் இப்படி லக் அமையும்.. ஆனாலும், சிவகார்த்திகேயன் சினிமாவில் அதே இடத்தை தக்கவைப்பாரா என்பது அவரது வரப்போகும் படங்கள்தான் அதை தீர்மானிக்கும். எனினும், எந்த காலத்திலும் சிவகார்த்திகேயனிடம் சந்தானத்தால் நெருங்கவே முடியாது. சிவகார்த்திகேயன் வேறு ஒரு உயரத்துக்கு போய்விட்டார்.

சூரி ஹீரோவாக நடிக்கிறார் என்றால், அவரை யாருமே இதுவரை காமெடியனாக பார்த்ததில்லை.. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அவரை பார்க்கிறார்கள்.. இதுவே சந்தானம் "விடுதலை" போன்ற படங்களில் நடிக்க முடியுமா? ஏனென்றால் சந்தானம் காமெடி ஹீரோ. கவுண்டமணியாலும் "விடுதலை" படங்களில் நடிக்க முடியாது. "மண்டேலா" படத்தில் யோகிபாபு நடித்திருந்தார்.. அது அவருக்கு சூப்பராக பொருந்தியது. அதாவது சிலருக்குதான் சில கேரக்டர்கள் பொருந்தும்.
வயிற்றெரிச்சல் - பொறாமை

சிவகார்த்திகேயனுக்கு இந்த அளவுக்கு உச்சப்புகழ் கிடைத்துள்ளது, சினிமாவில் எல்லாருக்குமே கண்ணை உறுத்தத்தான் செய்யுது.. வாரிசு நடிகரான அருண் விஜய், 35 வருடமாக சினிமாவில் போராடி கொண்டிருக்கிறார்.. இப்போதுதான் ஹீரோவா தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். ஒருமுறை தன்னுடைய ட்வீட்டில், "யார் யார் மாஸ் காட்டுறதுன்னே விவஸ்தை இல்லையா?"ன்னு போட்டிருந்தார்.

சிவகார்த்திகேயன் 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய அளவுக்கு வந்துவிட்டார் என்றாலும், அருண் விஜய்யால் அந்த உயரத்தை தொட முடியவிலலை. சிவகார்த்திகேயன் உயரத்தை பல ஹீரோக்களால் தொட முடியவில்லை. மற்ற ஹீரோக்களை போல, சந்தானத்துக்கும் ஈகோ உள்ளது.. அதை ஈகோ என்பதா? கோபம் என்பதா? வெறுப்பு என்பதா? சொல்ல தெரியல., ஆனால், ஏதோ ஒரு உணர்வு நெகட்டிவ்வாக உள்ளது.

ராஜா ராணி படத்தில் சிவகார்த்திகேயன்

ராஜா ராணி படத்தில் ஜெய் கேரக்டரில் சிவகார்த்திகேயன்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தில் காமெடி வேண்டும் என்று சொல்லவும் சந்தானம் அந்த படத்தில் கமிட் செய்யப்பட்டார்.. அப்போது சந்தானம், சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தால், தான் காமெடி செய்ய மாட்டேன் என்றாராம். அன்று சந்தானம் பீக்கில் இருந்ததால், அவரது பேச்சு எடுபட்டது. இறுதியில் ஜெய் அந்த படத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.

அதேபோல, ஒரு சினிமா விருது நிகழ்ச்சியில், காமெடி நடிகராக சந்தானமும், ஹீரோவாக சிவகார்த்திகேயனும் அறிவிக்கப்பட இருந்தது. இதைக்கேள்விப்பட்ட சந்தானம், அந்த நிகழ்ச்சிக்கே வரமுடியாது என்றாராம். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதுக்காக 2 பேரும் அடிதடி செய்து கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இதெல்லாம் மனித இயல்புதான்.. யதார்த்தமான எண்ணம்தானே தவிர தப்பு கிடையாது.

காமெடி சேவை தொடரணும்

காமெடி ஹீரோவாக சந்தானம் தொடர்ந்து நடிக்கட்டும்.. ஆனால் ஹீரோக்களுடனும் அவர் நடிக்கணும். காரணம், ஒரு நல்ல நடிகன் தன்னுடைய அடையாளத்தை முழுமையாக காட்டாமல் போய்விடக்கூடாது.. அவரது டைமிங் காமெடி, முழு காமெடி பல வருடத்துக்கு சினிமாவுக்கு தேவைப்படுகிறது..

இன்று சினிமாவில் காமெடியனுக்கு பஞ்சம் இருக்கும்போது, சந்தானம் போன்றோர், காமெடி சேவையை மக்களுக்கு தொடர்ந்து செயயணும். அப்படி செய்யும்போது, அவர் அடுத்தக்கட்ட உச்சத்துக்கு செல்வார்" என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+