Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடைஞ்சி போயிட்டாரு கவுண்டமணி.. சரசரன்னு பணத்தை எண்ணுவாராம் சாந்தி.. சூப்பர் ஸ்மார்ட் நடிகர்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுண்டமணி மனைவி சாந்தியின் மறைவுக்கு திரையுலகிலிருந்து நிறைய பேர் அஞ்சலி செலுத்த வரவில்லை... அன்று பிரபலமானவராக இருந்தாலும், இன்று பிரபலமாக இல்லாவிட்டால், யாருமே அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வரமாட்டார்கள். இது சினிமா துறைக்கே உள்ள சாபம்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வேதனையுடன் கூறியிருக்கிறார்.

Aagayam Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ஒரு காலத்தில், எல்லா நடிகர்களுக்கும் கவுண்டமணியின் உதவி தேவைப்பட்டது.. ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், சரத்குமார் எல்லாருக்குமே கவுண்டமணி உதவி தேவைப்பட்டது. கவுண்டமணி இல்லாமல் படம் இல்லை, அவர் இருந்தால்தான் படம் வியாபாரமாகும் நிலைமை அன்று இருந்தது.

Television Goundamani Shanthi

மிகப்பெரிய புத்திசாலி

சினிமா துறையில் மிகப்பெரிய ஆளுமை கவுண்டமணி.. காமெடியில் சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும்.. ஆனால், கவுண்டமணி மிகப்பெரிய புத்திசாலி, அறிவாளி.. இது நிறைய பேருக்கு தெரியாது..

ஆங்கில படங்கள் உட்பட உலக படங்களை அதிகமாக பார்ப்பவர்.. டைரக்டர்கள் யாராவது வெளிநாட்டு படங்களிலிருந்து, ஏதாவது ஒரு சீனை உருவி காப்பி அடித்தால், உடனே அது எந்த படத்திலிருந்து உருவப்பட்டது என்பது முதல் அனைத்தையும் கண்டுபிடித்து அந்த டைரக்டரிடமே கிண்டலாக சொல்லிவிடுவார் கவுண்டமணி.

டைமிங்கில் கமெண்ட்

நாடக காலத்திலிருந்து நடித்து, பல அவமானங்கள், கஷ்டங்களை அனுபவித்து வந்தவர்.. நாடகத்தில் தன்னுடன் இணைந்து நடித்து சாந்தியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். லேட் மேரேஜ், அதாவது 1979-ல்தான் திருமணம் நடந்துள்ளது.. திருமணத்துக்கு பிறகுதான், பெரிய பெரிய படங்கள் அவருக்கு கிடைத்தன.

கவுண்டமணி கரடுமுரடானவர் என்று பலரும் சொல்வார்கள். ஆனால், அவரிடம் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே பலாப்பழம் போல இனிமையானவர் என்று தெரியும்.. அவரது கமெண்ட்கூட, அறிவார்த்தமாக இருக்கும்.. டைமிங்கில் கமெண்ட் அடிக்கக்கூடியவர்..

படு ஸ்மார்ட் சாந்தி

மனைவியை உயிருக்கு உயிராக நேசித்தவர் கவுண்டமணி. மனைவி சாந்தி காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்.. அந்த காலத்திலேயே பியூசி படித்தவர்.. வீட்டு நிர்வாகத்தை அப்போதிருந்தே சிறப்பாக நடத்தியவர்.. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், தயாரிப்பாளர்கள் கவுண்டமணி வீட்டுக்கு சென்று 5 லட்சம் ரூபாய் படத்துக்கு அட்வான்ஸ் தருகிறார்கள் என்றால், கையாலேயே 15 நிமிஷத்தில் 5 லட்சத்தையும் சரசரவென எண்ணி முடித்துவிடுவாராம் சாந்தி..

அந்த காலத்தில், பணம் எண்ணும் மிஷின் இல்லாமலேயே, அவ்வளவு பணத்தையும் எண்ணும் அளவுக்கு படு ஸ்மார்ட்.. மிகவும் எளிமையானவர் சாந்தி.. அதிக கடவுள் பக்தி கொண்டவர்.. எல்லையம்மன் கோயிலுக்கு வெள்ளி, செவ்வாய்களில் செல்லக்கூடியவர்..

கவுண்டமணி கார் பிரியராக இருந்ததால், ஏழெட்டு கார்களை வீட்டிலேயே வைத்திருப்பார்.. ஆனால், இத்தனை கார் வைத்திருந்தாலும் அவரது மனைவி, கோவிலுக்கு, மார்க்கெட் போவதாக இருந்தால், ஆட்டோவில் கேஷூவலாக போய்விட்டு வருவார். அந்த அளவுக்கு எளிமையானவர்.

ரஜினிகாந்த், ஆர்.கே. செல்வமணி

இறந்தபோதுதான் சாந்தியின் போட்டோவே மீடியாவில் வெளியானது..இதற்கு காரணம் தொழில் வேறு, குடும்பம் வேறு என்ற பிரித்து வைத்திருந்தவர்.. சினிமா பிரபலங்கள் என்றாலும் ஒருசிலர் மட்டுமே அவருடைய வீட்டுக்கு செல்ல அனுமதி உண்டு. காமெடி நடிகர்களிலேயே, அந்த காலத்தில், பல கோடிகள் செலவழித்து, சொந்தமாக ஆபீஸ் வைத்து கொண்டிருந்தது கவுண்டமணி மட்டுமே.. தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் யாராக இருந்தாலும், இந்த ஆபீசுக்குதான் அவர்களை வர சொல்வார்..

கவுண்டமணியின் வாழ்க்கையில் அஸ்திவாரமே மனைவி சாந்திதான்.. மனைவியின் பேச்சை கேட்டு, மனைவிக்கு அதிக மரியாதை தரக்கூடியவர்களில் ரஜினிகாந்த், ஆர்கே செல்வமணி, கவுண்டமணியை சொல்லலாம்..

உச்சக்கட்ட வேதனையில் கவுண்டமணி

இப்போது சாந்தியின் மறைவு கவுண்டமணிக்கு மிகவும் பாதிப்பை தந்துவிட்டது.. 3 வருடங்களுக்கு முன்பே உடல்நிலையில் சாந்திக்கு பிரச்சனை வந்தது.. கோமாவுக்கு முந்தைய நிலைமைக்கு ஆளானார்.. வீல் சேரில் வைத்துதான் அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளனர்.. அப்போதிருந்தே கவுண்டமணி வேதனையில் இருந்துள்ளார்..

இப்போது சாந்தியின் இறப்பு அவரை மிகவும் பாதித்துவிட்டது.. ஆனால், நிறைய பேர், அஞ்சலி செலுத்த வரவில்லை... அன்று பிரபலமானவராக இருந்தாலும், இன்று பிரபலமாக இல்லாவிட்டால், யாருமே அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வரமாட்டார்கள். இது சினிமா துறைக்கே உள்ள சாபம்" என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+