Tamil Selvi Serial: படியில் எண்ணெய் ஊத்தறது... பாசி மணி ஊசி மணி சிதற விடுவது..முடியலடா சாமி!
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியல் ஆரம்பம் கை தட்டும்படி இருந்தது. பெண் கல்வி, பணக்கார விவசாய குடும்பம், கிராமத்து சூழல் என்று காண்பித்ததால், சந்தோஷமாகவே இருந்தது.
போகப்போகக் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, பெண் கல்வி சாதாரணமாக போய்க்கொண்டு இருக்கிறது. விவசாய குடும்பத்தில் ஒரு விவசாயிக்கு படித்த பெண் கிடைத்தால், சாதிக்க முடியாது என்கிற தாழ்வு மனப்பான்மையை விவசாயி மனதில் வைத்து மாபெரும் தவறு செய்து விட்டார்கள்.
வியவசாயி விதைத்த உணவை அனைத்து படித்தவர்களும் உண்ணும்போது, விவசாயிக்கு படித்த பெண் மனைவியாக வர கூடாதா? இதைத் தகர்த்து எரியும்படி ஒரு கதை வேணாமா?

சரவணன் தமிழ்ச்செல்வி
படித்த தமிழ்ச் செல்விக்கு படிக்காத முறை மாமன்தான் புருஷன்னு சொல்லி வளர்த்து, கடைசியில், தமிழ்ச்செல்வியை ஒரு தலையாக காதலிச்ச அமுதனுக்கு சரவணன் நான் படிக்காதவன் தமிழ்ச்செல்விக்கு சரி வராதுன்னு முடிவு பண்ணிடறான்.உயிர் போகும் தருவாயில் அமுதனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறான் என்று காண்பிக்கிறார்கள்.

ஆஸ்பத்திரிக்கு போகாமல்
சாதாரண கத்திக் குத்து..இதுக்கு ஆஸ்பத்திரிக்கு உடனே தூக்கிகிட்டு ஓடாமல் சரவணன் தமிழ்ச்செல்விக்கு அமுதனுடன் கல்யாணம் ஆவதைப்பார்த்துட்டுத்தான் ஆஸ்பத்திரிக்கு வருவேன்னு சொல்லி அடம் பிடிக்கிறான். சுத்தி இருப்பவர்களும் சும்மா இருக்கிறார்கள்.. என்னங்க கதை எழுதறீங்க...

அமுதன் தமிழ்ச்செல்வி
கடைசியில் சரவணன் ஆசைப்பட்டபடியே தமிழ்ச்செல்விக்கும், அமுதனுக்கும் கல்யாண மண்டபடத்த்தில் கல்யாணம் நடக்குது. அதுவரைக்கும் சரவணன் வலியுடன் துடிச்சுக்கிட்டு இருக்கான். இது எதில் சேர்த்தி? மனிதாபிமானம் எங்கு போச்சு?

ஜாதகம் பிரச்சனை
இந்த லட்சணத்தில் ஜாதகத்தில் தமிழ்ச்செல்விக்கும், அமுதனுக்கும் பிரச்சனை இருக்குதாம், ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து குழந்தை பிறந்தால் பிறக்கும் குழந்தையால் அமுதன் உயிருக்கு ஆபத்தாம், இனிமேல் என்ன, ஏற்கனவே தமிழ்ச்செல்வி அந்த வீட்டுக்கு பிடிக்காத மருமகள், முதலிரவு நடக்காம பார்த்துக்கறது மாமியார் வேலை.
இதுக்கு நடுவில் நாத்தனார்,அண்ணியை எதிரியாக நினைச்சு அவள் கோயிலுக்கு போக கூடாது என்று பாசி மணி ஊசி மணி எல்லாத்தையும் மாடிப் படியில உருட்டி விடுகிறாள்.
காலம் காலமாக இதுதான் நடக்குது என்னத்தை சொல்ல?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications