சூப்பர் ஹீரோ முத்துராமனிடம் கிறங்கிய பாலிவுட்.. எம்ஜிஆர் ரூட்.. ஊட்டி தெருவில் முத்துராமன்: பிரபலம்
சென்னை: உயிர் என்ற படத்தில் முத்துராமனின் நடிப்பு அபாரமானது.. அந்த படத்தில் அவரால் எப்படி அப்படியெல்லாம் நடிக்க முடிந்தது? இன்னொரு முறை உயிர் படத்தை, எடுக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.. அப்படியொரு நடிப்பாற்றலை அதில் வெளிப்படுத்தியிருப்பார். உயரத்துக்கு சென்றிருக்க வேண்டிய நடிகர் முத்துராமன் என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
Whistle Plus என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "முத்துராமனுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்திலேயே, தமிழ் சினிமாவில் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், அந்த இடத்தை முத்துராமன் தக்க வைத்து கொள்ள முடியவில்லை.. முத்துராமன் சினிமாவில் மிக உயர்ந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர்.. சிவக்குமாரும் அப்படித்தான்.. உச்சத்தை எட்டிபிடித்திருக்க வேண்டியவர்கள்... ஆனால், இருவருமே அதை மிஸ் பண்ணிவிட்டார்கள்.

ஒன் மேன் ஷோ - முத்துராமன்
"உயிர்" என்று ஒரு படம் வந்தது.. அதில் முத்துராமன் நடிப்பில் தனிநபராக கலக்கியிருப்பார்.. படம் முழுக்க ஒன் மேன் ஷோ.. ஒன்றரை மணி நேரமும் ஒரே நபர்தான் நடித்தார்.. படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை, வேற எந்த கேரக்டரும் அந்த படத்தில் இல்லை.. 90 நிமிஷம் ஒன்மேன் ஷோ.. முத்துராமனை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி ஏஎஸ் பிரகாசம் தைரியமாக எடுத்த படம்..
அதேபோல, நிலவே நீ சாட்சி என்ற படத்தில் ஜெய்சங்கருடன் சேர்ந்து நடித்தார் முத்துராமன்.. அதிலும் அற்புதமான நடிப்பு.. அந்த படத்தில் அத்தனை உணர்ச்சிகளையும் எப்படி முத்துராமனால் தர முடிந்தது என்பது இன்றுவரை ஆச்சரியமாக உள்ள விஷயம்.. அதில் ஓரளவு அவரது மகன் கார்த்திக்குக்கும் உள்ளது..
வெளிநாட்டுக்காரர்கள் மத்தியில் முத்துராமனுக்கு எப்போதும் நல்ல பெயர் இருந்தது.. முத்துராமனை அத்தனை வெளிநாட்டினருக்கும் அப்போது பிடிக்கும்.. ஆனாலும் ரொமான்டிக் ஹீரோவாக முத்துராமனால் வரமுடியவில்லை.
எம்ஜிஆர் கையிலெடுத்த டெக்னிக்
ஹாலிவுட்டில் எப்போதுமே , மார்லன் பிராண்டோ ஹீரோவாக நடித்தால், கார்ல் மாடல் என்ற நபரை உடன் நடிக்க வைப்பார்.. காரணம், ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும் மார்லன் பிராண்டோ நடிக்கும்போது, கார்ல் மாடல் அமைதியான கேரக்டரில் நடிப்பார்.. அப்போதுதான், மார்லன் பிராண்டோவின் நடிப்பு சற்று மேலோங்கி தெரியும். இதனால் ஹீரோவுக்கு கூடுதல் மவுசு ஏற்படும்.
இதே பாணியைதான் எம்ஜிஆரும் இங்கே பின்பற்றினார்.. இரண்டாவது நாயகனாக முத்துராமனை தேர்ந்தெடுத்தார்.. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.. எப்போதுமே முத்துராமன் ஹீரோக்களை டாமினேட் செய்ய மாட்டார். இது எம்ஜிஆருக்கு சேஃப்பாக இருந்தது. முத்துராமனை எம்ஜிஆருக்கு மிகவும் பிடிக்கும்..
சூரியகாந்தி - ஜெயலலிதா
இதே டெக்னிக்கைதான் ஜெயலலிதாவும் கையில் எடுத்தார்.. சூரியகாந்தி போன்ற படங்களில் முத்துராமனை ஹீரோவாக போட காரணமே, ஜெயலலிதா டாமினேட் செய்ய வேண்டும் என்பதால்தான்.. டைட்டிலில்கூட முத்துராமன் பெயர் பின்னாடிதான் வந்தது.. இதையெல்லாமே முத்துராமன் பெரிதுபடுத்தவில்லை. தன்னுடைய பெயர், இமேஜ் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை.
"சிவாஜி கணேசன் மற்றும் தமிழகத்தின் பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும்" என்றுகூட டைட்டில்கள் வந்ததுண்டு. சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் படங்கள் எல்லாம் நாகேஷூக்கான படம் என்றாலும், அவைகளில் முத்துராமன் பங்கேற்றிருந்தார்..
ஊட்டி குளிரில் ஜாக்கிங் செய்த முத்துராமன்
சங்கர் லால் என்ற படத்தின் ஷூட்டிங் நடந்தபோது அதில் நடிப்பதற்காக முத்துராமன் ஊட்டிக்கு சென்றிருந்தார்.. அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் பிரச்சனை இருந்துள்ளது.. எப்போதுமே மலைப்பிரதேசங்களில் ஆக்ஸிஜன் அடர்த்தி குறைவாக இருக்கும். எனவே, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால், முத்துராமன் ஊட்டிக்கு சென்றதுடன், ஷாட்ஸ் அணிந்து கொண்டு, ஜாக்கிங்கும் குளிரில் சென்றுள்ளார்.. அப்போதுதான் மாரடைப்பு வந்துளளது.. யாரோ கீழே விழுந்து கிடக்கிறாரே என்று கமல் யதேச்சையாக சென்று பார்த்தபோதுதான், அது முத்துராமன் என்றே தெரியவந்துள்ளது. பிறகு அவர்தான் பெட்டிக்கு ஏற்பாடு செய்து, சடலத்தை சென்னை கொண்டு வர ஏற்பாடு செய்தார்.
எனினும், மருத்துவர்கள் மலைப்பிரதேசங்களுக்கு செல்வது குறித்து, முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும். முத்துராமனும் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications